இந்திய சந்தைகளில் தங்கம் விலை புதிய உச்சங்களைத் தொட்டு, வரலாறு காணாத அளவில் நிலையாக நீடித்து வருகிறது. ஒரு சவரன் தங்கத்தின் விலை பல புதிய உச்சங்களை தாண்டி சென்றுள்ள நிலையில், ஒரு புறம் மக்களை பதற்றமடைய வைத்தாலும், மறுபுறம் முதலீட்டாளர்களுக்கு இது ஒரு பாதுகாப்பான புகலிடமாகவே பார்க்கப்படுகிறது. உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழல், புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் மத்திய வங்கிகளின் கொள்கை மாற்றங்கள் ஆகியவை இந்தியாவில் தங்கம் விலை உயர்வுக்கு முக்கிய காரணிகளாக உள்ளன.
இந்தியாவில் பாரம்பரியமாகவும், மிகவும் பாதுகாப்பான முதலீடாகவும் கருதப்படும் தங்கம், கடந்த 5 ஆண்டுகளில் ஒரு பேரழிவு தரும் முதலீடாக மாறிவிட்டதாக பிரொபஷனல் கேப்பிடல் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியான ஆண்டனி போம்ப்லியானோ (Anthony Pompliano) கூறி, முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளார்.

போம்ப்லியானோ வழங்கிய தரவுகளின்படி, கடந்த 2020 ஆம் ஆண்டில் இருந்து ஒப்பிடுகையில், தங்கமானது பிட்காயினுக்கு எதிராக அதன் வாங்கும் சக்தியில் சுமார் 84% வரை இழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது, சமீபத்திய ஆண்டுகளில் பாரம்பரியமாக கருதப்படும் தங்கத்தை விட பிட்காயின் மிக அதிக லாபத்தை கொடுத்துள்ளது.
அமெரிக்க முதலீட்டாளரான போம்ப்லியானோ வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், பிட்காயினுக்கு எதிராக தங்கத்தின் சரிவு குறித்து விளக்கியுள்ளார். டாலர் மதிப்பில் தங்கம் நிலையாக இருந்தாலும், பிட்காயின் அடிப்படையில் அதன் மதிப்பு கிட்டத்தட்ட சரிந்துவிட்டதாக அவர் தெரிவித்தார். 2020ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், இன்று ஒரு பிட்காயின் மூலம் 16 மடங்கு அதிக தங்கத்தை வாங்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது தங்கம் அதன் வரலாற்றிலேயே முதல் முறையாக அவுன்ஸ் ஒன்றுக்கு 4,192 அமெரிக்க டாலர் என்ற சாதனை உச்சத்தை தொட்டிருக்கும் நிலையில், போம்ப்லியானோவின் இந்த கருத்து பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. முதலீட்டாளர்களும், நிதி நிபுணர்களும் அவரது கூற்றை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
இதுதொடர்பாக எக்ஸ் வலைதளத்தில், கோல்பி ஸ்மித் என்பவர், "தரவுகளை நீங்கள் போதுமான அளவு சிதைத்தால், நீங்கள் விரும்பும் எதையும் அது வெளிப்படுத்தும்" என்று கிண்டலாக பதில் அளித்துள்ளார். மற்றொரு பயனர், "நீங்கள் தேர்ந்தெடுத்த காலக்கெடுவில் BTC-ஐ போலத் தங்கம் சிறப்பாகச் செயல்படவில்லை. ஆனால், தங்கம் பேரழிவு அல்ல. இது வேண்டுமென்றே தவறாக வழிநடத்தும் முயற்சி போலத் தோன்றுகிறது" என்று குறிப்பிட்டார்.
பிரபல அமெரிக்க பங்குத் தரகர் பீட்டர் ஷிஃப் கூறுகையில், "2020ஆம் ஆண்டு முதல் செய்யப்பட்ட மற்ற அனைத்து முதலீடுகளுமே பேரழிவுதான். பிட்காயினுக்கு எதிராக குறைந்திருந்தாலும், ரியல் எஸ்டேட்டை விட தங்கம் சிறப்பாக செயல்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

தங்கம் இந்த லெவலுக்கு வந்தால் மட்டும் வாங்குங்க.. முதலீட்டாளர்களுக்கு பொருளாதார நிபுணர்கள் முக்கிய அட்வைஸ்..!

சூப்பர்பவர் ஆக மாறிய தங்கம்.. ஈரான் போருக்கு மத்தியில் பூகம்பம்..!!

கோயம்புத்தூர்: தங்கம் விலை இன்று அதிரடி உயர்வு.. இனி தொடர்ந்து உயருமா..?

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

மீண்டும் உயரும் தங்கம், வெள்ளி விலை: முதலீடு செய்ய இது உகந்த தருணமா? எவ்வளவு முதலீடு செய்யலாம்?

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்.. மத்திய கிழக்கு போர் பதற்றம் செய்யும் அட்டகாசம்..!!



Click it and Unblock the Notifications