ஈரான் போர் தான் உலகம் முழுவதும் பேசு பொருளாக இருக்கிறது. ஈரான் போரால் பல நாடுகளிலும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸில் லாக்டவுன் போன்ற சூழலே அறிவிக்கப்பட்டு விட்டது. ஈரான் போர் இனி பல்வேறு பொருட்களின் விலையை உயர்த்தப் போகிறது என்ற அச்சமும் நிலவுகிறது.
உலக மக்களுக்கு ஈரான் போரால் நிகழ்ந்த ஒரே நன்மை தங்கம் விலை குறைந்தது தான். போர் காரணமாக முதலீட்டாளர்கள் கவனம் கச்சா எண்ணெய், டாலர் பக்கம் திரும்பியதால் தங்கம் விலை குறைந்தது. ஆனால் தங்கம் விலை குறைந்ததற்கு ஈரான் போர் மட்டுமே காரணமில்லை என தெரிய வந்துள்ளது.

ரஷ்யா தங்கள் கை வசம் இருக்கும் தங்கத்தை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய தொடங்கியுள்ளது. மாஸ்கோ டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியின் படி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக ரஷ்யா தன்னுடைய கையிருப்பில் இருக்கக்கூடிய தங்கத்தை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய தொடங்கி இருக்கிறதாம். இந்த ஆண்டில் மட்டும் முதல் இரண்டு மாதங்களில் ரஷ்யா 15 மெட்ரிக் டன் தங்கத்தை விற்பனை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
உலக தங்க கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியிருக்கிறதாம். அதாவது ஜனவரி மாதத்தில் மட்டும் ரஷ்யா மத்திய வங்கி 3 லட்சம் டிராய் அவுன்ஸ் தங்கத்தை விற்பனை செய்திருக்கிறது பிப்ரவரி மாதத்தில் இது 2 லட்சம் டிராய அவுன்ஸாக இருந்திருக்கிறது. இதன் மூலம் ரஷ்யா வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் கையிருப்பு தற்போது 74.3 மில்லியன் டிராய் அவுன்ஸ்களாக குறைந்து இருக்கிறது. 2022 மார்ச்சுக்கு பிறகு ரஷ்யா வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் இருப்பு இந்த அளவு குறைவது இதுவே முதன்முறையாகும்.

உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இது ரஷ்யாவுக்கு பெரிய அளவிலான நிதி நெருக்கடியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிதி நெருக்கடியை சமாளிக்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு ரஷ்யா குறைந்த விலையில் கச்சா எண்ணெய் உள்ளிட்டவற்றை விற்பனை செய்து வந்தது. ஆனால் நடுவில் அமெரிக்கா அதற்கும் கடிவாளம் போட்டது. இந்தியா ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதை நிறுத்தியது.
இந்த சூழலில் தான் வேறு வழியே இல்லாமல் ரஷ்யா தங்கள் கைவசம் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்து நாட்டின் பட்ஜெட் பற்றாக்குறையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது. ரஷ்யாவின் பட்ஜெட் பற்றாக்குறை 183 பில்லியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. இந்த சூழலில் தான் நிலைமையை சரி செய்ய முதல் கட்டமாக தங்கள் கைவசம் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்வது என ரஷ்யா முடிவு செய்திருக்கிறது.
பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் தங்கத்தை வாங்கி கையிருப்பு வைக்கும் சூழலில் ரஷ்யா மற்றும் தங்கள் கைவசம் இருக்கும் தங்கத்தை விற்பனை செய்ய தொடங்கி இருக்கிறது. இது தொடரும் பட்சத்தில் சர்வதேச சந்தையில் தங்கத்தின் சப்ளை அதிகரித்து விலை குறைய வாய்ப்புள்ளது.
More From GoodReturns

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: தள்ளுபடிகளை வாரி வழங்கும் நகை கடைகள்!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

ஈரான் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படுமா? அமெரிக்க அரசு வெளியிட்ட முக்கிய அப்டேட்!!

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

மதுரையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold price today: தங்கம் வாங்க கடைக்கு போறீங்களா? சென்னை, கோவை, மதுரையில் ஷாக் கொடுக்கும் நிலவரம்?

அட்சய திருதியை தங்கம் விற்பனை: மக்களே இத கவனிக்கலனா உங்க தலையில துண்டு!!

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

தங்கம் விலை அதிரடி உயர்வு!! அட்சய திருதியைக்கு 5 நாட்களே இருக்கும் நிலையில் திடீர் விலை ஏற்றம்!!

அமெரிக்காவை எச்சரிக்கும் ஈரான்: போர் நிறுத்தம் நீடிக்குமா? மீண்டும் பேச்சுவார்த்தை நடக்குமா?



Click it and Unblock the Notifications