தங்கம் விலை அதிகரிப்பால் இப்படி ஒரு நல்ல விஷயமும் இருக்கா.?

Gold Price: தொடர்ந்து தங்கம் விலையானது நடப்பு ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பார்க்கும்போது, புதிய உச்சத்தினை எட்டி வருகின்றது. வெள்ளி விலையும் தொடர்ந்து உச்சத்தினை எட்டி வருகின்றது.

தொடர்ந்து டாலரின் மதிப்பானது மீண்டும் உச்சத்தில் இருந்து வரும் நிலையில், தங்கம் விலையானது அவுன்ஸூக்கு 1900 டாலர்கள் என்ற லெவலில் காணப்படுகின்றது.

தொடர்ந்து அதிகரித்து வரும் தங்கம் விலையானது தங்க கடனுக்கு நேர்மறையான ஒரு விஷயமாகவும் பார்க்கப்படுகிறது. இது தங்கம் விலையினை ஊக்குவிப்பதால் தங்க கடன் மதிப்பினையும் அதிகரிக்க வழிவகுக்கிறது.

தங்க கடன் அதிகரிப்பு

தங்க கடன் அதிகரிப்பு


மோதிலால் ஆஸ்வால் நிறுவனம் தங்கம் விலையானது அதிகரித்து வரும் சூழலில், கடந்த மூன்று மாதங்களில் தங்க கடனை அதிகளவில் எடுக்க வழிவகுத்துள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளது. நகைக்கடன் தேவையானது அதிகரிக்க வழிவகுத்துள்ளது.

இந்திய ப்யூச்சர் கமாடிட்டி சந்தையில் தங்கம் விலையானது சற்று அதிகரித்து, 10 கிராமுக்கு 56,449 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது அதன் இன்றைய உச்சமான 56,460 ரூபாய்க்கு அருகிலேயே காணப்படுகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

தங்கத்தினை போல வெள்ளி விலையும் அதிகரிக்க காரணமாக அமைந்துள்ளது. வெள்ளி விலையும் இன்ட்ராடே உச்சமான 69,669 ரூபாயினை எட்டடியுள்ளது. இதே தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் அவுன்ஸூக்கு 1916 டாலர்களை எட்டியுள்ளது.

இது தற்போது பணவீக்கம் என்பது மெதுவாக தொடங்கியுள்ள நிலையில், தங்கத்தின் தேவையானது குறையத் தொடங்கியுள்ளது. இது மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தினை அதிகரிப்பதை மெதுவாக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறந்த ஹெட்ஜிங்

சிறந்த ஹெட்ஜிங்

பணவீக்க அழுத்தத்தின் மத்தியில் டாலரின் மதிப்பானது இரண்டு தசாப்தங்களில் இல்லாத அளவுக்கு உச்சத்தினை எட்டியுள்ளது. இதற்கிடையில் பாதுகாப்பு புகலிடமான தங்கம் விலை, சர்வதேச பொருளாதாரத்தின் மத்தியில் சிறந்த ஹெட்ஜிங் ஆகவும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் அதிகரிப்பு

கடன் அதிகரிப்பு

இவ்வாறு பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் தொடர்ந்து தங்கம் விலையானது உச்சத்தில் இருந்து வருகின்றது. இதன் காரணமாக தங்கத்திற்கு எதிரான கடன் விகிதமும் அதிகரித்துள்ளதாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

நகைக்கடன்

நகைக்கடன்

தென் இந்தியாவினை பொறுத்த வரையில் நகைக்கடன் வழங்குவதில் பிரபலமான நிதி நிறுவனம் முத்தூட் பைனான்ஸ் ஆகும். தங்கத்தின் விலை உயர்வானது தங்க கடன் தேவையை அதிகரிக்க வழிவகுத்தது மற்றும் தங்க ஏலத்தில் குறிப்பிடத்தக்க சரிவுக்கும் வழிவகுக்கிறது.

இனியும் வளர்ச்சி அதிகரிக்கலாம்

இனியும் வளர்ச்சி அதிகரிக்கலாம்

முத்தூட் பைனான்ஸ் மற்றும் மணப்புரம் பைனான்ஸ் என இரண்டும் ஜனவரி 2023ல் தங்களுடைய நகைக்கடனில் எந்த மாற்றமும் செய்யவில்லை. எதிர்பார்ப்பினை தாண்டி குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருந்தது. அடுத்த இரு காலாண்டுகளுக்கும் அதிகரிப்பு இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடன் செலவுகளும் 2024ம் நிதியாண்டில் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பரிந்துரை

பரிந்துரை

ஒட்டுமொத்த தரகு நிறுவனங்களும் நடப்பு ஆண்டில் தங்கம் விலை அதிகரிக்கலாம் என கூறி வருகின்றன. சர்வதேச பொருளாதாரம் குறித்தான குறிகாட்டிகள் என்பது விரிவடைந்து வருகின்றது. இதற்கிடையில் முத்தூர்ட் நிறுவனத்தின் இலக்கு விலை 1150 ரூபாயாகவும், இதே மணப்புரம் நிறுவனத்தின் இலக்கு விலை 150 ரூபாயாகவும் இலக்கு நிர்ணயம் செய்துள்ளனர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+