மத்திய அரசு வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களை கட்டாய ஹால்மார்கிங் விதியின் கீழ் கொண்டு வருவதற்கான திட்டத்தை ஆய்வு செய்து வருகிறது. ஏற்கனவே தங்கத்திற்கு கட்டாய ஹால்மார்கிங் இருக்கும் வேளையில் வெள்ளிக்கு விருப்பத்தின் பெயரில் ஹால்மார்கிங் செய்ய அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதை இனி கட்டாயமாக செய்ய மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறது.
ஹால்மார்க்கிங் கட்டாயப்படுத்துவதன் மூலம் உலோக சந்தையில் நுகர்வோர் நலனை பாதுகாக்க முடியும். வெள்ளி விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில் பல்வேறு மோசடிகள் நடந்து வருகிறது. இந்த மோசடிகளை தடுக்கும் விதமாக மத்திய அரசு ஹால்மார்கிங் விதியை வெள்ளிக்கு கட்டாயமாக்க முடிவு செய்து வருகிறது.

வெள்ளி விலை இன்று கடுமையாக உயர்ந்துள்ளது, ரீடைல் விற்பனை சந்தையில் முதலீட்டு தேவையை அதிகரித்துள்ள காரணத்தால் இன்று ஒரு நாள் மட்டும் ஒரு கிலோ வெள்ளி விலை 12000 ரூபாய் உயர்ந்து 2,83,000 ரூபாயாக உள்ளது. இதனால் சாமானிய மக்கள் முதல் வங்கிகள், முதலீட்டு நிறுவனங்கள், பெரும் பணக்காரர்கள் என அனைவருக்கும் வெள்ளி முக்கிய முதலீடாக மாறியுள்ளது.
இதனால் மத்திய அரசு கீழ் இயக்கும் BIS அமைப்பு சந்தையில் விற்கப்படும் வெள்ளியின் தூய்மை மற்றும் தரநிலை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை களைய அதிகப்படியான கவனத்தை செலுத்தி வருகிறது. கட்டாய ஹால்மார்கிங் இதை தீர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி நுகர்வோருக்கு பாதுகாப்பான சந்தையை உருவாக்கும், வெள்ளி வணிகத்தை ஒழுங்குபடுத்தும் என தெரிகிறது.
இந்திய தரநிர்ணய பணியகத்தின் (BIS) இயக்குநர் ஜெனரல் சஞ்சய் கார்க் மணிகன்ட்ரோல்யிடம் கூறுகையில் வெள்ளி தொழில்துறை அமைப்புகள் வெள்ளி நகைகள் மற்றும் பொருட்களுக்கு கட்டாய ஹால்மார்கிங்கை கோரி வருகிறது. இதை ஏற்றுக்கொண்டு BIS புதிய விதியை அமல்படுத்துவதற்கு தேவையான ஒழுங்குமுறைகள் மற்றும் உள்கட்டமைப்புகளை ஆராய்ந்து வருகிறது என தெரிவித்தார்.
தானாக முன்வந்து பல முன்னணி விற்பனையாளர்கள் தற்போது 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ஹால்மார்க் செய்யப்பட்ட வெள்ளி பொருட்களை விற்பனை செய்து வருகின்றன. இது வெள்ளியை வாங்கும் மக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை அளிக்கிறது.
2024இல் 31 லட்சம் என்ற அளவில் இருந்த ஹால்மார்கிங் எண்ணிக்கை, 2025இல் 51 லட்சமாக உயர்ந்துள்ளது என்று சஞ்சய் கார்க் தெரிவித்தார். இந்த வளர்ச்சி வெள்ளி சந்தையில் ஹால்மார்க்கிங் தேவையையும், முக்கியதுவத்தையும் காட்டுகிறது.


Click it and Unblock the Notifications