பங்குச்சந்தை சரியுதே.. அமித் ஷா சொன்ன பதில்.. முதலீட்டாளர்கள் நிலை என்ன..?

இந்தியப் பங்குச்சந்தை வரலாற்று உச்ச நிலையை அடைந்த பின்பு கடந்த 2 நாட்களாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது, இதனால் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் பெரும் குழப்பத்துடன் இருக்கும் வேளையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முக்கியமான விஷயத்தைக் கூறி முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.

சமீபத்தில் உள்துறை அமைச்சர் அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் NDTV நிறுவனத்திற்குப் பேட்டி அளித்திருந்தார். அப்போது NDTV-யின் தலைமை ஆசிரியர் சஞ்சய் புகாலியா பங்குச்சந்தை சரிவுக்குத் தேர்தல் முடிவுகள் காரணமாகப் பாதிப்பு அடைவது குறித்து கேள்வி எழுப்பினார்.

பங்குச்சந்தை சரியுதே.. அமித் ஷா சொன்ன பதில்.. முதலீட்டாளர்கள் நிலை என்ன..?

இதற்குப் பதில் அளித்த அமித் ஷா, பங்குச்சந்தையில் ஏற்படும் தடுமாற்றத்திற்குத் தேர்தல் முடிவுகள் முழுமையான காரணமில்லை, இது இயல்பான ஒன்று தான். பங்குச்சந்தை 300-400 பள்ளிகள் சரிந்து, நிலைமை சரியான பின்பு 1200-1300 புள்ளிகள் உயர்வது சாதாரணமானது. தேர்தல் இல்லாமலேயே இதேபோல் இந்த வருடம் 15-20 முறை நடந்துள்ளது எனத் தெரிவித்தார் அமித்ஷா.

மேலும் அமித் ஷா பேசுகையில், இந்த தேர்தலில் மீண்டும் NDA கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும், 400 இடத்தில் வெற்றி வாகை சூடி ஆட்சிக்கு மீண்டும் வரும், நரேந்திர மோடி மீண்டும் பிரதமர் ஆவார் எனத் தான் நம்புவதாகவும், அதன் மூலம் பங்குச்சந்தை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும் எனவும் தெரிவித்தார் அமித் ஷா.

பங்குச்சந்தை சரியுதே.. அமித் ஷா சொன்ன பதில்.. முதலீட்டாளர்கள் நிலை என்ன..?

இந்த மாத துவக்கத்தில் NDTV-க்கு அளித்த மற்றொரு பேட்டியில் அமித் ஷா, ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் போது பங்குச்சந்தை பிச்சிக்கும் எனத் தனது கணிப்பைத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தேர்தல் முடிவுகள் நெருங்க நெருங்க இந்தியப் பங்குச்சந்தை அதிகப்படியான தடுமாற்றத்தை எதிர்கொண்டு வருகிறது.

குறிப்பாக அன்னிய நிறுவன முதலீட்டாளர்கள் அதிகப்படியான பங்குகளை விற்பதும், வளர்ச்சிப் பாதையில் இருக்கும் ப்ளூ சிப் பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வதும் எனப் பல மாற்றங்கள் நடந்து வருகிறது.

இதே வேளையில் மோடி தலைமையிலான NDA கூட்டணி பெரும்பான்மை உடன் வெற்றி அடையாவிட்டால் கட்டாயம் பங்குச்சந்தை 15 -30 சதவீதம் வரையில் சரியும் என உள்நாட்டு முதலீட்டு நிறுவனங்கள் முதல் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் வரையில் கணித்துள்ளனர்.

இதேவேளையில் இந்தியப் பங்குச்சந்தையின் தடுமாற்றத்தை அளவிடும் India VIX எனப்படும் Volatility Index 25 புள்ளிகளை நெருங்கி வருகிறது, இது ஜூன் 16,2022ல் அதிகப்படியாக 28.13 என்ற அளவீட்டை இதற்கு முன்பு எட்டியது, இந்த அளவீட்டைத் தேர்தல் முடிவுகள் வெளியாகும் ஜூன் 4 ஆம் தேதிக்குள் தொடுமா..? கமெண்ட் பண்ணுங்க.

ஜூன் 1 ஆம் தேதி 7ஆம் கட்ட தேர்தல் முடிவுக்குப் பின்பு வெளியாகும் எக்சிட் போல், ஜூன் 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகள் வரையில் பங்குச்சந்தை அதிகப்படியான தடுமாற்றம் சந்திக்கும். இதில் முக்கியமாக எக்ஸிட் போல் கணிப்புகளில் பிஜேபி-க்கு சாதகமான முடிவுகள் வரவில்லை எனில் கட்டாயம் பங்குச்சந்தை பெரும் சரிவை எதிர்கொள்ளும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+