வங்கிகளைப் பொறுத்தவரையில் பெரு நிறுவனங்களுக்கு கடன் வழங்க வேண்டும் என்றால் எந்தவித ஐயமும் இருக்காது. ஏனெனில் பெரு நிறுவனங்கள் சரியாக வாங்கும் கடனை திருப்பிச் செலுத்தி விடும் என்ற நம்பிக்கை வங்கிகளுக்கு உண்டு. ஆனால் சில நம்பகமான நிறுவனங்களே கடனைத் திருப்பிச் செலுத்த தவறும் போது வங்கிகளுக்கு பெரும் இழப்புகள் ஏற்படலாம். அப்படித்தான் ஆம்டெக் ஆட்டோ நிறுவனத்தின் வீழ்ச்சி, வங்கிகளுக்கு பெரிய இழப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இந்நிறுவனம் கடன் பெற்ற வங்கிகள் இழப்புகளை மீட்டெடுக்க திணறி வருகின்றன.
ஆம்டெக் நிறுவன வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக இருக்கும் அரவிந்த் தாம் என்பவருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் சமீபத்தில் ஜாமீன் வழங்க மறுத்துள்ளது. இதன் காரணமாக இந்த விவகாரம் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அரவிந்த் தாம் என்பவர் தான் முதன்முதலாக தங்கள் குடும்பத்திற்கு கட்டுமான துறையில் வருமானம் இருந்தாலும் வேறொரு வணிகத்தை தொடங்க வேண்டும் என்பதற்காக ஆட்டோ உதிரி பாகங்களை தயாரிக்கும் ஆம்டெக் ஆட்டோஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார்.

அவர் ஆம்டெக் ஆட்டோஸ்-ஐ தொடங்கிய பின்பு சில காலம் கழித்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக இருக்கும் மாருதி நிறுவனத்திடம் இருந்து பிரேக் பேட் தயாரிப்பதற்கான ஒப்பந்தம் கிடைத்தது. இது கிடைத்ததும் போதும் ஆம்டெக் நிறுவனத்தின் வளர்ச்சி மேலோங்க தொடங்கியது. அதன் பிறகு 1990-களில் மாருதி நிறுவனம் மட்டுமின்றி டாடா மோட்டார்ஸ், ஃபோர்டு ஃபியட் போன்ற பெரு நிறுவனங்களிடமிருந்தும் ஆம்டெக் நிறுவனத்திற்கு ஒப்பந்தங்கள் கிடைக்கத் தொடங்கின. இதனால் இந்நிறுவனம் அபரிமிதமான வளர்ச்சியை எட்டியது.
நிறுவனத்தின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு 2000 ஆண்டில் அரவிந்த் தாம் தனது பிசினஸ்-ஐ விரிவாக்கத் தொடங்கினார். இங்கிலாந்தில் ஆம்டெக் நிறுவனத்தை போன்ற பிற போட்டியாளர்களை சந்தித்து 20-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு நிறுவனங்களையும் வாங்கினார். அப்போது ஆம்டெக் நிறுவனத்தின் வருவாயின் மூலம் அவர் தனது வணிகத்தை விரிவுபடுத்தவில்லை. மாறாக இதற்காக வங்கிகளில் இருந்து கடன் பெற்று அந்த கடன்களை கொண்டே விரிவாக்க செயல்முறையில் இறங்கினார். இந்நிறுவனத்தின் நம்பகத்தன்மையை நம்பி வங்கிகளும் தாராளமாக கடன்களை வழங்கத் தொடங்கின.
அதன் பிறகு 2015-ஆம் ஆண்டில் ஆம்டெக் நிறுவனத்தின் கடன் சுமை அதிகரிக்கத் தொடங்கியது. முன்பு ரூ. 3,800 கோடியாக இருந்த கடன் தொகை ரூ.14,200 கோடியாக உயர்ந்தது. அதிலிருந்து கடனை சரிவர திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் தொடர்ந்தது. ஆனால் வங்கிகள் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை.
அதே ஆண்டில், ஆம்டெக் நிறுவனம் ரூ. 800 கோடி பத்திரக் கட்டணத்தையும் செலுத்தத் தவறியது. இதன் பின்னரே, வங்கிகள் ஆம்டெக் நிறுவனத்தின் நிலைமையை உணர்ந்தன. 2017-ஆம் ஆண்டு, வங்கிகள் ஆம்டெக் நிறுவனத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றன.
ஆம்டெக் நிறுவனம் நஷ்டத்தைச் சந்தித்தபோதிலும் அரவிந்த் தாம் தனது குடும்பத்தினருடன் சேர்ந்து பல்வேறு வணிகங்களில் முதலீடு செய்யத் தொடங்கினார். ரியல் எஸ்டேட், ஸ்டீல் போன்ற துறைகளிலும் முதலீடு செய்தார். அப்போதுதான் இந்நிறுவனத்தின் மோசடிகள் வெளிச்சத்திற்கு வந்தது. வங்கிகளில் இருந்து வாங்கிய கடனை வணிக விரிவாகத்திற்கு பயன்படுத்தாமல், வேறு நிறுவனங்களுக்கு மாற்றியது தெரியவந்தது.
இவர் வேறு நிறுவனங்களுக்கு வழங்கிய தொகை ஆம்டெக் நிறுவனத்தில் ஏற்கனவே பணிபுரிந்த ஊழியர்களின் பெயரில் தொடங்கப்பட்டு பணப்பரிமாற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டதும் தெரிய வந்தது. அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில், நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் மூலம் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது. ஆம்டெக் நிறுவனத்தின் ஊழியர்கள், தங்களின் பெயர்கள் தவறாக பயன்படுத்தப்பட்டது தெரியாமலேயே இருந்துள்ளனர்.
ஆம்டெக் நிறுவனத்தின் வீழ்ச்சியில், வங்கிகளின் தவறுகளும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வங்கிகள், ஆம்டெக் நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்தபோதும், உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால், மோசடி மேலும் அதிகரிக்க வழிவகுத்தது. இது நீண்ட நாட்களாக ஓடிக்கொண்டிருக்கும் ஒரு வழக்காகும். இந்நிலையில் இதற்காக கைது செய்யப்பட்ட ஆம்டெக் ஆட்டோஸ் நிறுவனத்தின் நிறுவனர் அரவிந்த் தாம் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டுள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications