இந்தியாவின் மிகப்பெரிய பால் மற்றும் பால் பொருட்கள் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனங்களில் ஒன்றான அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி 2010 ஆம் ஆண்டு முதல் இந்நிறுவனத்தை நிர்வாகம் செய்து வந்த நிலையில் ஜனவரி 9 ஆம் தேதி இந்தத் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் அமுல் நிறுவனத்தின் இடைக்கால நிர்வாக அதிகாரியாக இதன் நிர்வாகம் ஜெயன் மேத்தா என்பவரை நியமித்துள்ளது.
வட இந்தியா
வட இந்திய மக்கள் பால் மற்றும் பால் பொருட்களுக்காக அதிகம் நம்பியிருக்கும் மிகவும் முக்கியமான நிறுவனம் அமுல். இந்த நிறுவனம் பால் முதல் ரெடிமேட் உணவுகள் வரையில் தயாரித்துப் பெரும் வர்த்தகச் சந்தையைக் கொண்டு உள்ளது. இந்த நிறுவனத்தில் அமுல் போன்ற முக்கியமான நிறுவனத்தின் நிர்வாகம் மாற்றம் என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.
அமுல் உயர் அதிகாரி
அமுல் போன்ற நிறுவனத்தில் உயர் அதிகாரி மாற்றப்பட்டதன் மூலம் கொள்முதல், தயாரிப்பு, பேக்கிங், விநியோகம் என எதாவது ஒன்றில் பாதிக்கப்பட்டாலும் மக்களுக்குப் போதுமான பால் மற்றும் பால் பொருட்கள் கிடைக்காது.
ஆர்.எஸ்.சோதி
இதனால் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஆர்.எஸ்.சோதி நிர்வாகப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அமுல் பிராண்டை இயக்கும் விவசாயிகள் கூட்டுறவு நிறுவனமான குஜராத் கூட்டுறவு பால் சந்தைப்படுத்தல் கூட்டமைப்பின் (ஜிசிஎம்எம்எஃப்) நிர்வாகக் கூட்டத்தில் ஆர்.எஸ்.சோதி-யை நிர்வாக இயக்குனர் பதவியில் இருந்து நீக்குவதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
காந்திநகர் மதுர் பால் பண்ணை
ஆர்.எஸ்.சோதி-ஐ உயர் பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் ஜெயன் மேத்தா தற்காலிகமாக இப்பதவியில் நியமிக்கப்பட்டு உள்ளார். இந்த நிலையில் அடுத்த சில மாதங்களில் புதிய நிர்வாக இயக்குனர் அறிவிக்கப்படுவார் என்று காந்திநகர் மதுர் பால் பண்ணையின் தலைவர் ஷங்கர் சிங் ராணா உறுதிப்படுத்தியுள்ளார்.
ஜெயன் மேத்தா
ஜெயன் மேத்தா கடந்த 32 ஆண்டுகளாக அமுல் நிறுவனத்தில் பணியாற்றி வரும் காரணத்தால் தினசரி நடவடிக்கையில் எவ்விதமான பாதிப்பும் இருக்காது. ஜெயன் மேத்தா தற்போது அமுல் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரியாக (COO) உள்ளார்.
ஜெயன் மேத்தா 32 ஆண்டுப் பணிகள்
இதற்கு முன்பு ஜெயன் மேத்தா அமுல் நிறுவனத்தின் பிராண்ட் மேலாளராகவும், குழு தயாரிப்பு மேலாளராகவும், மார்கெட்டிங் செயல்பாட்டில் பொது மேலாளராகவும் பணியாற்றினார். இதனால் நிர்வாகத்தில் எவ்விதமான தடுமாற்றமும் இல்லாமல் இயங்க வாய்ப்புகள் அதிகம்.
ஜெயன் மேத்தா கல்வி
ஜெயன் மேத்தா 1989 ஆம் ஆண்டில் குஜராத்தில் உள்ள பிஜே வனிஜ்யா மகாவித்யாலயாவில் மார்க்கெட்டிங் துறையில் இளங்கலை வணிக நிர்வாகத்தில் (BBA) பட்டம் பெற்றார். ஜெயன் மேத்தா பல்கலைக்கழகத் தங்கப் பதக்கம் வென்றவர். ஜெயன் மேத்தா குஜராத்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மென்ட் ஆனந்தில் (IRMA) முதுகலைப் பட்டம் பெற்றார்.
ஆர்.எஸ்.சோதி பணி காலம்
அமுல் நிறுவனத்தில் இருந்து வெளியேறும் ஆர்.எஸ்.சோதி 1982 ஆம் ஆண்டுச் சேல்ஸ் பிரிவில் உயர் அதிகாரியாகச் சேர்ந்தார். இதைத் தொடர்ந்து 2000-2004ல் மார்க்கெட்டிங் பிரிவில் பொது மேலாளராக இருந்தார், ஜூன் 2010 ஆம் ஆண்டு அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகப் பதவியேற்றார். 2017ல் இவருடைய பதவிக் காலம் 5 வருடம் நீட்டிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications