அமுல் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை அதிகரிப்பு! மதர் டைரியும் விலையை உயர்த்த திட்டம்! நாளை முதல் அமல்!

இந்தியாவில் பலருக்கு தினமும் காலை காப்பி அல்லது டீ குடிக்காமல் அன்றைய நாள் தொடங்காது. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த செய்தி சற்று அதிர்ச்சிகரமானதாக இருக்கலாம். அமுல் மற்றும் மதர் டைரி போன்ற முன்னணி பால் நிறுவனங்கள்.. கொள்முதல் செலவு அதிகரிப்பின் காரணமாக நவம்பர் 12-ஆம் தேதி முதல் பால் விலையை லிட்டருக்கு 2 முதல் 6 ரூபாய் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளன. நாளை முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது.

பால் பாக்கெட் விலை உயர்வு: அமுல் நிறுவனம் வெவ்வேறு வகையான பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. இதில் அதிகபட்சமாக 6.5% கொழுப்புச் சத்துக் கொண்ட எருமை பால் லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரிக்கப்படவுள்ளது. டோன்ட் மில்க் லிட்டருக்கு 2 ரூபாயும், கொழுப்பு சத்து நிறைந்த ஃபுல் கிரீம் மில்க் லிட்டருக்கு 4 ரூபாயும் அதிகரிக்கப்படவிருக்கிறது. அதேபோல எருமை பால் லிட்டருக்கு 6 ரூபாய் அதிகரிக்கப்பட்டு தற்போதைய விலையான 80 ரூபாயிலிருந்து ரூ.86-ஆக அதிகரிக்கவுள்ளது.

அமுல் பால் விலை லிட்டருக்கு 6 ரூபாய் வரை அதிகரிப்பு! மதர் டைரியும் விலையை உயர்த்த திட்டம்! நாளை முதல் அமல்!

மதர் டைரி நிறுவனமும் பால் விலையை உயர்த்த திட்டமிட்டுள்ளது. தனது வெவ்வேறு பால் பாக்கெட்களின் விலையை லிட்டருக்கு ரூ.2 முதல் ரூ.4 வரை உயர்த்தத் திட்டமிட்டுள்ளது. இந்த விலை உயர்வும் நவம்பர் 12-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டெல்லியில் பல்க் வெண்டிங் மெஷின் மூலம் விற்பனை செய்யப்படும் டோன்ட் மில்க் லிட்டருக்கு 58 ரூபாயாக இருந்த நிலையில் இனி 60 ரூபாய்க்கு விற்கப்படும். ஃபுல் க்ரீம் மில்க் லிட்டர் 72 ரூபாயிலிருந்து ரூ.76-ஆக உயர்த்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Also Read

பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் டோன்ட் மில்க் முன்பு 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இனி 62 ரூபாய்க்கு விற்கப்படும். டபுள் டோன்ட் மில்க் லிட்டர் 54 ரூபாயிலிருந்து 56 ரூபாயாகவும், பசும் பால் லிட்டர் 62 ரூபாயிலிருந்து 65-ஆகவும் உயர்த்தப்படவுள்ளது.டெல்லியில் பால் விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் மதர் டைரியும் ஒன்று. இந்நிறுவனம் நாளொன்றுக்கு 50 லட்சம் லிட்டர் வரை விற்பனை செய்கிறது.

ஏன் இந்த திடீர் விலை உயர்வு?: பொதுவாக பால் உற்பத்தி அதிகமாக இருக்கும் போது விலை நிலையாக இருக்கும். ஆனால் தற்போதைய சூழலில் பால் விநியோகத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதுவும் பால் விலை அதிகரிக்க ஒரு காரணமாக அமைகிறது. கடந்த சில மாதங்களாக பால் பற்றாக்குறை காரணமாக பாலில் உள்ள கொழுப்பு சத்தின் விலை சுமார் 20 முதல் 25 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

கால்நடைகளுக்கு தீவன செலவு அதிகரித்துள்ளதால் பால் பண்ணை வைத்திருப்பவர்களும் பெரும் நிதிச் சுமையில் சிக்கியுள்ளனர். எனவே பால் சேகரிப்பை அதிகரிக்கும் நோக்கில் பால் நிறுவனங்கள் பண்ணை வைத்திருப்பவர்களுக்கு பால் கொள்முதல் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன.

அமுல் நிறுவனம் கொள்முதல் விலையை கிலோவுக்கு ஆயிரம் ரூபாயாக உயர்த்தியுள்ளது. இதனால் பண்ணை வைத்திருப்பவர்கள் லிட்டருக்கு 60 ரூபாய்க்கும் அதிகமாக பெற உள்ளனர். எப்போதெல்லாம் பால் கொள்முதல் குறைகிறதோ அப்போது பால் விற்பனை செய்யும் நிறுவனங்கள் பால் பவுடர் மற்றும் பால் கொழுப்பு சத்தை கலந்து பாலை தயார் செய்யும். ஆனால் கொழுப்புச்சத்து விலையும் இந்த முறை அதிகரித்துள்ளது. இதனால் வேறு வழியின்றி பால் உற்பத்தி நிறுவனங்கள் நுகர்வோருக்கு விலையை அதிகரிக்க உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+