ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொருளாதார வல்லுனரான ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் தங்கம் விலை குறித்து அதிரடி கணிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தற்போது தங்கம் விலை சரிந்து வரும் நிலையில், இன்னும் குறையும் என்றும், பின்னர் பெரும் ஏற்றத்துடன் ஒரு கிராம் 22,000 ரூபாய் வரை செல்லும் வாய்ப்பு உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். இது முதலீட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்களிடையே பெரும் வியப்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா? 1 கிராம் தங்கம் Big Jump வரபோகுது

தங்கம் விலை இப்போது ஏன் சரிகிறது?
ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறுகையில், தற்போது தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வருகிறது. இன்று ரீடைல் சந்தையில் 13,620 ரூபாய்க்கு விற்கப்படும் 22 கேரட் தங்கம் விலை, 12,500 ரூபாய் என்ற நிலையை உடைத்தால் 11,000 ரூபாய் வரை செல்லலாம் என்று எச்சரிக்கிறார்.

இதற்கு முக்கிய காரணம் போர் போன்ற புவிசார் அரசியல் நிகழ்வுகள், கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரூபாய் மதிப்பு சரிவு ஆகியவை என்று விளக்குகிறார். பொதுவாக போர் தொடங்கிய உடன் தங்கம் விலை உயரும்.

ஆனால் ஈரான் போரில் சற்று வித்தியாசமாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விலை உயர்ந்தது. இதன் வாயிவாக டாலர் மதிப்பு ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதன் காரணத்தால் தங்கம் விலை சரிந்து வருகிறது என்றும், உக்ரைன் போர் துவங்கிய போது முதல் 5-6 மாதங்களுக்கு தங்கம் விலையில் சரியும் போக்கு இருந்தது. இதேபோல் தான் இப்பவும் நடக்குது.

பணவீக்கம் மற்றும் வட்டி விகிதம்
போர் முடிந்த பிறகு பணவீக்கம் (inflation) உயரும் என்று அவர் கணிக்கிறார். பணவீக்கம் உயர்ந்தால் மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை (interest rate) உயர்த்தும். இதனால் பொருளாதாரத்தில் மந்தநிலை (recession) ஏற்படலாம்.

அப்போது வட்டி விகிதத்தை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். வட்டி விகிதம் குறையும் போது தங்கம் விலை பெருமளவு உயரும் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் விளக்குகிறார். இதனால் தங்கத்தில் முதலீடு செய்ய இப்போது சரியான நேரமாக பார்க்கப்படுகிறது. தங்கம் விலையில் முதலீடு செய்ய திட்டமிடுவோர் தங்கம் விலை குறைவாக இருக்கும் போதும், சரிவு பாதையில் இருக்கும் போதும் முதலீடு செய்ய வேண்டும். தங்கம் விலை உயர்ந்த பின்பும் முதலீடு செய்வதில் எவ்விதமான பயனுமில்லை என்பதை தான் ஆனந்த ஸ்ரீனிவாசன் கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? என்று கேட்டுள்ளார்.

தங்கம் விலை 22,000 ரூபாய்
ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறும் முக்கிய பாயின்ட் இதுதான்.. வட்டி விகித உயர்வால் தங்கம் 11,000 ரூபாய் வரை சரியும். ஆனால் பின்னர் வட்டி விகித குறைப்பு ஏற்படும் போது தங்கம் "டப்புன்னு" 22,000 ரூபாய் வரை சென்று நிற்கும்.

சீனா போன்ற நாடுகள் தங்கத்தை பெருமளவு வாங்கி வருவதால் இந்த உயர்வு சாத்தியம் என்று குறிப்பிடுகிறார். போர் முடிந்தாலும் சீனா போன்ற நாடுகள் வாங்கி வைத்திருக்கும் தங்கம் வெளியேற வராது இதனால் தங்கத்திற்கான டிமாண்ட் உயர்ந்து பெரிய அளவில் உயரும் என ஆனந்த் ஸ்ரீனிவாசன் கணித்துள்ளார்.

இந்த இடைப்பட்ட காலத்தில் இந்திய ரூபாய் மதிப்பு 92 ரூபாயில் இருந்து 94-ஐ இன்று தொட்ட நிவையில், 2.5-3 வருடத்தில் 110 வரை செல்லலாம் என்றும், இது தங்கம் விலைக்கு உயர்வுக்கு இது பெரிய அளவில் உதவும் என்றும் சுட்டிக்காட்டுகிறார் ஆனந்த் ஸ்ரீனிவாசன்.

எப்போது தங்கம் வாங்க வேண்டும்?
தங்கம் விலை இறங்கும் போது பொறுமையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தும் ஆனந்த் ஸ்ரீனிவாசன், தங்கம் விலையில் இறக்கம் தொடரும் போது தைரியமாக வாங்கலாம். ஏனெனில் பலர் இப்போது விற்று வெளியேறுவார்கள் (weak hands). பின்னர் அடிப்படை விலையிலிருந்து (bottom) பெரும் ஏற்றம் ஏற்படும். இந்த ஏற்ற இறக்க சுழற்சி 2.5 முதல் 3 ஆண்டுகள் வரை நீடிக்கலாம் என்று கூறுகிறார்.

ரூபாய் மதிப்பு மற்றும் போர் தாக்கம்
ரூபாய் விலை வேகமாக சரிவதால் தங்கம் விலை உயர்வுக்கு கூடுதலாக உதவுகிறது என்று விளக்குகிறார். போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை 2008ஆம் ஆண்டு 147 வரை சென்றுள்ளது. இதேபோல் தற்போது ஈரான் போரின் காரணமாக 120 டாலர் வரையில் சென்றுள்ள கச்சா எண்ணெய் விலை 150 முதல் 200 டாலர் வரையில் உயர வாய்ப்புள்ளது.

இது தங்கம் விலை இறக்கத்தை விரைவுபடுத்தும் என்றாலும், பின்னர் பெரும் ஏற்றத்திற்கு வழிவகுக்கும். ஆனந்த் ஸ்ரீனிவாசனின் இந்த கணிப்பு தங்கம் முதலீட்டாளர்களுக்கு முக்கியமான செய்தியாக உள்ளது.

தற்போது தங்கம் விலை சரிந்து வரும் நிலையில் (மார்ச் 2026-ல் ஒரு கிராம் 13,000-14,000 ரூபாய் அளவில் உள்ளது), பொறுமையாக காத்திருந்து சரியான நேரத்தில் வாங்குவது நல்லது என்று அவர் வலியுறுத்துகிறார்.

இது பொருளாதார மந்தநிலை, பணவீக்கம், வட்டி விகித மாற்றங்கள் ஆகியவற்றுடன் தொடர்புடையது என்பதால் சாதாரண மக்களும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைய தங்கம் விலை
இன்றைய சந்தை நிலவரப்படி தங்க விலையில் கணிசமான சரிவு பதிவாகியுள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.360 குறைந்து ரூ.14,858 ஆக உள்ளது. அதேபோல், 22 காரட் தங்கம் 330 ரூபாய் குறைந்து ரூ.13,620 ஆக குறைந்துள்ளது. 18 காரட் தங்கம் விலை ரூ.11,360 ஆக உள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+