தமிழ்நாட்டில் தங்கம் மற்றும் வெள்ளியில் முதலீடு செய்யும் பொதுமக்கள், சந்தை ஏற்ற இறக்கங்களால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மக்கள் மத்தியில் தங்க நகை வாங்கும் பழக்கம் அதிகம் உள்ள நிலையில், பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது சமீபத்திய வீடியோவில் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் குறித்து முக்கியமான கருத்துகளை தெரிவித்து பலரையும் யோசிக்க வைத்துள்ளது.
தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலையில் ஏற்பட்டு உள்ள மாற்றங்கள், முதலீட்டாளர்களுக்கு புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளன.

செவ்வாய்க்கிழமை ரீடைல் சந்தையில் தங்கம், வெள்ளி, பிளாட்டினம் விலை சரிவு தெளிவாக பதிவாகியுள்ளது. 24 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.15,622 ஆக குறைந்து ரூ.131 சரிந்துள்ளது. அதேபோல் 22 காரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.14,320 ஆகவும், 18 காரட் தங்கம் ரூ.12,250 ஆகவும் விற்பனையாகி முறையே ரூ.120 மற்றும் ரூ.100 வீழ்ச்சியை சந்தித்துள்ளன.
வெள்ளி விலை ஒரு கிராமுக்கு ரூ.265 மற்றும் ஒரு கிலோக்கு ரூ.2,65,000 என விலை மாற்றம் இல்லாமல் நிலையாக உள்ளது, நேற்றைய வர்த்தகத்தில் கிலோவுக்கு 15000 ரூபாய் குறைந்தது குறிப்பிடத்தக்கது. பிளாட்டினம் விலையில் அதிக சரிவு காணப்பட்டு, ஒரு கிராம் ரூ.5,863 ஆக ரூ.125 குறைந்துள்ளது; 10 கிராம் விலை ரூ.58,630 ஆக ரூ.1,250 குறைந்துள்ளது.\
பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில், தங்கம் மற்றும் வெள்ளி விலைகளின் தற்போதைய நிலையை விரிவாக விவாதித்துள்ளார். இன்று தங்க விலை சற்று குறைந்து 14,320 ரூபாய் அளவில் உள்ளது, இது முந்தைய உயர்விலிருந்து லேசான இறக்கத்தை காட்டுகிறது.
அதேசமயம், ரீடைல் சந்தையில் வெள்ளி விலையில் மாற்றம் இல்லையென்றாலும் சர்வதேச ஸ்பாட் சந்தைசில் 5 சதவீதம் குறைந்து ஒரு அவுன்ஸ் 72.80 டாலருக்கு பொத்தென்று சரிந்துள்ளது. இது சந்தையில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய பியூச்சர்ஸ் சந்தையில் கிலோவுக்கு 5000 அளவிலான சரிவை பதிவு செய்து 2.35 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.
ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது வீடியோவில் ரீடைல் சந்தையில் விசாரித்து வந்த தகவல்களின்படி, வெள்ளியை தற்போது மார்கெட்டில் விற்றால் 2.20 லட்சம் ரூபாய் அளவுக்கு தான் விலை போகிறது என்று தெரிவித்தார். வெள்ளி விலை மீண்டும் 4 லட்சம் உயரும் என்று எதிர்பார்த்து இனி முதலீடு செய்ய வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார்.
ஆனந்த் ஸ்ரீனிவாசன் மேலும் கூறுகையில், தங்கம் ஒரு பணமாக்கும் உலோகம் (monetary metal) என்பதால், அது பொருளாதார நிலைத்தன்மையுடன் தொடர்புடையது. அதேசமயம், வெள்ளி தொழில்துறை உலோகம் (industrial metal) என்பதால், தொழில்துறை தேவைகள், உற்பத்தி போன்றவற்றால் பாதிக்கப்படுகிறது.
தங்கமும் வெள்ளியும் முற்றிலும் வேறுபட்டவை, வெள்ளி தொழில்துறை பயன்பாட்டுக்கான பொருட்களுடன் தொடர்புடையது. இந்த வேறுபாட்டை புரிந்துகொள்ளாமல் முதலீடு செய்தால், பண இழப்பு ஏற்படலாம் என்று அவர் எச்சரிக்கிறார்.
தமிழ்நாட்டில், தங்கத்தை சேமிப்பாக கருதும் குடும்பங்கள் அதிகம், ஆனால் வெள்ளியை தொழில்துறை பயன்பாட்டுக்காக பயன்படுத்தும் சிறு தொழில்கள் இந்த வேறுபாட்டை அறிந்திருக்க வேண்டும். தங்கம் நீண்டகால முதலீடுக்கு ஏற்றது, வெள்ளி குறுகியகால ஏற்ற இறக்கங்களுக்கு உட்பட்டது.
வெள்ளி பக்கம் போக வேண்டாம், சில்வர் ETFகள் (Exchange Traded Funds) போன்றவற்றை நம்ப வேண்டாம் என்று ஆனந்த் ஸ்ரீனிவாசன் அறிவுறுத்துகிறார், குறிப்பாக புரோக்கர்கள் நடத்தும் ETFகளை தவிர்க்கவும். இவை தொழில்துறை உலோகத்தின் ஏற்ற இறக்கங்களால் பாதிக்கப்படலாம் எனவும் எச்சரித்துள்ளார்.
More From GoodReturns

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரையில் இன்று தங்கம் விலை அதிரடி உயர்வு: மேலும் விலை ஏறுமா?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

கோயம்புத்தூர் மக்களே தங்கம் வாங்க சிறந்த நாள்!! தடாலடியாக குறைந்த விலை!!

கோயம்புத்தூர் மக்களே உங்க ஊரில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை என்ன?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு: நகைப்பிரியர்களுக்கு நல்ல செய்தி..!

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

Silver Crash: தங்கத்தை விடுங்க.. வெள்ளியோட ஆட்டத்தை பாருங்க! முதலீடு செய்ய இது சரியான நேரமா?



Click it and Unblock the Notifications