ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள இறால் விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆண்டுக்கு 40 ஆயிரம் டன் இறாலை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்கின்றனர்.
இதன்மூலம் அவர்களுக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் வருகிறது என்று ஆந்திர மாநில மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பயோ-பாதுகாப்பு சூழ்நிலையில் ஸ்ரீகாகுளம் கடலோரப் பகுதியில் இந்த இறால் பண்ணைகள் அனைத்தும் அமைந்துள்ளன. நாட்டின் இறால் ஏற்றுமதியில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் பெரும்பங்கு வகிக்கிறது.
1000 ஏக்கர் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 600 விவசாயிகளும் 5 ஆயிரம் தொழிலாளர்களும் நேரடியாக இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். ஸ்ரீகாகுளம் மாவட்ட இறால் விவசாயிகள் 4 அடுக்கு பயோ டெக்னாலஜியைப் பயன்படுத்துவதால் ஒவ்வொன்றும் 20 கிராம் எடையுள்ள தரமான இறாலை உற்பத்தி செய்கின்றன.
நவீனமான அட்வான்ஸ்டு கல்ச்சர் அமைப்புகள் இங்குள்ள இறால் வளர்ப்புத் தொட்டியில் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன் ஆட்டோ ஃபீடர், சென்ட்ரல் கழிவு நீர் அமைப்பு ஐஓடி சார்ந்த நீர் கணக்கீடு கொண்டிருப்பதால் தங்கள் இலக்குக்கான உற்பத்தியை விவசாயிகளால் எளிதாக எட்ட முடிகிறது. குறைந்த பண்ணை நிலத்தில் மிக அதிகமான உற்பத்தியையும் செய்கின்றனர்.
இந்தியாவில் ஸ்ரீகாகுளம் மாவட்டம் தவிர பல்வேறு பகுதிகளில் இறால் பண்ணைகள் செயல்படுகின்றன. இதில் ஸ்ரீகாகுளத்தில் உற்பத்தியாகும் இறால்கள் தரமானதாகவும் திடமாகவும் உள்ளன. மற்ற இடங்களை விட இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள பண்ணைகள் சற்று மேடான பகுதிகளில் அமைந்து இருப்பதால் கழிவுகளை எளிதாக அகற்ற முடிகிறது.


Click it and Unblock the Notifications