ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயதான விவசாயி ஒருவர் பல வருடமாக பெறும் நிதி நெக்கடியில் இருந்த வேளையில் சரியான நேரத்தில் தக்காளி பயிரிட்டது மூலம் பெரும் ஜாக்பாட் அடித்துள்ளது. மோசமான நிதிநிலையில் இருந்த இந்த விவாயிக்கு பல வருட கண்ணீரை துடைத்துள்ளது.
இன்று பலரும் தக்காளி விவசாயிகள் கோடீஸ்வர்களாகியுள்ளார்கள் என்று பேசினாலும், பல வருடங்களாக நஷ்டத்தில் இருந்ததை யாரும் மறக்க கூடாது. பெரு நகரங்களில் நாம் ஒரு கிலோ தக்காளியை வெறும் 10 -15 ரூபாய்க்கு வாங்கும் போது விவசாயிகள் கைக்கும் வெறும் 5 ரூபாய் சென்றுள்ளதை மறக்க கூடாது.

ஆந்திர மாநிலத்தின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 48 வயதான முரளி என்ற விவசாயி ஒரு மாதத்தில் ரூ.4 கோடி சம்பாதித்துள்ளார். அவரது தந்தையும் விவசாயி என்பதால் தக்காளி விற்பனையில் இருந்து மாதம் 50,000 ரூபாயை வீட்டிற்குக் கொண்டு வந்த காலத்துடன் ஒப்பிடுகையில் இது முற்றிலும் மாறுபட்டது, இந்த பெரும் தொகையை கடவுளின் அருள் என்றே அவரது குடும்பம் நம்புகிறது.
முரளியின் இந்த வெற்றிக்கு பின்பு பல மோசமான நாட்கள் இருந்துள்ளது, கடந்த ஆண்டு, தக்காளி விலை வீழ்ச்சியால் அவரது குடும்பம் கணிசமான இழப்பு சந்தித்து மட்டும் அல்லாமல் அவருக்கு 1.5 கோடி ரூபாய் அளவிலான கடன் சுமையை அளித்துள்ளது. ஆனால் தற்போது மேம்படுத்தப்பட்ட மின்சாரம், நல்ல பயிர் தரம் மற்றும் சாதகமான விலை ஆகியவற்றின் காரணமாக 45 நாட்களில் 4 கோடி ரூபாய் அளவிலான வருமானத்தை பெற வழிவகை செய்துள்ளது.
தனது தோட்டத்தில் விளைவித்த தக்காளியை சிறந்த விலையில் விற்க முரளி தனது சொந்த ஊரான சித்தூரில் இருந்து 130 கிமீ தொலைவில் இருக்கும் கோலார்-க்கு செல்ல வேண்டியிருந்தது, இப்பகுதியில் இருக்கும் APMC yard-ல் தக்காளிக்கு நல்ல விலை கிடைக்கிறது. இந்த ஆண்டு சுமார் 35 முறை அறுவடை செய்யப்பட்ட நிலையில், மேலும் 15-20 அறுவடைகள் வர வாய்ப்புள்ளது என கூறும் முரளி இந்த தக்காளி விற்பனையில் கடனைத் தீர்த்த பிறகு, 2 கோடி ரூபாய் தொகை தனது மிஞ்சியுள்ளதாக அவர் குவித்தார்.
இந்த பணத்தை வைத்து முரளி புத்திசாலித்தனமாக தனது விவசாய முயற்சிகளை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளார். நவீன தொழில்நுட்பம் மற்றும் தோட்டக்கலை நடைமுறைகளை பெரிய அளவில் பயன்படுத்த முடிவு செய்துள்ளார். மேலும் தனது கிராமத்தில் சுமார் 20 ஏக்கர் நிலத்தை வாங்கவும் திட்டமிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications