இந்தியா முழுவதுமே தற்போது பரபரப்பாக பேசப்படும் ஒரு விஷயமாக தங்கத்தின் விலை மாறி இருக்கிறது. தங்கம் விலையை பொருத்தவரை இந்த ஆண்டு யாரும் எதிர்ப்பாராத வகையில் ஒரு சவரன் 82,000 ரூபாயை கடந்துவிட்டது .ஒரு கிராம் ஆபரண தங்கம் 10,000 ரூபாயை தாண்டி விட்டது.
இனி வரும் நாட்களில் தங்கத்தின் விலை குறைந்தாலும் பெரிய அளவில் குறைவதற்கான வாய்ப்புகள் இல்லை என்பதால் இனி ஒரு பவுன் நகை வாங்க வேண்டும் என்றால் கூட குறைந்தபட்சம் 90 ஆயிரம் ரூபாயாவது தேவைப்படும் என்ற சூழல் உண்டாகிவிட்டது. இந்தியாவை பொருத்தவரை தங்கத்திற்கான தங்க நகைக்கான டிமாண்ட் அதிகமாக இருப்பதும் தங்கம் விலை உயர்வதற்கு முக்கிய காரணம்.

இந்த நிலையில் தான் இந்தியாவில் தங்கத்தின் விலை குறைவதற்கான சாத்திய கூறுகள் தென்படத் தொடங்கி இருக்கின்றன. அதாவது நாட்டிலேயே முதன்முறையாக தனியார் தங்கச் சுரங்கம் ஒன்று விரைவில் திறக்கப்பட போகிறது. இந்த தங்கச் சுரங்கம் திறக்கப்பட்டால் இந்தியா தங்கம் இறக்குமதி செய்யப்படுவது குறைந்து இறக்குமதி செலவுகள் குறைந்து தங்கத்தின் விலை குறைவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பப்படுகிறது.
ஆந்திர பிரதேச மாநிலம் ஜொன்னகிரி பகுதியில் மிகப்பெரிய தனியார் தங்கச்சுரங்கம் விரைவில் திறக்கப்பட உள்ளதாக டெக்கன் கோல்ட் மைன்ஸ் மேலாண்மை இயக்குனரான ஹனுமா பிரசாத் தெரிவித்திருக்கிறார் . ஆந்திர பிரதேச மாநிலத்தின் கர்னூல் அடுத்த ஜொன்னகிரி என்ற பகுதியில் மிகப்பெரிய தனியார் சுரங்கத்தை ஜியோ மைசூர் சர்வீசஸ் நிறுவனம் அமைத்து வருகிறது . இதில் பெரும் பங்கு வைத்திருக்கிறது டெக்கன் கோல்ட் மைன்ஸ். எனவேதான் ஹனுமா பிரசாத் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த தகவல் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது .
அண்மையின் இந்திய தொழில்துறை கூட்டமைப்பு மாநாடு நடைபெற்றது . அதில் டெக்கன் கோல்ட் மேலாண்மை இயக்குனர் ஹனுமா பிரசாத் கலந்து கொண்டு பேசும்போது ஆந்திராவில் இந்த தங்கச் சுரங்கத்தில் விரைவில் உற்பத்தி தொடங்கப்படும் எனக் கூறினார். கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் இந்த தங்க சுரங்கத்தில் உற்பத்தியை தொடங்க சுற்றுச்சூழல் அனுமதியைப் பெற்றோம் . அதோடு ஆந்திர மாநில அரசின் தடையில்லா சான்றிதழை பெற தற்போது விண்ணப்பம் செய்திருக்கிறோம் என கூறினார்.
தற்போதைய நிலையில் நாட்டில் தங்க உற்பத்தி 1.5 டன் ஆக இருக்கிறது இந்த சுரங்கம் முழுமையான உற்பத்திக்கு தயாரானதும் கூடுதலாக ஒரு டன் தங்கம் இந்தியாவிற்கு கிடைக்கும் என தெரிவித்திருக்கிறார். தங்கச் சுரங்கம் பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில் தங்கத்தின் விலை குறையும் என பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த தங்க சுரங்கத்தில் படிப்படியாக உற்பத்தி 1000 டன்களாக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்தியா பெட்ரோலுக்கு அடுத்தபடியாக அதிகம் இறக்குமதி செய்யும் பொருளாக தங்கம் இருக்கிறது.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!



Click it and Unblock the Notifications