தங்கத்தை தோண்டி எடுக்க இந்தியாவுக்கு சரியான நேரம் இதுதான் - அனில் அகர்வால்

தங்கத்தின் விலை எவ்வளவு உயர்ந்தாலும் நம் நாட்டவர்களுக்கு அதன் மீதான மோகம் நாளுக்கு நாள் அதிகரித்துதான் வருகிறது. தங்கத்தை நகைகளாக பயன்படுத்துகிறோம் என்பதை தாண்டி அது ஒரு சிறந்த முதலீடாகவும் கருதப்படுவதால் நம் நாட்டில் தங்க பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேசமயம், உள்நாட்டில் தங்க உற்பத்தி பெயரளவுக்கே நடைபெறுகிறது. நம் நாட்டில் குறிப்பிடத்தக்க அளவு பயன்படுத்தப்படாத தங்க படிமங்கள் இருந்தாலும், ஒழுங்குமுறை தடைகள், உள்கட்டமைப்பு இல்லாமை மற்றும் கடந்த கால கொள்கைத் தடைகள் போன்ற காரணங்களால் தங்க உற்பத்தி மிகவும் சொற்பமான அளவிலேயே உள்ளது.

எனவே உள்நாட்டின் தங்க தேவையை பூர்த்தி செய்ய இறக்குமதி செய்யப்படுகிறது. நம் நாடு நீண்ட காலமாக மிகப்பெரிய தங்க இறக்குமதி சுமையை சந்தித்து வருகிறது. தங்க இறக்குமதி அன்னிய செலாவணி இருப்புகளை பாதிக்கிறது. எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றிய கதையாக, டிரம்பின் வரி விதிப்பு, போர் பதற்றம் மற்றும் பொருளாதார நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களால் சமீபகாலமாக தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. தங்கத்தின் விலை உயர்ந்தால் தங்க இறக்குமதி செலவினமும் அதிகரிக்கும் மற்றும் அன்னிய செலவாணியும் அதிகளவில் வெளியேறும் இது மத்திய அரசு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், தங்கத்தின் விலை அதிகரித்து வருவது, உள்நாட்டில் தங்க உற்பத்தியை அதிகரிக்க இந்தியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு என்று வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்தார்.

தங்கத்தை தோண்டி எடுக்க இந்தியாவுக்கு சரியான நேரம் இதுதான் - அனில் அகர்வால்

சுரங்கம், அலுமினியம், ஆயில் மற்றும் கேஸ், மின்சாரம் மற்றும் ஸ்டீல் உள்பட துறைகளில் ஈடுபட்டு வரும் வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால். தங்கத்தின் விலை உயர்ந்து வருவதால், உள்நாட்டில் தங்கத்தை தோண்டி எடுக்க இந்தியாவுக்கு இதுவே சிறந்த நேரம் என்று அவர் தெரிவித்தார். இது தொடர்பாக அனில் அகர்வால் தனது எக்ஸ் பக்கத்தில், உலகப் பொருளாதாரத்தில் பெரும் நிச்சயமற்ற தன்மை ஏற்படும் போதெல்லாம் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டுவதை நாம் முன்பே பார்த்திக்கிறோம்.பாதுகாப்பான முதலீடாக தங்கம் பிரசாக்கிப் போகிறது. தற்போது ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,000 டாலர் என்ற அளவில் உள்ளது. ஆனால் விலை இன்னும் உயரும் என்று கணிப்புகள் எதிர்பார்க்கின்றன.

இந்தியா தனது தற்போதைய தங்க சொத்துக்களை மீட்டெடுக்கவும் புத்துயிர் பெறவும் இதுவே சிறந்த நேரம். நாம் ஒவ்வொரு ஆண்டும் 1 டன் தங்கத்தை மட்டுமே உற்பத்தி செய்கிறோம். ஆனால் சுமார் 800 டன் தங்கத்தை பயன்படுத்துகிறோம். உற்பத்திக்கும் தேவைக்கும் உள்ள வித்தியாசம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த விலையில், இந்தியாவில் அதிக தங்கத்தை உற்பத்தி செய்ய தேவையான வளங்களை முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் தயாராக இருப்பார்கள். இந்த சொத்துக்கள் ஏற்கனவே இருப்பதால், எந்த புதிய திட்டத்தையும் விட மிகக் குறைவான காலக்கெடு இருக்கும். வாய்ப்பை பயன்படுத்தி கொள்வோம் என்று பதிவு செய்து இருந்தார்.

Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+