சாமான்ய மக்கள் வங்கியில் கடன் வாங்கி திரும்பச் செலுத்த தவறினால் வங்கிகள் மூலம் அவர்கள் அனுபவிக்கும் துன்பங்களை பட்டியலிட முடியாது.
ஆனால், பல ஆயிரம் கோடிகளை மிக எளிதாக வங்கிகளில் கடனாக வாங்கிவிட்டு, அவற்றை இஷ்டத்துக்கு செலவு செய்துவிட்டு கடனைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றி மோசடி செய்யும் தொழிலதிபர்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது.
அதில் கடந்த சில ஆண்டுகளில் வங்கிகளுக்கு டிமிக்கி கொடுத்து நாட்டை விட்டு தப்பித்து ஓடி ஒளிந்திருக்கும் கதைகள் பற்றி இங்குக் காணலாம்.
விஜய் மல்லையா!
கிங்பிஷ்ஷர் மூலம் ஏகபோகமாக வாழ்ந்து வந்தார் விஜய் மல்லையா. பின்னாளில் தனது விமான நிறுவனத்தை காப்பாற்ற முடியாமல், கடன் மேல் கடன் வாங்கி பெயில் வாங்க முடியாத பிடிவாரன்ட் பிறப்பிக்கப்படும் நிலைக்கு ஆளானார். மார்ச் 2, 2016 அன்று கடன் கட்ட முடியாமல் இந்தியாவில் இருந்து தப்பித்து ஓடினார் மல்லையா.
ஐடிபிஐ வங்கியில் வாங்கிய 720 கோடி உட்பட விஜய் மல்லையா-வின் ஏர்லைன்ஸ் நிறுவனம் பல்வேறு வங்கிகளில் 9,000 கோடி கடன் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.
சுப்ரதா ராய்!
நாட்டின் மிகப்பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனமான சகாரா குழும தலைவர் சுப்ரதா ராய் சகாரா குழுமத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்க தவறியதாக கூறி 2014 ஆம் ஆண்டு கைது செய்யபட்டு, டெல்லி திகார் ஜெயிலில் 2 வருடகால சிறை தண்டனைக்குப் பிறகு, 2016 ஆம் ஆண்டு பரோலில் வெளியே வந்தார்.
இவர் அந்நிறுவனத்தில் முதலீடு செய்த முதலீட்டாளர்களிடமிருந்து சுமார் ரூ.36,000 கோடி பணத்தை திருப்பி செலுத்தாதற்காக சிறை தண்டனை அனுபவித்தார். ஆனால் இவர் நாட்டை விட்டெல்லாம் ஓடவில்லை. மாறாக செபி ஆணையத்திற்கு ரூ.12,000 கோடி திருப்பி செலுத்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது.
நீரவ் மோடி!
குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் நீரவ் மோடி, வங்கிக் கடன் மோசடியில் ஈடுபட்டு கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து லண்டனுக்கு தப்பிச் சென்றார்.
இவர் 2016 ஆம் ஆண்டு முதலே பஞ்சாம் நேஷனல் வங்கியிடமிருந்து பல போலி நிறுவனங்களின் பெயரில் அங்கு வேலை செய்த 2 ஊழியர்களின் உதவியுடன் சுமார் ரூ. 13 ஆயிரம் கோடி கடன் மோசடியில் ஈடுப்பட்டதை வங்கி தரப்பில் கண்டறியப்பட்டது. புகாரில் சிக்கிய உடனேயே வைர வியாபாரியான நிரவ் மோடி லண்டனுக்கு தப்பியோடினார்.
லண்டனில் கைது
பணத்தை திருப்பி செலுத்தாததால் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வங்கி தரப்பில் முயற்சி எடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று லண்டனில் அவர் கைது செய்யப்பட்டார். லண்டனில் உள்ள வான்ட்ஸ் வொர்த் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவரை இந்தியாவிற்கு நாடு கடத்த லண்டன் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் அதற்கான செலவுத் தொகையை நிரவ் மோடியே செலுத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து நிரவ் மோடி நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அவரின் சொத்துக்கள் அனைத்தும் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளதால், செலவு தொகையை செலுத்த போதுமான பணம் தன்னிடம் இல்லை என்றுக் கூறியுள்ளார்.
அனில் அம்பானி
இன்னும் பட்டியல் முடியவில்லை அனில் அம்பானி குடும்ப பிரச்சனை காரணமாகவும், சரியான நிர்வாகம் இல்லாததாலும், அவரின் சகோதரருடன் போட்டி போட முடியாமல் அவரின் கீழ் இருந்த நிறுவனங்கள் சரிவர இயக்க முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பதை அனைவரும் அறிந்ததே. இவ்வரிசையில் கேஃபி காஃபி டே நிறுவனரும் தப்பவில்லை, வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் அவர் தற்கொலை செய்த கொண்ட கதையையும் எல்லோரும் நன்கு அறிந்திருப்போம்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications