கடன் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அனில் அம்பானியை நம்ம எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். அதேநேரம் அவரது காதல் மனைவி டினா அம்பானி பற்றி அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவரை பற்றிய பல ருசிகரமான தகவல்களை இப்போது பார்ப்போம்.
1957 பிப்ரவரி 11 ஆம் தேதி மும்பையில் குஜராத்தி பேசும் குடும்பத்தில் டினா முனிம் (இப்போது டினா அம்பானி) பிறந்தார். மும்பையில் உள்ள MM Pupils Own Schoolல் பள்ளிப்படிப்பை முடித்த பின்பு லண்டனில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டீரியர் டிசைனில் இன்டீரியர் டிசைன் படித்தார். படிப்பை முடித்தவுடன் மாடலிங் செய்ய தொடங்கி, 1975ல் பெமினா டீன் பிரின்சஸ் இந்தியா விருதை வென்றார்.

இதனையடுத்து அவருக்கு பாலிவுட் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. 1978ல் பாலிவுட் நடிகர் தேவ் ஆனந்தின் தேஸ் பர்தேஸ் படத்தில் நடிகையாக டினா அம்பானி அறிமுகமானார். அதுமுதல் 1980களில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய கார்ஸ் (1980), பேடன் பாடன் மெய்ன் (1979), மான்பசந்த் (1980) மற்றும் சவுட்டன் (1983) போன்ற பல படங்களில் டினா முனிம் இருந்தார்.
நடிகை என்றாலே கிசுகிசுக்களில் இருந்து தப்ப முடியாது, அதற்கு அவரும் விதி விலக்கல்ல. பாலிவுட்டின் பிரபல ஹீரோவான ராஜேஷ் கன்னாவுடன் பல படங்களில் இணைந்து நடித்தார். அந்த நேரத்தில் ராஜேஷ் கன்னாவும் அவரும் காதல் வானில் சிறகடித்து பறப்பதாக வதந்திகள் பரவின. ஆனால் நாங்கள் நல்ல நண்பர்கள் மற்றும் தொழில்முறை சகாக்கள் என்று கூறினர்.
அதேநேரம் பல ஆண்டுகள் கழிந்தும் அந்த வதந்தி மட்டும் இன்னும் சுற்றி வந்து கொண்டே இருக்கிறது. டினா அம்பானி சினிமாவில் உச்சத்தில் இருந்த காலத்தில், அனில் அம்பானி ஒரு கல்யாண வீட்டில் வைத்து முதல் முறையாக அவருக்கு அறிமுகமானார். இருப்பினும் பார்த்தவுடன் அவர்கள் இடையே காதல் பத்திக் கொள்ளவில்லை. சில இடங்களில் சந்தித்து பேசினர். ஒரு சமயத்தில் அனில் அம்பானியின் காதலை டினா நிராகரித்து இருக்கிறார்.
பின்பு 1986ல் அவர்கள் இருவரும் சந்தித்தபோது காதல் மலர்ந்தது. இவர்களின் காதலை அறிந்த அம்பானி குடும்பம் நிராகரித்தது. இதனையடுத்து அவர்கள் 4 ஆண்டுகள் தொடர்பு கொள்ளவில்லை இருப்பினும் காதலித்து வந்தனர்.
அனில் அம்பானி தனக்கு வீட்டில் பார்த்த பெண்களை எல்லாம் வேண்டாம் என்று மறுத்து வந்தார். ஒரு கட்டத்தில் அம்பானி குடும்பம் அவர்களின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டியது. இதனையடுத்து 1991ல் அனில் அம்பானியை டினா அம்பானி கரம் பிடித்தார். அம்பானியை திருமணம் செய்த பிறகு சினிமாவில் இருந்து விலகி விட்டார்.
அனில் அம்பானி-டினா அம்பானி தம்பதியினருக்கு ஜெய் அன்மோல் அம்பானி மற்றும் ஜெய் அன்ஷூல் அம்பானி என இரு மகன்கள் உள்ளனர். மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக உள்ளார்.
மேலும் பல்வேறு நன்கொடை நடவடிக்கைகள் மற்றும் பல சமூக மற்றும் கலாச்சார அமைப்புகளுடன் டினா அம்பானி தொடர்பில் உள்ளார். டினா அம்பானி உச்சத்தில் இருந்தபோது அவரது சொத்து மதிப்பு ரூ.10,000 கோடி என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அவருடைய சொத்து மதிப்பு என்ன பற்றி தகவல் தெரியவில்லை.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications