தீபாவளி பண்டிகை வந்து விட்டாலே மக்கள் மனதில் உற்சாகம் பிறந்து விடும். புத்தாடை, பட்டாசு மற்றும் ரொம்ப நாளாக வீட்டுக்கு வாங்க வேண்டும் நினைத்திருந்த பொருட்களை வாங்குவார்கள். இதனால் பொதுவாக பண்டிகை காலத்தில் சாதாரண ஊக்கு முதல் கார் வரை அனைத்து பொருட்கள் விற்பனையும் களை கட்டும்.
பெரிய நிறுவனங்களும் பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல்வேறு ஆஃபர் மற்றும் தள்ளுபடி சலுகைகளை வழங்குவர். இந்த தீபாவளி சீசனிலும் பல நிறுவனங்கள் அதிரடி சலுகைகளை அறிவித்துள்ளன.

பிரபல ஐபோன் தயாரிப்பு நிறுவனமான ஆப்பிள் நிறுவனமும் தற்போது சிறப்பு தீபாவளி சலுகைகளை அறிவித்துள்ளது. ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 ப்ளஸ் வாங்குபவர்கள், 50 சதவீத தள்ளுபடி விலையில் ஏர்பாட்ஸ் வாங்கலாம். இது மட்டுமல்ல ஆப்பிள் மியூசிக்கை 6 மாதத்துக்கு அவர்கள் இலவசமாக பெறுவார்கள்.
ஐபோன் மற்றும் ஏர்பாட்ஸ் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு இது ஒரு ஜாக்பாட்டாக இருக்கும். அதேசமயம், மும்பையில் உள்ள ஆப்பிள் பி.கே.சி. மற்றும் டெல்லியில் உள்ள ஆப்பிள் சாகெட் ஆகிய ஸ்டோர்களில் வாங்குபவர்களுக்கு மட்டுமே இந்த தீபாவளி ஆஃபர் கிடைக்கும்.
மேலும், இந்த சிறப்பு தீபாவளி ஆஃபர்கள் நவம்பர் 8 முதல் 14ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது. சிறப்பு தீபாவளி ஆஃபரை உடனடி கேஷ்பேக், கல்வி அல்லது கார்ப்பரேட் பணியாளர் கொள்முதல் திட்ட விலையுடன் இணைக்க முடியாது என்பதை வாங்குபவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் குறிப்பிட்ட கையிருப்பு மட்டுமே கிடைப்பில் உள்ளன மற்றும் சப்ளை இருக்கும் வரை சலுகைகள் இருக்கும் என்று ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
பண்டிகை சலுகைகளின் ஒரு பகுதியாக ஆப்பிளின் ஆன்லைன் ஸ்டோர் எச்.டி.எஃப்.சி. வங்கி கார்டு வைத்திருப்பவர்களுக்கு இன்ஸ்டன்ட் கேஷ் பேக் வழங்குகிறது. அதன்படி, போனின் மாடலை பொறுத்து ரூ.2,000 முதல் ரூ.6,000 வரை வாடிக்கையாளர்களுக்கு பணம் மிச்சமாகும்.
இதுதவிர முன்னணி வங்கிகளில் இருந்து 3 அல்லது 6 மாதங்களுக்கு கட்டணமில்லா இ.எம்.ஐ. ஆப்ஷனை வாடிக்கையாளர்கள் பெறலாம். ஆப்பிள் மியூசிக் 3 மாதம் இலவசம், ஆப்பிள் டிவி+ a மற்றும் ஆப்பிள் Arcade ஆகியவற்றை 3 மாதங்களுக்கு கட்டணமின்றி பெறுவார்கள். இந்த சலுகை பண்டிகை காலம் வரை மட்டுமே என்று ஆப்பிள் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications