இந்தியாவில் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யவும், தனது பிராண்ட் மதிப்பை இந்திய மக்கள் மத்தியில் உயர்த்த வேண்டும் என்பதற்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்த ஆப்பிள் நிர்வாகம் மும்பை, டெல்லியில் அடுத்தடுத்து ஒரே வாரத்தில் இரு ரீடைல் கடைகளை திறந்தது. இந்த ரீடைல் ஸ்டோர் திறக்க முக்கியமான காரணம் புதிய வாடிக்கையாளர்களை பெற வேண்டும் என்பது தான்.
இதற்கு ஆப்பிள் ஸ்டோருக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு உயர்தரமான வாடிக்கையாளர் சேவையை அளிக்க வேண்டும். இதனால் ஆப்பிள் பொருட்கள் இல்லாத வாடிக்கையாளர்களை அணுகுவது முதல் சர்வீஸ் மற்றும் கூடுதல் சேவைகளுக்காக வரும் வாடிக்கையாளர்களை அணுகி அனைத்து விதிமான விளக்கத்தையும் கொடுத்து, பிராண்ட் வேல்யூவின் முழுமையான அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்பது தான் ஆப்பிள் அடிப்படை கொள்கை.

இந்த நிலையில் ஆப்பிள் புதிதாக திறந்துள்ள இரு ஸ்டோர்களிலும் முழுமையான செட்அப் உடன் ஊழியர்களை பணியில் சேர்த்துள்ளது. இப்படி ஆப்பிள் ஸ்டோரில் பணியில் சேர்ந்தவர்களில் பெரும்பாலானவர்கள் MBA, BTech பட்டதாரிகள் என்பது மட்டும் அல்லாமல் ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்களுக்கு அதிகப்படியான சம்பளமும் கொடுக்கப்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது.
ஆப்பிள் ஸ்டோரில் பணியில் அமர்த்தப்பட்டு உள்ள ஊழியர்களின் சம்பளம் துவக்கமே மாதம் 1 லட்சம் ரூபாய் என தகவல் வெளியாகியுள்ளது. ஆப்பிள் ஸ்டோர் பணியாளர்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவில் முதுகலைப்பட்டம், எம்பிஏ, எலக்ட்ரிக் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சையின்ஸ் பேகேஜிங், ரோபோட்டிக்ஸ், ஆட்டோமேஷன் இன்ஜினியிரிங், கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் தான்.
இதிலும் முக்கியமாக சில ஆப்பிள் ஸ்டோர் ஊழியர்கள் கேம்பிரிட்ஜ், கிரிபித் போன்ற முன்னணி வெளிநாட்டு பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றவர்களாகவும் உள்ளனர். மேலும் ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளில் இருந்தும் சில ஊழியர்கள் இந்திய கடைகளுக்கு மாறியுள்ளனர்.

ஆப்பிள் BKC, ஆப்பிள் Saket ஆகிய இரு கடைகளை நிர்வாகம் செய்ய ஆப்பிள் சுமார் 170 பேரை பணியில் அமர்த்தியுள்ளது. இந்த ஊழியர்கள் சுமார் 15 மொழிகள் பேசக்கூடியவர்கள் என்பது கூடுதல் முக்கியமான விஷயம்.
மாதம் 1 லட்சம் ரூபாய் சம்பளத்தை தாண்டி ஆப்பிள் நிறுவனம் தனது 170 ஊழியர்களுக்கும் ஹெல்த் மற்றும் வெல்னஸ் மெடிக்கல் திட்டம், சம்பளத்துடன் கூடிய விடுமுறை, கல்வி கட்டணம், பங்கு வழங்கீடு, ஆப்பிள் பொருட்கள் மீதான டிஸ்கவுன்ட் என பல விஷயங்களை அளிக்க உள்ளது.


Click it and Unblock the Notifications