சென்னை: நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில் 1.3 சதவிதம் அதிகரித்துள்ளது. இது மார்ச் மாதத்தில் 0.53 சதவீதமாக இருந்தது.
மார்ச் மாதத்தில் 0.53 சதவீதமாக இருந்த மொத்த விலை பணவீக்கம் , ஏப்ரல் மாதத்தில் 1.3 சதவிதம் அதிகரித்துள்ளது. உணவு மற்றும் எரிபொருள் விலைகளால், இந்த உயர்வு ஏற்பட்டிருக்கிறது என்று கூறப்படுகிறது.

அரிசி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகளின் பணவீக்கமும் அதிகரித்துள்ளன. உணவுப்பிரிவு பணவீக்கம், மார்ச் மாதம் 8.52 சதவீதமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் 8.70 சதவீதமாக உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு எரிபொருள் பணவீக்கத்திற்கான காரணமாக உள்ளது. புவிசார் பதட்டங்கள் காரணமாக இனிவரும் நாட்களிலும் பணவீக்கத்தின் விகிதம் அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
செவ்வாய்க்கிழமை அன்று வெளியிடப்பட்ட தரவுகளின் படி, உணவு பணவீக்கம் மற்றும் எரிபொருள், இந்த மொத்த விலை பணவீக்கத்தைக், கடந்த 13 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்த்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது கடந்த மார்ச் மாதம் இது 0.53 சதவீதமாக இருந்தது. ஆனால் ஏப்ரல் மாதத்தில் 1.26 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஏப்ரல் மாதத்தில் மொத்த விலைக் குறியீடு 0.8 சதவீதம் அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை 2.7 சதவீதம் உயர்ந்துள்ளது. உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் விலை 0.5 சதவீதம் உயர்ந்துள்ளது. இதுவே மொத்த விலை பணவீக்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகரிப்புக்கான காரணமாக உள்ளது.
அரிசி, பருப்பு வகைகள் மற்றும் காய்கறிகள் தொடர்ந்து இரட்டை இலக்க பணவீக்கத்தை தொடர்ந்து கொண்டிருந்ததால், உணவுப்பிரிவு பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில், கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு 8.70 சதவீதமாக அதிகரித்துள்ளது.
நெற்கதிர்களின் விலை ஏப்ரல் மாதத்தில் 12.03 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது ஏப்ரல் மாதத்தில் 11.74 சதவீதமாக இருந்தது. அதேபோல காய்கறிகளின் பணவீக்கமும் மார்ச் மாதத்தில் 19.5 சதவீதத்திலிருந்து, ஏப்ரல் மாதத்தில் 23.6 சதவீதமாக அதிகரித்துள்ளது.
காய்கறிகளில், குறிப்பாக உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயத்தின் விலை கடந்த மார்ச் மாதத்தில் 53 சதவீதம் மற்றும் 57 சதவீதமாக இருந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்தில் அதன் விலை 72 சதவீதம் மற்றும் 59.8 சதவீதமாக உயர்ந்துள்ளது.
புவிசார் அரசியல் பதட்டங்களின் காரணமாக இனி வரும் மாதங்களிலும் மொத்த பண வீக்கத்தின் விகிதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை ஏப்ரல் மாதத்தில் பேரலுக்கு $ 90 டாலரைத் தொட்டது. இதுவும் மொத்த விலை பணவீக்கம் அதிகரிக்கக் காரணமானது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications