தொழில்நுட்ப துறையில் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது 2024 ஆம் ஆண்டிலும் தொடர்வது பெரும் சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் கிட்டத்தட்ட 50 நிறுவனங்கள் 21,473 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளனர். அதாவது ஒரு நாளுக்கு 715 பேர் பணிநீக்கம்.
டெஸ்லா நிறுவனம், துருக்கியை சேர்ந்த டெலிவரி சர்வீஸ் நிறுவனமான கெட்டிர் (Getir) மற்றும் ஆப்பிள் ஆகிய மூன்று நிறுவனங்கள் தான் அதிகப்படியான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன.

குறிப்பாக எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம் 14,000 பேரை லே ஆஃப் செய்து வீட்டிற்கு அனுப்பி உள்ளது. ஆப்பிள் நிறுவனம் 600 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. அதேபோல கெட்டிர் நிறுவனம் அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் தனது சேவையை நிறுத்திக் கொண்டது .இதன் மூலம் 6,000 பேர் தங்களது வேலையை இழந்துள்ளனர்.
2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து தற்போது வரை 271 நிறுவனங்கள் 78,572 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. ஜனவரி மாதத்தில் அதிகபட்சமாக 122 நிறுவனங்கள் 34,107 பேரை வேலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பி விட்டன.
பிப்ரவரி மாதத்தில் 78 நிறுவனங்கள் 15,589 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. மார்ச் மாதத்தில் 37 நிறுவனங்கள் 7,4ஒ3 ஊழியர்களை பணியில் இருந்து நீக்கி உள்ளன.
2024 ஆம் ஆண்டு தொடங்கியதில் இருந்து ஜனவரி மாதத்தில் தான் அதிகளவிலான நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையிலான ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன. இதுவே மார்ச் மாதத்தில் குறைந்திருந்தது. தற்போது ஏப்ரல் மாதத்தில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிவிட்டது.
டெஸ்லா நிறுவனம் உலகம் முழுவதும் கடுமையான போட்டிகளை எதிர்கொண்டு வருகிறது. மேலும் அந்த நிறுவனத்தின் வாகன விற்பனை என்பது குறைந்துள்ளது .இந்த சூழலில் டெஸ்லா நிறுவனம் ஊழியர்களை பணி நீக்கம் செய்திருப்பதாக நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கெட்டிர் நிறுவனம் ஒரு காலத்தில் 12 மில்லியன் டாலர்கள் என மதிப்பு கொண்டு இருந்தது. ஆனால் நிறுவனம் கடுமையான நஷ்டத்தை சந்தித்ததோடு அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் சேவைகளை நிறுத்திக் கொண்டது. இனி சொந்த நாடான துருக்கியில் மட்டும் கவனம் செலுத்தப் போவதாக கூறியுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவை சேர்ந்த சில நிறுவனங்களும் கூட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளன பெங்களூருவை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வந்த ஹெல்த் டெக் ஸ்டார்ட் அப் நிறுவனமான ஹெல்திஃபை 150 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. அதேபோல குட் கிளாம் குரூப் 150 பேரை பணியில் இருந்து நீக்கி இருக்கிறது. புகழ்பெற்ற கல்வி சார்ந்த நிறுவனமான பைஜூஸ் 500 பேரை பணியில் இருந்து நீக்கியுள்ளது.
Story written by: Devika
More From GoodReturns

இந்திய குடும்பங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? மொத்தமா Gen Z பசங்க கையில எடுத்துகிட்டாங்க!!

வங்கி வேலைகளிலும் கை வைக்கும் ஏஐ..!! முதல் கட்டமாக 20,000 பேரின் வேலை காலி..!!

ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அப்டேட்.. 3 மாதத்திற்கான பொருள் ஒரே நேரத்தில்.. மத்திய அரசின் முடிவு

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

1986-ல் ஒரு புல்லட் இவ்வளவு தானா? வைரலாகும் பழைய பில்! அப்பவே கெத்து தான்!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!



Click it and Unblock the Notifications