இந்திய பாரம்பரியத்தில் தங்கம் வாங்குவது என்பது மிகவும் அதிர்ஷ்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக தீபாவளி மற்றும் இதர பண்டிகை காலங்களில் தங்கத்தை செல்வம் மற்றும் செழிப்பின் சின்னமாக மக்கள் கருதுகின்றனர். இருப்பினும் பண்டிகை காலங்களில் தங்கம் வாங்குவதற்கு முன்பு அவற்றின் தூய்மையை கண்டறிவதும் அவசியமானது. ஏனெனில் இந்த நாட்களில் மோசடியில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். எந்தவிதமான மோசடிகளையும் தவிர்க்க ஹால்மார்க் முத்திரையுடன் கூடிய தங்க நகைகளை நம்பகமான நகைக்கடைக்காரர்களிடமிருந்து வாங்க வேண்டும். உண்மையான தங்கத்தை அடையாளம் காண சில டிப்ஸ்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தங்கத்தின் தூய்மை: 24 கேரட் தங்கம் தான் இருப்பதிலேயே தூய்மையான தங்கம். ஆனால் அதில் தங்க நகைகளை தயாரிக்க முடியாது. ஏனெனில் இது மிகவும் மென்மையாக இருக்கும். எனவே வளைத்து அவற்றை முறுக்கி நகைகள் செய்ய முடியாது. ஒரு நகைக்கடைக்காரர் 24 கேரட் தங்கத்தில் நகைகளை தருவதாக கூறினால் அவர் உங்களை ஏமாற்றுகிறார் என்று அர்த்தம்.

தங்க நகைகள் பொதுவாக 14 முதல் 22 கேரட் வரையிலான தங்கத்தில் தயாரிக்கப்படுகின்றன. இதில் அதிகபட்சமாக 91.6 சதவீதம் வரை தங்கம் இருக்கும். இதில் காப்பர், சிங்க், சில்வர் போன்ற பிற உலோகங்கள் தங்க நகைகளுக்கு வலிமையை வழங்க கூடுதலாக சேர்க்கப்படுகின்றன, எனவே தங்கம் வாங்குவதற்கு முன்பு எப்போதும் கேரட்டை சரி பார்க்கவும்.
BIS ஸ்டாண்டர்ட் மார்க்: இந்த குறியீடு முக்கோண வடிவில் இருக்கும். அதில் "BIS" என்று எழுதப்பட்டிருக்கும். இந்தக் குறியீடு தங்கத்தின் தூய்மைக்கு சான்றாகும். தங்கம் BIS அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதிக்கப்பட்டது மற்றும் பரிந்துரைக்கப்பட்ட தங்கத்தின் அளவை பூர்த்தி செய்தது என்று அர்த்தம்.
HUID நம்பர்: இது 6 இலக்க ஹால்மார்க் தனிப்பட்ட அடையாள எண் (HUID), இது அனைத்து ஹால்மார்க் செய்யப்பட்ட தங்கத்திலும் காணப்படும். இந்த எண் நகை உற்பத்தியாளர் மற்றும் ஹால்மார்க்கிங் மையத்தை கண்காணிக்க உதவுகிறது. தங்க நகைகளை வாங்கும் போது இதையும் கண்டிப்பாக பாருங்கள்.
பியூரிட்டி:
22K (916)- 91.6% தூய தங்கம்
18K (750)- 75% தூய தங்கம்
14K (585)- 58.5 சதவீதம் தங்கம்
ஹால்மார்க்கிங் சென்டர் லோகோ: தங்க நகைகளில் நகை வியாபாரியின் அடையாளம் மற்றும் ஹால்மார்க்கிங் சென்டர் லோகோவும் இருக்க வேண்டும். ஒவ்வொரு பிஐஎஸ் சான்றளிக்கப்பட்ட நகைக்கடைகளுக்கும் நகைகளில் தனித்தனி அடையாளம் இருக்கும். அதுமட்டுமின்றி அங்கீகாரம் பெற்ற மையத்தில் நகைகளின் தூய்மை சோதிக்கப்பட்டதை ஹால்மார்கிங் லோகோ குறிக்கிறது.
மொபைல் அப்ளிகேஷனை பயன்படுத்தி தங்க நகையின் தூய்மையை எப்படி சரி பார்ப்பது?: நீங்கள் பிஐஎஸ் கேர் அப்ளிகேஷனை google play store அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். இந்த அப்ளிகேஷன் இந்திய தரநிலைகளின் பணியகத்தால் உருவாக்கப்பட்டது. இது தங்கம் மற்றும் வெள்ளி உள்பட பல பொருட்களின் தரம் மற்றும் செல்லுபடி ஆகியவற்றை சரி பார்க்க உதவுகிறது.
ஸ்டெப் 1: நீங்கள் வாங்கும் தங்கம் உண்மையானதாக இருந்தால் "Verify HUID" என்ற விருப்பத்தைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 2: அடுத்து, உங்கள் நகைகளில் பொறிக்கப்பட்டுள்ள ஆறு இலக்க HUID குறியீட்டை என்டர் செய்யவும்.
நகைகள் உண்மையானதாக இருந்தால், நகைகளின் தூய்மை, நீங்கள் வாங்கிய நகையின் பெயர் போன்ற தகவல்கள் ஆப்பில் காண்பிக்கப்படும்.
More From GoodReturns

கோயம்புத்தூரில் தங்கம் விலை அதிரடி உயர்வு.. இனி தங்கம், வெள்ளியில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்குமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஈரான் போர் தொடங்கியதில் இருந்து முதன்முறையாக நடந்த விலை மாற்றம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

மதுரை-யில் இன்று தங்கம் விலை உயர்வு.. விலை உயர்வுக்கு என்ன காரணம்..?

இறங்கிய வேகத்திலேயே ஏறும் தங்கம் விலை!! சாமானிய மக்களுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி!!

கோயம்புத்தூர் தங்கம் விலை: இன்று அதிரடி சரிவு! மார்ச் 6 நிலவரம், முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டியவை

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் வாங்க பொன்னான வாய்ப்பு!

கோயம்புத்தூர் தங்கம் விலை: தொழில் நகரத்தில் இன்று தங்கம் விலை உயர்ந்ததா ? குறைந்ததா?

தங்கத்தை கைவிடுகிறார்களா இந்தியர்கள்? பிப்ரவரியில் நடந்த தலைகீழ் மாற்றம்!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?



Click it and Unblock the Notifications