நீங்கள் நூற்றுக்கணக்கான தொழில்முனைவோரின் பிரம்மிப்பான வெற்றிக்கதைகள் படித்து இருப்பீர்கள். அதில் சிலரது வாழ்க்கை பயணம் மிகவும் அசாதரணமாக இருப்பதை அறிந்து ஆச்சரியம் அடைந்து இருப்பீர்கள்.
அர்ஜூன் அலுவாலியாவின் வெற்றி பயணத்தை படித்தால் அது போன்ற உணர்வு உங்களுக்கு நிச்சயம் ஏற்படும். இவர் பணம் கொட்டிய அமெரிக்க வேலை, சொகுசு மற்றும் வசதியான வாழ்க்கையை துறந்து விட்டு, இந்தியாவுக்கு திரும்பி கிராமத்தில் வாழ்ந்து ரூ.2,000 கோடி நிதிதொழில்நுட்ப நிறுவனத்தை உருவாக்கியுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்து வளர்ந்தவர் அர்ஜூன் அலுவாலியா. இவர் அமெரிக்காவில் டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகத்தில் நிதியியல் பட்டம் பெற்றவர். படிப்பு முடிந்தவுடன் இந்தியா திரும்பிய அவர் 2013ல் அர்த் கேபிட்டல் என்ற நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார்.
சுமார் 3 மாதங்கள் மட்டுமே அந்த வேலையில் நீடித்தார். அதன் பிறகு அமெரிக்காவுக்கு கிளம்பி சென்று பல நிறுவனங்களில் பணிபுரிந்தார். கடைசியாக அவர் நியூயார்க்கில் உள்ள அபிராஜ் குழுமத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்து கொண்டிருந்தார்.
அர்ஜூன் அலுவாலியாவின் மும்பையின் தாராவியை சேர்ந்த ஒரு பெண்மணி வேலை பார்த்து வந்தார். அந்த பணிப்பெண் ஒரு தனியார் நிதி சேவை நிறுவனத்தில் மொபைல் போன் வாங்குவதற்காக கடன் வாங்கியதை அறிந்தார். இது அவரது மூளையில் ஒரு வணிக யோசனையை தூண்டியது.
இந்தியாவில் உள்ள விவசாயிகள், கடன் சுறாக்கள் மற்றும் முறைசாரா அமைப்பான கடன் வழங்குபவர்களின் வலையில் விழாமல் இருக்க நாம் ஒரு நிதியுதவி பெறும் இடத்தை தொடங்கினால் என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து 2017ல் அமெரிக்காவில் அபிராஜ் குழுமத்தில் பார்த்த வேலையை ராஜினாமா செய்து விட்டு இந்தியா திரும்பினார். அப்போது அவரது வயது 27. அவர் தனியாக வரவில்லை, இந்திய சந்தையில் ஒரு வணிகத்தை தொடங்க டெக்சாஸ் ஏ & எம் பல்கலைக்கழகத்தில் தன்னுடன் படித்த அமெரிக்க நண்பரையும் கூடவே அழைத்து வந்தார்.
இந்தியா திரும்பியதும் மகாராஷ்டிராவில் உள்ள ஒரு கிராமத்தில் ஆறு மாதங்கள் தங்கி வாழ்ந்தார். அங்கு அவர் விவசாய சமூகங்களின் வாழ்க்கை அறிந்து கொண்டார். பின்பு கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் 8 மாதங்களாக சோதனை அடிப்படையில் தனது திட்டத்தை மேற்கொண்டார். இது வெற்றியடைந்ததையடுத்து அந்த ஆண்டு இறுதியில் கிராமப்புற நிதி தொழில்நுட்ப நிறுவனமான ஜெய் கிசான் நிறுவனத்தை தொடங்கினார்.
இன்று ஜெய் கிசான் நிறுவனம் தனது மொபைல் மற்றும் இணையதளம் மூலம் பல்வேறு கடன் நிறுவனங்களில் இருந்து கிராமப்புற கடன் வாங்குபவர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வருமானம் ஈட்டும் கடன்களை வழங்குகிறது.
ஜெய் கிசான் நிறுவனம் மொத்தம் ரூ.664 கோடி நிதி திரட்டியது. இவரது நிறுவனத்தின் மதிப்பு ரூ.2,000 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. அர்ஜூன் நிறுவனத்தில் யாரா குரோத் வென்ச்சர்ஸ், ஜி.எம்.ஓ.வென்ச்சர் பார்ட்னர்ஸ் மற்றும் டி.ஜி. டெய்வா வென்ச்சர்ஸ் உள்ளிட்ட முதலீட்டாளர்கள் முதலீடு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications