இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் ஏறுமுகத்தில் உள்ளது. குறிப்பாக சமீபகாலமாக பங்குச் சந்தைகளில் அடிக்கடி புதிய உச்சத்தை தொட்டு வருகின்றன. முதலீட்டாளர்கள் பங்குகளில் முதலீட்டை அதிகரித்து வருவது, நிறுவனங்களின் சிறப்பான நிதி நிலை, சாதகமான நாட்டின் பொருளாதார நிலவரம் போன்ற காரணங்களால் பங்குச் சந்தைகளில் வர்த்தகம் விறுவிறுப்பாக உள்ளது.
இதனால் பல நிறுவன பங்குகளின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் ஒரு பென்னி ஸ்டாக் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. மூன்றே வாரத்தில் அந்த பென்னி பங்கு மல்டிபேக்கர் பங்காக மாறி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

அந்த பென்னி ஸ்டாக், இந்தியாவின் முன்னணி லாஜிஸ்டிக்ஸ் மற்றும் சப்ளை மேலாண்மை சேவை வழங்கும் நிறுவனமான அர்ஷியா லிமிடெட். மும்பை பங்குச் சந்தையில் கடந்த நவம்பர் 29ம் தேதியன்று அர்ஷியா நிறுவன பங்கின் விலை 52 வார குறைந்த அளவான ரூ.3.46க்கு சென்றது. ஆனால் அதன் பிறகு அந்த பங்கின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலான கடந்த 18 வர்த்தக தினங்களில் அர்ஷியா பங்கின் விலை 17 முறை அப்பர் சர்க்கியூட்டை தொட்டது. மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் தொடக்கத்தில் இப்பங் கின் விலை ரூ.8.69ஆக இருந்தது.
இவ்வளவு குறுகிய காலத்தில் அர்ஷியா பங்கு விலை பெரிய ஏற்றம் கண்டு உள்ளதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அர்ஷியா நிறுவனத்தின் புரோமோட்டரான அஜய் மிட்டல் அண்மையில் பங்குச் சந்தைகளில் (என்.எஸ்.இ. மற்றும் பி.எஸ்.இ.) அடமானம் வைக்கப்பட்ட பங்குகள் விற்பனை செய்யப்பட்ட குறித்த தகவல்களை தெரிவித்தார்.
எடெல்வீஸ் அசெட்ஸ் ரீகன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி நிறுவனம் அர்ஷியா நிறுவனத்தின் 2.50 கோடி பங்குகளை விற்பனை செய்தது. இது மொத்த பங்கு மூலதனத்தில் 7.59 சதவீதமாகும். நிதியுதவி ஒப்பந்தத்தின் விதிமுறைகளை பின்பற்றி, 2023 டிசம்பர் 21 மற்றும் 22ம் தேதிகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் அர்ஷியா நிறுவனத்துக்கு ரூ.181.48 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2023 செப்டம்பர் காலாண்டில் அர்ஷியா நிறுவனம் வருவாயாக ரூ.3.44 கோடி ஈட்டியுள்ளது. இருப்பினும் அந்த காலாண்டில் ரூ.32.93 கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளது. முந்தைய ஜூன் காலாண்டுடன் ஒப்பிடுகையில் அந்நிறுவனத்தின் நஷ்டம் பாதிக்கு மேல் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications