டெல்லி ஐ.ஐ.டி. பட்டதாரியான அஷ்னீர் குரோவர் 2018ல் நிதி தொழில்நுட்ப நிறுவனமான பாரத்பே நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனம் குறுகிய காலத்தில் அசுர வளர்ச்சி அடைந்து யுனிகார்ன் நிறுவன நிலையை எட்டியது.
செக்யோயா கேப்பிடல் போன்ற பல வென்ச்சர் கேப்பிடல் நிறுவனங்கள் போட்டி போட்டு பாரத்பே நிறுவனத்தில முதலீடு செய்துள்ளன. 4 ஆண்டுகள் எந்த பிரச்சினையும் இல்லாமல் போய்கொண்டிருந்த நிறுவனம் முதல் முறையாக கடந்த ஆண்டு சர்ச்சையில் சிக்கியது.

தனக்கும் தனது மனைவி மாதுரி ஜெயின் குரோவருக்கும் நைகா ஐ.பி.ஓ.வுக்கான ஒதுக்கீடு மற்றும் நிதியை பெற தவறியதற்காக கோடக் குழும ஊழியரை தகாத வார்த்தைகளில் பேசியதாகவும் மற்றும் மிரட்டல் விடுத்ததாகவும் பாரத்பே நிறுவனர் அஷ்னீர் குரோவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
இதனையடுத்து குரோவர் தானாக முன்வந்து விடுப்பு எடுத்தார் பின்னர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பதவியை ராஜினாமா செய்தார். இந்த சூழ்நிலையில், அவரது மனைவியும், முன்னாள் கட்டுப்பாட்டு தலைவருமான மாதுரி ஜெயின், நிறுவன நிதியை தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் நீக்கப்பட்டார்.
கடந்த ஆண்டு பாரத்பே நிறுவனம் அஷ்னீர் மற்றும் குடும்பத்தினருக்கு எதிராக பொருளாதார குற்றப்பிரிவில் மோசடி, கிரிமினல் நம்பிக்கை மீறல் உள்பட 17 பிரிவுகளின் கீழ் கிரிமினல் புகாரை பதிவு செய்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டால் குரோவர் தம்பதிகள் 10 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.
மேலும், அஷ்னீர் குரோவர், அவரது மனைவி மாதுரி ஜெயின் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக, நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாக கூறி ரூ.88 கோடி நஷ்ட ஈடு கேட்டு பாரத்பே நிறுவனம் சிவில் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில் ஆட்சேர்ப்பு சேவைகள் என்ற பெயரில் அஷ்னீர் குரோவர், பாரத்பே நிறுவனத்தின் பணத்தை தனது குடும்பத்துக்கு மாற்றியுள்ளார் என்று செபியில் பதிவு செய்யப்பட்ட போர்ட்ஃபோலியோ மேலாண்மை சேவை வழங்கும் நிறுவனமான கேப்பிடல்மைண்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தீபக் ஷெனாய் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸில், ஆட்சேர்ப்பு சேவைகள் என்ற பெயரில் அஷ்னீர் குரோவர், நிறுவனத்தில் இருந்து பணத்தை முறைகேடாக தனது குடும்பத்துக்கு மாற்றியுள்ளார். ஆட்சேர்ப்பு சேவைகள் என்பது நிறுவனங்கள் பணத்தை எடுப்பதற்கான நன்கு அறியப்பட்ட வழிமுறையாகும்.
அப்போது இல்லாத வங்கி கணக்குகளை கொண்ட இன்வாய்ஸ்களை அவர்கள் பின்தேதியிட்டு இதனை முட்டாள்தனமாக செய்தனர். அஷ்னீர் குரோவர் அல்லது அவரது மனைவிக்கு சொந்தமான அல்லது இணைக்கப்பட்ட போலி நிறுவனங்களுக்கு ரூ.53 கோடிக்கு மேல் செலுத்தப்பட்டதாக அப்போதைய செய்திகள் கூறுகின்றன.
கோடிக் கணக்கில் பணம் பெற்று உள்ளபோதிலும், இந்த நிறுவனங்கள் ஜி.எஸ்.டி.யை கூட தாக்கல் செய்யவில்லை, இது முழு நிறுவனத்தையும் வீழ்த்தியது. ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், குறைந்தபட்சம் ஆட்சேர்ப்பு தொடர்பான பேமெண்ட்ஸ் மற்றும் நிறுவனர்களுக்கான இணைப்புகள் பற்றி வருடாந்திர சுய மதிப்பீட்டை செய்வோம் என்ற ஒரு கொள்கையையாவது வைத்துள்ளார்களா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்று பதிவு செய்து இருந்தார்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications