இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழகம் உட்பட 5 மாநிலங்களின் தேர்தல் முடிவுகளை 2026 ஆம் ஆண்டின் மே 4-ஆம் தேதியான இன்றைய தினம் அறிவிக்க இருக்கிறது. அப்படி இருக்கையில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, அசாம் மற்றும் மேற்குவங்கம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த ஒரு சில நாட்களாகவே அனல் பறக்கும் விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இன்று அதற்கான முடிவு என்ன என்பது தெரிந்துவிடும்.
இதனால் பல்வேறு வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த பாதுகாப்பு வசதியும் போடப்பட்டுள்ளது. இன்றைய தினம் மாலை வருவதற்குள் மக்களின் தீர்ப்பு என்ன? என்பது தெள்ளத் தெளிவாக தெரிய வந்துவிடும். சரி வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு, இந்த செயல்முறை எப்படி நடைபெறுகிறது என்பது குறித்து பார்ப்போம்.

வாக்கு எண்ணிக்கை எப்படி நடைபெறும்?: தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு இருக்கும் அந்த பரபரப்பான சில மணி நேரங்கள் எப்படி நகரும்? பொதுவாக இந்த 5 மாநிலங்களிலும் காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை செயல்முறை தொடங்கிவிடும்.
தனித்தனி வாக்கு எண்ணிக்கை மையங்கள்: ஒவ்வொரு தொகுதியிலும் தனித்தனியாக வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த மையத்திற்குள் இந்தியத் தேர்தல் ஆணையம் அனுமதித்த அரசு பணியாளர்கள் மற்றும் கவுண்டிங் ஏஜெண்டுகளுக்கு மட்டுமே அனுமதி. இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து தொகுதிகளிலும் இதே செயல்முறை தான்.
தபால் வாக்குகள்: மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் என்று சொல்லப்படுகிற எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்களில் (EVMs) பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணப்படுவதற்கு முன்பு வழக்கம் போல போஸ்டல் வாக்குகள் எண்ணப்படும். அதாவது தபால் வாக்குகள் முதலில் எண்ணப்படும். முதலில் நீங்கள் தெரிந்து கொள்ளும் ஆரம்பகட்ட தேர்தல் முடிவுகள் இந்த தபால் வாக்கின் அடிப்படையில் தான் இருக்கும்.
எலக்ட்ரானிக் ஓட்டிங் மெஷின்களின் வாக்குகள்: தபால் வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட்ட பிறகு பாதுகாப்பான அறைகளில் வைக்கப்பட்டிருக்கும் எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷின்கள் ஒவ்வொன்றாக வெளியே கொண்டுவரப்பட்டு வாக்குகள் எண்ணப்படும். வாக்கு எண்ணும் இயந்திரங்கள் வந்தவுடன் ஒவ்வொரு இயந்திரத்தின் சீலும் பிரிக்கப்படாமல் இருக்கிறதா? என்று கவுண்டிங் ஏஜென்ட்கள் சரி பார்ப்பார்கள்.
அதன் பிறகு இரண்டு விஷயங்கள் சரிபார்க்கப்படும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை பொருத்தவரையில் இரண்டு விஷயங்கள் இருக்கும். ஒன்று பேலட் யூனிட். இதில் தான் நம் வாக்குப் பதிவு செய்கிறோம். மற்றொன்று நாம் பதிவு செய்யும் வாக்குகளை சேமிக்கும் கண்ட்ரோல் யூனிட். தற்போது வாக்குகளின் எண்ணிக்கையை தீர்மானிக்க இந்த கண்ட்ரோல் யூனிட் தான் பயன்படுத்தப்படும். முடிவை தெரிந்து கொள்ள கண்ட்ரோல் யூனிட்டில் ஒரு டிஸ்ப்ளே இருக்கும். அதில் ஒவ்வொரு தேர்தல் வேட்பாளருக்கும் எவ்வளவு வாக்குகள் கிடைத்திருக்கிறது என்ற விபரங்கள் திரையில் வரிசையாக தோன்றும்.
விவிபேட் (VVPAT)சரிபார்ப்பு: வாக்கு எண்ணிக்கை நடைமுறையில் இருக்கும் உண்மை தன்மையை உறுதி செய்வதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடிகளில் இருந்தும் பெறப்பட்ட சீட்டுகள் சரி பார்க்கப்படும். அதாவது கண்ட்ரோல் யூனிட்டில் டிஸ்ப்ளே ஆகும் வேட்பாளர்களின் வாக்குகளும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பெறப்பட்ட சீட்டுகளும் ஒன்றாக இருக்கிறதா என்பது உறுதி செய்யப்படும்.
தேர்தல் முடிவின் நிலவரம்: இதேபோல் வாக்கு எண்ணிக்கை பல்வேறு சுற்றுகளாக நடைபெறும். அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு, யார் எந்த தொகுதியில் அதிக வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்பது அறிவிக்கப்படும். தேர்தல் அதிகாரி இந்த முடிவை அறிவிப்பார்.


Click it and Unblock the Notifications

