டெல்லி: இந்தியாவில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வு காலத்தில் ஓய்வூதியம் கிடைத்துவிடுகிறது, தனியார் நிறுவன ஊழியர்களுக்கும் பிஎஃப் மூலம் மாதாந்திர ஓய்வூதிய தொகை உறுதி செய்யப்படுகிறது. ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் என்பது கேள்விக்குறியாக இருந்தது.
இந்நிலையில் குறைந்த வருமானம் கொண்டவர்களும் தங்கள் ஓய்வு காலத்தை சிறப்பாக அமைத்து கொள்ளும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்த ஒரு திட்டம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்தியாவில் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் ஓய்வூதியத்திற்காக பதிவு செய்திருப்பவர்களின் எண்ணிக்கை 7.65 கோடிகளாக உயர்ந்திருக்கிறது.

குறைந்த வருமானம் கொண்ட நபர்களுக்கும் பாதுகாப்பான ஓய்வு காலத்தை உறுதி செய்வதற்காகவும் அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்காகவும் மத்திய அரசு கொண்டு வந்த திட்டம் தான் அடல் பென்ஷன் யோஜனா. கடந்த 2015 ஆம் ஆண்டு மே 9ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில் மாதத்தோறும் 1000 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரை ஓய்வூதியம் கிடைக்கும்.
இந்த திட்டத்தில் இணைந்தவர்கள் 60 வயது ஆகும்போது தாங்கள் செய்த பங்களிப்புக்கு ஏற்ப தங்களுடைய மாதாந்திர ஓய்வூதிய தொகையை பெற தொடங்குவார்கள். மத்திய அரசின் தேசிய ஓய்வூதிய கட்டமைப்பின் கீழ் ஓய்வூதிய நிதிய ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் இந்த அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தை கண்காணிக்கிறது.
அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணையக்கூடிய சந்தாதாரர்கள் மாதாந்திர ,காலாண்டு ,அரையாண்டு ஆகிய முறையில் தங்களுடைய ஓய்வூதிய காலத்திற்கான தொகையை பங்களிப்பாக செய்ய முடியும். இந்த திட்டத்தில் குறிப்பிட தகுந்த வகையில் பெண்களின் பங்களிப்பு தான் அதிகமாக இருக்கிறதாம். தற்போது இந்த திட்டத்தில் சந்தாதாரர்களாக இணைந்திருக்கும் 7.65 கோடி பேரில் 48% பேர் பெண்கள் தான்.
கடந்த நிதியாண்டில் புதிதாக இந்த திட்டத்தில் இணைந்தவர்களில் 55% பேர் பெண்கள் என அரசு வெளியிட்டுள்ள தரவுகள் குறிப்பிடுகின்றன. பெண்கள் மத்தியில் ஓய்வுகாலம் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பது இதன் மூலம் தெரிய வருகிறது. இந்தியாவில் 18 வயதில் இருந்து 40 வயதிற்கு உட்பட்டவர்கள் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தின் கீழ் இணையலாம்.
இதில் குறைந்தது 20 ஆண்டுகளாவது பங்களிப்பு செய்ய வேண்டும். உதாரணமாக 29 வயதாக கூடிய ஒரு நபர் அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைகிறார். மாதந்தோறும் 1, 000 ரூபாயை ஓய்வூதியமாக பெற வேண்டுமென அவர் விரும்பினால் அடுத்த 31 ஆண்டுகளுக்கு மாதம் 106 ரூபாய் செலுத்த வேண்டும்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications