ஏடிஎம்-மில் பணம் எடுத்தல் மற்றும் ஏடிஎம் கார்டு மூலம் செய்யப்படும் இதர பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிமுறைகளை ஆர்பிஐ வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளுக்கு ஏற்பவே வங்கிகள் நடந்து கொள்ள வேண்டும். ஏடிஎம் கட்டணங்கள், இலவச பரிவர்த்தனைகள், காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்டுகள் போன்றவற்றில் சில மாற்றங்கள் வரவுள்ளது. அதிக அளவில் ஏடிஎம் பயன்படுத்துபவர்கள் இதை கண்டிப்பாக தெரிந்து கொள்ள வேண்டும்.
எத்தனை முறை இலவசமாக ஏடிஎம் பயன்படுத்தலாம்?: ஆர்பிஐ வெளியிட்டுள்ள தகவல்களின் படி.. மாதம் தோறும் வழங்கப்படும் இலவச ஏடிஎம் பயன்பாட்டு வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. நீங்கள் வங்கி கணக்கு வைத்திருக்கும் ஏடிஎம்மில் மாதத்திற்கு 5 முறை இலவசமாக பணம் எடுக்கலாம். இதில் பணம் எடுப்பது மட்டுமின்றி பேலன்ஸ் பார்ப்பது போன்ற சேவைகளும் அடங்கும்.

அதுவே பிற வங்கி ஏடிஎம்களை பயன்படுத்தினால் மெட்ரோ நகரங்களில் மாதம் 3 முறையும் மற்ற நகரங்களில் மாதம் 5 முறையும் இலவசமாகப் பயன்படுத்தலாம். இதைத் தாண்டி பயன்படுத்தும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் உங்களுடைய வங்கிகள் 23 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கும். இதற்கு வரியும் உண்டு.
வாடிக்கையாளர்களுக்கு தெளிவான தகவல்களை வழங்க வேண்டும்: வாடிக்கையாளர்களுக்கு இன்னும் எத்தனை முறை இலவசமாக ஏடிஎம் பரிவர்த்தனை செய்யலாம்?, இலவச வரம்பு முடிந்துவிட்டால் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என்ற விவரங்களை வங்கிகள் தெரியப்படுத்த வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. மேலும் தொழில்நுட்ப கோளாறு அல்லது ஏடிஎம்மில் பணம் இல்லாத பட்சத்தில் பரிவர்த்தனை தோல்வியடைந்தால் அது இலவச பரிவர்த்தனை வரம்பில் கணக்கிடப்படாது. இதற்கு வங்கிகள் உங்களிடம் எந்த கட்டணத்தையும் வசூலிக்காது.
காண்டாக்ட்லெஸ் பேமெண்ட்க்கு என்ன விதிமுறை?: இனி டாப்பிங் முறையில் காண்டாக்ட்லெஸ் பேமெண்ட் செய்யும் போது ரூ.5,000 வரை பின் நம்பரை போடாமல் பணம் செலுத்தலாம். இதற்கு எந்த அங்கீகாரமும் தேவையில்லை. ரூ.5,000-த்தை தாண்டி பணம் செலுத்தினால் பின் நம்பரை என்டர் செய்ய வேண்டியிருக்கும். இந்த கட்டண முறையை நீங்கள் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட் போன்ற இடங்களில் பயன்படுத்தி இருப்பீர்கள். பணம் செலுத்த உங்கள் கார்டை மெஷினுக்குள் சொருகாமல் மேல் பகுதியில் லேசாக வைப்பார்கள். உடனே பேமெண்ட் டெபிட் ஆகிவிடும்.
கார்டு பாதுகாப்பிலும் புதிய விதிமுறைகள்: இனி வாடிக்கையாளர்கள் தங்களுடைய கார்டை பயன்படுத்தி பரிவர்த்தனை செய்யும்போது தேவைப்படாத நேரங்களில் அதை பிளாக் செய்யும் வசதியை வங்கிகள் வழங்க வேண்டும். உதாரணமாக உள்நாட்டு பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் போன்றவற்றுக்கு தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்திவிட்டு மீத நேரங்களில் கார்டை பிளாக் செய்யலாம். அதேபோல கார்டு மூலம் செலவு செய்வதற்கும் ஸ்பெண்டிங் லிமிட் வைத்துக் கொள்ள வாடிக்கையாளர்களுக்கு வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.


Click it and Unblock the Notifications
