குறிப்பிட்ட தொழில்களை தொடங்குவதற்கு அது குறித்த குறைந்தபட்ச அறிவாவது இருக்க வேண்டும். உதாரணமாக ஒரு மருந்து உற்பத்தி நிறுவனம் தொடங்க போறீங்க என்றால், அறிவியில் படிப்போ அல்லது அது குறித்து அறிவோ இருந்தால் அதில் வெற்றி பெறுவது எளிதாக இருக்கும்.
ஆனால் இந்த அடிப்படைகளை எல்லாம் தகர்த்தெறிந்தவர் அரவிந்தோ பார்மா நிறுவனத்தின் இணை நிறுவனர் பி.வி. ராம்பிரசாத் ரெட்டி. சாதரண கிளார்க்காக தனது வாழ்க்கையை தொடங்கி இன்று ரூ.57,000 கோடி மதிப்பிலான மருந்து நிறுவனத்தின் தலைவராக உயர்ந்துள்ளார்.

ஆந்திர பிரதேசத்தில் ஒரு எளிமையான குடும்பத்தில் பிறந்தவர் பி.வி. ராம்பிரசாத் ரெட்டி. வெங்கடேஸ்வரா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டங்களை பெற்றார்.
படிப்பு முடிந்தவுடன் சிறிது காலம் வெவ்வேறு நிறுவனங்களில் பணிபுரிந்தார். ஒரு காலத்தில் ஒரு நிறுவனத்தின் கொள்முதல் பிரிவில் நுழைவு நிலை எழுத்தராக பணியாற்றியவர். பின்பு ரசாயனங்கள் விற்பனை செய்யும் சிறு வர்த்தக மாறினார். இதில் கிடைத்த அனுபவம் சொந்தமாக மருந்து நிறுவனம் தொடங்கும் எண்ணத்தை அவருக்கு ஏற்படுத்தியது.
இதனையடுத்து வேதியியலில் முதுகலை பட்டதாரியான தனது நண்பர் நித்யானந்தாவுடன் இணைந்து 1986ல் புதுச்சேரியில் ஒரு தொழிற்சாலையுடன் அரவிந்தோ பார்மாவை தொடங்கினார். வளர்ச்சி மற்றும் குறைந்த ஆபத்தை உறுதி செய்யும் ஒரு உக்தியை உருவாக்கி குறைபாடுகளை களைந்து நிறுவனத்தை உயர்த்தினார்.
1995ல் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியலிட்டார். APIs கவனம் செலுத்துவதற்கு பதிலாக பார்முலேஷன்களில் அரவிந்தோ பார்மா கவனம் செலுத்தியது. ஒரு பொதுவான மருந்து உற்பத்தி நிறுவனமாக மாறியது.
இந்நிறுவனம் இன்று கார்டியோவாஸ்குலர், இரைப்பை குடல், நீரிழிவு எதிர்ப்பு மற்றும் ரெட்ரோவைரல் எதிர்ப்பு மருந்துகளில் முன்னணியில் உள்ளது. இந்நிறுவனத்தின் வருவாயில் ஏறக்குறைய முக்கால்வாசி ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் உள்ள வர்த்தகத்தில் இருந்து கிடைக்கிறது. தற்போது இந்நிறுவன பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு சுமார் ரூ.58,910 கோடியாக உள்ளது.
2006 நவம்பரில் ஐக்கிய நாடுகள் சபையில் பேசுவதற்கு பி.வி. ராம்பிரசாத் ரெட்டியை அப்போது ஐ.நா. பொதுச் செயலாளராக இருந்த கோபி அன்னன் அழைத்தார் . இது அவரது வாழ்க்கையில் மிக முக்கியமான தருணங்களில் ஒன்றாகும். இவருடைய சொத்து மதிப்பு ரூ.21,600 கோடி. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு 2023 பில்லியனர்கள் பட்டியலில் அவர் மீண்டும் இடம் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications