நொய்டா: கடந்த ஆண்டு முழுவதும் பெரும் வீழ்ச்சி கண்டு வரும் ஆட்டோமொபைல் துறையானது, ஜனவரியிலும் வீழ்ச்சி கண்டுள்ளது.
ஆதாரம் இதோ, உள்நாட்டு பயணிகள் வாகன விற்பனையானது ஜனவரி மாதத்தில் 6.2% வீழ்ச்சி கண்டுள்ளதாக சியாம் தெரிவித்துள்ளது.
இந்திய வாகன உற்பத்தியாளர் சங்கம் சியாம் வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, பயணிகள் வாகன விற்பனையும் சரிந்துள்ளது.
விற்பனை வீழ்ச்சி
கடந்த ஜனவரியில் பயணிகள் வாகன விற்பனையானது 2,62,714 யூனிட்களாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 2,80,091 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கார் விற்பனையானது 8.1% வீழ்ச்சி கண்டு 1,64,793 யூனிட்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 1,79,324 யூனிட்களாக இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மொத்த விற்பனை வீழ்ச்சி
இதே மொத்த பிரிவுகளில் வாகன விற்பனையானது 13.83% வீழ்ச்சி கண்டு 17,39,975 யூனிட்கள் ஆக விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே ஆண்டில் 20,19,253 யூனிட்களாக விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. வாகனங்களின் விலை உயர்வானது விற்பனை வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்றும் சியாம் தலைவர் ராஜன் வதேரா கூறியுள்ளார்.
செலவு அதிகரிப்பு
மேலும் வரவிருக்கும் ஏப்ரல் மாதம் அமல்படுத்தவிருக்கும் பிஎஸ் 6 விதிகளின் படி வாகன உற்பத்தி செலவானது அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் நிறுவனங்களின் மூலதன செலவும் அதிகரித்துள்ளதாகவும் கூறுகின்றன. ஜனவரியில் பெரும்பாலான நிறுவனங்கள் மூலதன உள்ளீட்டு செலவுகள் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.
வாகன விற்பனை அதிகரிக்க வாய்ப்பு
எனினும் மத்திய அரசு சமீபத்தில் எடுத்த நடவடிக்கையால் வாகன விற்பனை அதிகரிக்கலாம் என்று கூறப்படுகிறது. சொல்லப்போனால் அரசு உள்கட்டமைப்பு துறைகளில் முதலீடு, விவசாயத் துறைகளில் முதலீடு வாகன விற்பனையை அதிகரிக்க வழி வகுக்கலாம் என்று கருதப்படுகிறது. குறிப்பாக வர்த்தக வாகனங்கள் விற்பனையும், இரு சக்கர வாகன விற்பனையும் அதிகரிக்க உதவும்.
இரு சக்கர வாகன விற்பனை
சியாமின் அறிக்கையின் படி, இரு சக்கர வாகன விற்பனையானது, ஜனவரி மாதத்தில் 16.06% வீழ்ச்சி கண்டு 13,41,005 யூனிட்களாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 15,97,528 யூனிட்களாக இருந்தது கவனிக்கதக்கது. இதே போல் மோட்டார் சைக்கிள் வாகன விற்பனையானது 15.17% குறைந்து 8,71,886 யூனிட்களாக குறைந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 10,27,766 யூனிட்களாக இருந்துள்ளது.
ஸ்கூட்டர் விற்பனை
ஸ்கூட்டர் வாகன விற்பனையானது 16.21% வீழ்ச்சி கண்டு, 4,16,594 யூனிட்களாக வீழ்ச்சி கண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 4,97,169 யூனிட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இதேபோல வர்த்தக வாகன விற்பனையானது 14.04% குறைந்து, 75,289 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் 87,591 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒட்டுமொத்த வீழ்ச்சி
இதே போல் ஒட்டுமொத்த வாகன விற்பனையும் வீழ்ச்சி கண்டுள்ளதாக, சியாமின் தலைவர் ராஜேஷ் மேனன் கூறியுள்ளார். பயணிகள் வாகன விற்பனையானது பண்டிகைக்கு பிந்தைய விற்பனையானது தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருவது சற்று குறைந்துள்ளது. எனினும் ஆட்டோமொபைல் துறை இன்னும் எதிர்மறையான பிரதேசத்தில் உள்ளது.
மாருதி சுசூகி விற்பனை அதிகரிப்பு
மேலும் தற்போது நடைபெற்று வரும் ஆட்டோமொபைல் கண்காட்சியில், நாங்கள் நுகர்வோர் உணர்வை மேலும் மேம்படுத்த உதவும் என்று நாங்கள் நம்புகிறோம். பயணிகள் வாகனங்கள் பிரிவில் மாருதி சுசூகியின் ஜனவரி மாதத்தில் சந்தை விற்பனையில் 0.29% அதிகரித்து 1,39,844 கார்களை விற்பனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹூண்டாய் எப்படி?
இதே போல் ஹூண்டாய் மோட்டார் இந்தியா விற்பனை 8.3% குறைந்து 42,002 யூனிட்கள் ஆக விற்பனை செய்துள்ளதாகவும், இதே போல் மஹிந்திரா அன்ட் மஹிந்திரா 17.05% வீழ்ச்சி கண்டு 19,794 ஆகவும் சரிந்துள்ளது. இதே ஹீரோ மோட்டோகார்ப் அதன் விற்பனை 14.37% வீழ்ச்சி கண்டு 4,88,069 ஆக வீழ்ச்சி கண்டுள்ளது.
ஹோண்டா விற்பனை எப்படி?
ஹோண்டா மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 6.63% வீழ்ச்சி கண்டு, 3,74,114 வாகனங்களாக விற்பனையை எட்டியுள்லன. இதே போல் சென்னையை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் ஜனவரியில் விற்பனை 28.72% வீழ்ச்சி கண்டு, 1,63,007 யூனிட்களை விற்பனை செய்துள்ளதாக சியாம் அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications