சென்னை: இந்த நவீன யுகத்தில் எதையும் நம்ப முடியாத சூழலில் தான் இருக்கிறோம். பொய்யான தகவல்கள் மற்றும் மோசடி முயற்சிகள் அதிகரித்துள்ளன. குறிப்பாக, வருமான வரி தொடர்பான தகவல்களில், நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வருமான வரித்துறையினரிடமிருந்து எப்போதாவது ஒரு நோட்டீசை பெற்று அது முறையானதா என்று சிந்தித்திருக்கிறீர்களா.. ஆம் மோசடி செய்பவர்கள் தற்போது பயன்படுத்தும் ஒரு யுக்தியாக, இது போன்ற அதிகாரப்பூர்வ தகவல் தொடர்புகளைப் பின்பற்ற முயற்சி செய்கின்றனர். பயப்பட வேண்டாம்.. வரி செலுத்துவோர் பெறும் அறிவிப்புகள் உண்மையா என்பதை சரி பார்க்க உங்களுக்கு உதவும் வகையில் ஆன்லைன் தளத்தை வருமானவரித்துறை வழங்கியுள்ளது. அவற்றை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைப் பார்ப்போம்.
மோசடி செய்பவர்கள் பல்வேறு முறைகளில் பொய்யான வருமான வரி அறிவிப்புகளை அனுப்பி, உங்களை ஏமாற்ற முயற்சிக்கலாம். சிலர் போஸ்ட் மூலம் கூட உங்களுக்கு அனுப்பி உங்களைப் பதற்றப்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்க சொல்வார்கள். மேலும் மெயில், எஸ்எம்எஸ், மற்றும் தொலைபேசி அழைப்புகள் மூலமாகவும் மோசடிகள் நடக்கலாம். இவ்வாறு நடந்தால் நீங்கள் பயப்படத் தேவையில்லை. நீங்கள் பெறும் அறிவிப்பு உண்மையா என்பதை சரி பார்க்க இ-ஃபைலிங் போர்ட்டலுக்குச் சென்றால் போதுமானது. இதை எப்படி பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.

உங்களுக்கு வரும் வருமான வரி தொடர்பான அறிவிப்புகள் உண்மையா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?:
ஸ்டெப் 1: வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ https://www.incometax.gov.in/iec/foportal/ இ-ஃபைலிங் போர்ட்டலைப் பார்வையிடலாம்.
ஸ்டெப் 2: "Quick Links" என்பதன் கீழ் "Authenticate Notice/Order Issued by ITD" என்பதைக் கிளிக் செய்யவும்.
ஸ்டெப் 3: உங்களுடைய நோட்டீஸ் விவரங்களை பற்றி தெரிந்து கொள்ள இரண்டு வகையான வெரிஃபிகேஷன் மெத்தடுகள் உள்ளன. ஒன்று பான் கார்டைப் (PAN Card) பயன்படுத்தி தெரிந்து கொள்வது. இன்னொன்று டாக்குமெண்ட் ஐடென்டிஃபிகேஷன் நம்பரைப் (DIN) பயன்படுத்தி தெரிந்து கொள்வது. இரண்டில் ஏதாவது ஒரு மெத்தடை பயன்படுத்தி OTP வெரிஃபிகேஷன் செய்யவும்.
ஸ்டெப் 4: அதன் பிறகு ஸ்கிரீனில் உங்களுக்கான அறிவிப்பு உண்மையானதா என்பதை நீங்கள் பார்க்கலாம். ஒரு வேலை அவ்வாறு எதுவும் இல்லை என்றால் உங்களுக்கு அனுப்பப்பட்ட நோட்டீஸ் போலியானது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
யாரெல்லாம் இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்?: வருமான வரித்துறையின் இ-ஃபைலிங் போர்ட்டலில் பதிவு செய்யப்பட்ட பயனர்கள் அனைவரும் இதன் மூலம் பயனடையலாம்.
உண்மையான வருமான வரி தொடர்பான விவரங்களை எப்படி கண்டறிவது?:
1. அதிகாரப்பூர்வ ஆதாரம்: உங்கள் வரி தொடர்பான எந்த தகவல்களையும் நீங்கள் பெறும் போது அவர்கள் அனுப்பும் மெயில் ஐடி ending "@incometax.gov.in" என்று முடிகிறதா என்பதைக் கவனியுங்கள்.
2. உங்கள் அறிவைப் பயன்படுத்துங்கள்: உங்கள் பொது அறிவை பயன்படுத்தி தகவலின் உண்மை தன்மையை அறிந்து தெரிந்து கொள்ளுங்கள். அரசு நிறுவனங்கள் உங்கள் தனிப்பட்ட விவரங்கள், பாஸ்வேர்ட் மற்றும் பேங்க் விபரங்களை ஒருபோதும் கேட்க மாட்டார்கள். இவ்வாறு கேட்கப்பட்டால் அது கண்டிப்பாக மோசடி முயற்சியாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இதனைத் தெரிந்து நடந்து கொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications