அயோத்தியில் புதிதாகக் கட்டப்படும் ராமர் கோயிலில் மூலவருக்கு சாத்துவதற்காக சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர் 5000 அமெரிக்க வைரங்கள் வைத்த 2 கிலோ வெள்ளி நெக்லஸை உருவாக்கியுள்ளார்.
சூரத்தில் உள்ள ராசேஸ் ஜுவல்ஸின் இயக்குநர் கௌஷிக் காகாதியா இந்த அருமையான நெக்லஸை வடிவமைத்துள்ளார்.
இந்த நெக்லஸை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக அளிக்கவிருக்கிறார்.

நல்ல வேலைபாடு தெரிந்த 40 ஆசாரிகளை வைத்து 35 நாட்கள் பணியாற்றி இந்த நெக்லஸை உருவாக்கியுள்ளனர். இந்த நெக்லஸில் நுட்பமான ராமாயண சித்தரிப்புகள், ராமர், ஆஞ்சநேயர், சீதை, லட்சுமணன் உருவங்கள் செதுக்கப்பட்டுள்ளன. 2 கிலோ வெள்ளியில் இந்த அழகிய நெக்லஸ் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி கௌஷிக் காகாதியா கூறுகையில், இந்த நெக்லஸில் 5000க்கும் மேற்பட்ட அமெரிக்க வைரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. 2 கிலோ வெள்ளி பயன்படுத்தப்பட்டுள்ளது. புதிதாகக் கட்டப்பட்ட ராமர் கோயிலைக் கண்டு பரவசப்பட்டு இந்த நெக்லஸை உருவாக்கினோம். நெக்லஸின் செயினில் ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்கள் செதுக்கப்பட்டுள்ளன என்றார்.
எந்த வர்த்தக நோக்கமும் இல்லாமல் இறைவனுக்காக தயாரிக்கப்பட்ட இந்த நெக்லஸை ராமரின் பொற்பாதங்களில் மனப்பூர்வமாக அர்ப்பணிப்பேன் என்றும் அவர் கூறினார்.
அயோத்தியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலை 2024 ஜனவரி 22 ஆம் தேதி திறப்பதற்கு ஸ்ரீ ராமர் ஜென்மபூமி தீரத் சேத்ர டிரஸ்ட் நேரம் குறித்துள்ளது. வேத பாராயணங்கள் கோயில் திறப்பு விழாவுக்கு ஒரு வாரம் முன்னதாக ஜனவரி 16 ஆம் தேதியே தொடங்குகிறது.
ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் ஆகம பூஜைகளை வாராணசியைச் சேர்ந்த வேத விற்பன்னர் லக்ஷ்மி காந்த் தீக்ஷித் மேற்பார்வையிடுகிறார்.

அமிர்த மகோத்சவம் என்றழைக்கப்படும் திறப்பு விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 14 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவின் ஒரு பகுதியாக 1008 உண்டியல்களை வைத்து மகாயாகம் நடத்தி ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதாம் வழங்கப்படும்.
ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வருகை தரும் பக்தர்கள் தங்குவதற்காக டென்ட் சிட்டிகள் அயோத்தி நகரத்தில் அமைக்கப்பட்டு வருகின்றன.
இதில் 10,000 முதல் 15,000 பக்தர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீ ராமர் ஜென்மபூமி டிரஸ்ட் செய்து வருகிறது. அயோத்தியில் குவியப் போகும் பக்தர்களுக்குத் தேவையான வசதிகளை உள்ளூர் அதிகாரிகள் துரிதமாக செய்து வருகின்றனர். இந்திய வரலாற்றில் இந்த நிகழ்ச்சி ஒரு மறக்க முடியாத நிகழ்வாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போர் குறித்த டிரம்பின் ஒற்றை அறிவிப்பு..!! தாறுமாறாக சரிந்த தங்கம் விலை..!!

சர்ரென சரிந்த தங்கம் விலை: முதலீட்டாளர்கள் இப்போது என்ன செய்யலாம்?

தங்கம் விலை தடாலடி சரிவு! மீண்டும் சரிய வாய்ப்பா? இப்போதே வாங்கலாமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

கோயம்புத்தூரில் ஒரு சவரன் தங்கம் விலை என்ன? இன்று தங்கம் வாங்கலாமா?

Gold Update: தாறுமாறாக எகிறும் விலை! சென்னை, கோவையில் தங்கம் விலை எப்படி?சாமானியர்கள் அதிர்ச்சி!

மதுரையில் இன்று தங்கம் விலை சரிவு: இனி வரும் நாட்களிலும் விலை குறையுமா?

சட்டென சரிந்த தங்கம் விலை!! வெள்ளி விலையும் குறைந்தது!! டிரம்புக்கு தான் நன்றி சொல்லனும்!!

17 வருட மோசமான நிலையில் தங்கம் விலை.. இதைவிட்ட வேற சான்ஸ் கிடைக்காது.. இது செம டிவிஸ்ட்..!!

மதுரை தங்கம் விலையில் இன்று அதிரடி சரிவு..! தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்?

வெள்ளி விலை 15 ஆண்டுகளில் இல்லாத மோசமான சரிவு! அடுத்து என்ன நடக்கும்? நிபுணர்கள் சொல்வது இதுதான்!



Click it and Unblock the Notifications