பதுங்கி பாய போகிறதா தங்கம்? பாபா வாங்கா சொன்னது நடக்குதே!! தங்கம் விலை இவ்வளவு உயர போகுதா?

தங்கம் இந்தியர்களின் அனைத்து நல்ல காரியங்களிலும் முக்கிய இடம் பிடித்துள்ள உலோகம். தங்கம் தான் காலம் காலமாக நம் குடும்பங்கள் செய்து வரக்கூடிய முதலீடு. அதனால் தான் தங்கம் விலையில் நடக்கும் சின்ன மாற்றம் கூட இந்திய மக்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

குறிப்பாக கடந்த ஓராண்டு காலம் தங்கம் விலை சாமானிய மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை தந்தது. ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை 1 லட்சம் ரூபாயை கடந்தௌ 1.34 லட்சம் ரூபாய் வரை சென்றது. இந்நிலையில் இரண்டு மாதங்களாக தங்கம் விலை சரிவிலேயே இருக்கிறது. இது இப்படியே நீடிக்குமா அல்லது கடந்த ஆண்டை போல விலை உயருமா என்பதே மக்களின் குழப்பம்.

பதுங்கி பாய போகிறதா தங்கம்? பாபா வாங்கா சொன்னது நடக்குதே!! தங்கம் விலை இவ்வளவு உயர போகுதா?

வரலாற்று உச்சபட்ச விலையில் இருந்து தங்கம் விலை குறைந்திருந்தாலும், தங்கம் பதுங்கி இருந்து பாய போகிறதா என்பதுதான் மக்களுக்கு உள்ள மிகப்பெரிய குழப்பம். இந்நிலையில் தான் தங்கம் விலை குறித்து உலக தீர்க்கதரிசிகளில் ஒருவரான பாபா வாங்கா வெளியிட்ட கணிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.

பல்கேரியா நாட்டைச் சேர்ந்த பாபா வாங்கா, உலக அளவில் புகழ் பெற்ற தீர்க்கதரிசிகளுள் ஒருவர். 1911ஆம் ஆண்டு பிறந்த இவர், 1996ஆம் ஆண்டு தனது 84வது வயதில் உயிரிழந்தார். சிறுவயதிலேயே இவருக்கு பார்வை பறிபோனது, ஆனால் அப்போது தான் அவருக்கு எதிர்காலத்தை கணிக்கும் திறன் வந்ததாக சொல்லப்படுகிறது. இவர் உலகில் ஒவ்வொரு ஆண்டும் என்னென்ன நிகழும் என்பதை கணித்து வைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது சில கணிப்புகள் நடக்கவும் செய்துள்ளன.

Also Read

அந்த வகையில் 2026ஆம் ஆணிட்ல் உலகம் முழுவதும் ஒரு பெரிய நிதி நெருக்கடி ஏற்படும், வங்கி அமைப்பு சரிந்துவிடும் மற்றம் மக்கள் காகித நாணயத்தின் மீது நம்பிக்கையை இழக்கும்போது அனைவரும் தங்கத்தை நாடுவார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இது நடந்தால் நிச்சயம் தங்கம் விலை உயரும். வழக்கமாக பொருளாதார வீழ்ச்சியின் போது தங்கத்தின் விலை 25 முதல் 40 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Recommended For You

இதன் அடிப்படையில் கணக்கீடு செய்தால் 24 கேரட் தங்கம் 10 கிராமின் விலை, தற்போதைய விலை சுமார் 1.5 லட்சமாக உள்ளது, இது 1.9 லட்சம் முதல் 2.1 லட்சம் வரை எட்டக்கூடும். தங்கத்தை பொறுத்தவரை திடீரென இப்படி விலை உயரும் என யாருமே எதிர்பார்க்கவில்லை, ஆனால் அதுதான் கடந்த ஆண்டு நடந்தது. அப்படி பாபா வாங்காவின் கணிப்பும் நடக்கலாம் என சொல்லப்படுகிறது.

ஈரான் போர் நிறுத்தம் உறுதியானாலே தங்கம் விலை எகிற தொடங்கும், இது தவிர தங்கம் ஏற்றுமதிக்கு ரஷ்யா விதித்துள்ள தடை, மத்திய வங்கிகள் தங்கம் வாங்கும் போக்கு இவை அனைத்துமே தங்கம் விலை உயர்வுக்கான சாதகமான போக்கையே காட்டுகின்றன.

Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+