தொடர்ந்து மூன்று வர்த்தக நாட்களாக குறைந்து வந்து தங்கத்தின் விலை மீண்டும் இன்று காலையில் இருந்து உயர தொடங்கி இருக்கிறது. இந்த சூழலில் தங்கம், வெள்ளி குறித்த பாபா வங்காவின் கணிப்புகள் உண்மையாகி விடுமோ என சமூக வலைத்தளங்களில் அனைவரும் விவாதிக்க தொடங்கி விட்டனர்.
உலக சந்தையிலும், உள்ளூர் சந்தையிலும் கடந்த 29ஆம் தேதி வரலாற்று உச்சத்தை எட்டிய ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வந்தது. மூன்று நாட்களிலேயே ஒரு சவரனுக்கு சுமார் 22,000 வரை சரிந்தது. இனி தங்கத்தின் விலை வீழ்ச்சியில் தான் இருக்க போகிறது என மக்கள் மகிழ்ச்சி அடைவதற்குள் இன்று காலை முதல் மீண்டும் விலை உயர தொடங்கிவிட்டது.

சென்னையில் இன்று காலை மாலை என இரண்டு வேளையும் 22 கேரட் ஆபரண தங்கம் ஒரு கிராம் 320 ரூபாய் உயர்ந்து 14,270 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரனுக்கு 2,560 ரூபாய் உயர்ந்து 1,14,160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. 24 கேரட் தங்கம் ஒரு கிராம் 15,567 ரூபாய்க்கும் ஒரு சவரன் 1, 24,536 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இன்று காலை 280 ரூபாய்க்கு விற்கப்பட்ட வெள்ளி மாலையில் 300 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
இந்த நிலையில் தான் 2026 ஆம் ஆண்டில் பாபா வாங்கா தங்கம், வெள்ளி குறித்த கூறிய கணிப்புகள் உண்மையாகி விடுமோ என்ற அச்சம் பலரிடமும் ஏற்பட்டிருக்கிறது. பாபா வாங்கா பல்கேரியாவை சேர்ந்தவர், இவரை அனைவரும் தீர்க்கதரிசி என அழைக்கின்றனர். 1911ஆம் ஆண்டில் பல்கேரியாவில் பிறந்த பாபா வாங்கா தன்னுடைய 12 வது வயதிலேயே பார்வையை இழந்துவிட்டார். ஆனால் அதன் பிறகு அவருக்கு எதிர்கால நிகழ்வுகளை பற்றி கூறும் அசாதாரணமான திறமை கிடைத்ததாக சொல்லப்படுகிறது.
நியூயார்க் உலக வர்த்தக மைய தாக்குதல், டயானாவின் திடீர் மரணம் என அவர் கூறிய அனைத்தும் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 2026 ஆம் ஆண்டு பெரிய அளவில் உலக பொருளாதாரத்தில் அதிர்வுகள் ஏற்படும் என அவர் குறித்து வைத்துள்ளார். உலக பொருளாதாரமே ஸ்தம்பித்து போகும் என குறிப்பிட்டுள்ளார்.
அதாவது உலகளாவிய நிதி நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக பாபா வாங்கா கணித்திருக்கிறார். நிதி நெருக்கடி ஏற்படுகிறது என்றாலே தங்கம், வெள்ளி விலையை உயர்த்தி விடும். அந்த வகையில் பாபா வாங்கா கணிப்பு படி 2026 ஆம் நிதி ஆண்டில் 25 முதல் 40 சதவீதம் வரை தங்கம், வெள்ளி விலை உயர்வுக்கு வாய்ப்பு இருக்கிறது. 10 சவரன் தங்கம் 2 லட்சம் ரூபாயில் இருந்து 2.43 லட்சம் ரூபாய் வரை உயரும் என கணிக்கப்படுகிறது.அதற்கேற்ற வகையில் மூன்று நாட்களாக குறைந்த தங்கம் விலை மீண்டும் உயர தொடங்கி இருக்கிறது.


Click it and Unblock the Notifications