கொரோனா வைரஸ் நம் காலத்தில் பார்க்கும் மிகப் பெரிய நோய் அச்சுறுத்தல் என்றால் அது மிகை அல்ல.
Recommended Video
இந்த கொடிய நோய் தற்போது உலகில் சுமாராக 3.19 லட்சம் பேரை பாதித்து இருக்கிறது. சுமார் 13,689 பேரின் உயிரைப் பறித்து இருக்கிறது. இன்னும் எத்தனை பேரின் உயிரை காவு வாங்கப் போகிறது என்று தெரியவில்லை.
இந்த கொடிய நோய் பரவலைத் தடுக்க, மத்திய அரசு நேற்று (மார்ச் 22, 2020) ஒரு நாள் காலை 7 மணி முதல் மாலை 9 மணி வரை சுய ஊரடங்கு (Janta Curfew) செய்து கொள்ளச் சொன்னது.
144 தடை
கர்நாடகா மாநிலத்தின் உள் துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை, மார்ச் 22, 2020 அன்று இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை, 144 தடை உத்தரவைப் பிறப்பித்தார். மக்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொள்வதாகச் சொல்லியோ அல்லது உணவகங்களில் சாப்பிடவோ, நிறைய பேர் ஒன்று கூடிவிடக் கூடாது என்கிற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்தார்களாம்.
ஞாயிற்றுக் கிழமை
பொதுவாகவே, சென்னை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில், ஞாயிற்றுக் கிழமை என்பது குடும்பத்துடன் சினிமா, பீச், பார்க், கோவில், மால் என சுற்றித் திரிந்து விட்டு, நல்ல ஹோட்டலில் இரவு உணவை முடித்துவிட்டு நிம்மதியாக தூங்கச் செல்வது வழக்கம். இந்த எண்ணத்திலும் பலர் குடும்பத்தோடு வெளியே வரத் தொடங்கினர். இன்னொரு தரப்பில் பேச்சுலர்கள் இரவிலாவது நல்ல உணவு சாப்பிடலாம் என்கிற நம்பிக்கையில் வெளியில் வந்தார்கள்.
வியாபாரம்
மக்கள் நலனுக்காக பெங்களூரில் 144 தடை விதித்தது சரி, ஆனால் இன்னொரு பக்கம் பேச்சுலர்களுக்கு உணவுப் பிரச்சனையும், உணவகங்களின் வியாபாரமும் சிக்கலுக்கு உள்ளாயின. இரவு 9 மணி வரை சுய ஊரடங்கு என்றால், 9 மணிக்கு மேல் 144 தடை. எனவே பெங்களூரு காவலர்கள், உணவுக் கடைகளை நடத்த வேண்டாம் என தீவிரமாக கடைகளை அடைக்கச் சொன்னார்கள். அருகிலேயே இருந்து கடைகளை அடைக்க வைத்தார்கள். வந்த வாடிக்கையாளர்களை எல்லாம் வீட்டுக்கு போகச் சொல்லி அறிவுறுத்தினார்கள்.
சிங்கிள்ஸ்
பெங்களூரின் திருவல்லிக்கேணி என்று சொல்லப்படும் பிடிஎம் லே அவுட் பகுதியில் வசிக்கும், மதுரையைச் சேர்ந்த ஒரு சிங்கிள் "நேத்தி (மார்ச் 22, 2020) காலைல இருந்து ஒரு நல்ல டீ கிடைக்கல. பிரட்டு ஜாம், இன்ஸ்டண்ட் நூடுல்ஸ், சிப்ஸ்-ன்னு சாப்பிட்டாச்சுங்க. நைட்டுக்காவது நிம்மதியா 4 இட்லி சாப்பிடலாம்னா.. 144 போட்டுட்டாய்ங்க. எங்கயும் நல்ல சோறு கிடைக்கில. பிறகு இருக்குற பிரட்டு ஜாம் தண்ணி தான் சாப்பிட்டோம்" என புலம்புகிறார்.
கடைக்காரர்
பெங்களூரில் ஜே பி நகர் ஃபேஸ் 1 பகுதியில் ஒரு அசைவ உணவகத்தில் வேலை செய்பவர் "janta curfew-க்கு பிறகு, நைட்டு கடை திறக்கலாமுன்னு, மதியானத்துல இருந்தே, எல்லா ஐட்டத்தையும் ரெடி பண்ண ஆரம்பிச்சுட்டோம். இப்ப பிரியாணில இருந்து க்ரில் சிக்கன் வரைக்கும் எல்லாமே ரெடி. இப்ப வந்து கடைய நடத்தக் கூடாதுன்னு சொன்னா எப்படிங்க?" என்கிறார்.
வீணாகிவிடும்
மேலும் பேசியவர் "ஏற்கனவே கொரோனா வைரஸால வியாபாரம் டல்லு, இதுல 144 தடை வேற வந்தா என்ன செய்ய? அரிசி பருப்பு ஸ்டாக் இருந்தா ஓகே. இன்னும் சில மாசத்துக்கு அப்படியே வெச்சிக்கலாம். ஆனா வாங்கி வெச்சிருக்குற சிக்கன் மட்டன் மாதிரியான கறி ஐட்டங்கள அப்படி வெச்சிக்க முடியாதே சார், வியாபாரம் பண்ணா தானங்க ஓரளவுக்காவது நஷ்டத்த குறைக்க முடியும்..?" என அவர் தரப்பு நியாயங்களைச் சொல்லிக் கொண்டே நமக்கான கிரில் சிக்கனை அதிவிரைவாக பார்சல் கட்டினார். அதற்குள் காவலர்கள் உணவகத்துக்கு உள்ளே வந்து கடையை மூடச் சொன்னார்கள்.
பார்சல்
ஆக, ஒரு பக்கம், மேலே சொன்ன அசைவ உணவகம் முதல் அன்றாடம் உணவு வியாபாரம் செய்யும் குட்டி குட்டி உணவகங்கள் வரை, தங்கள் உணவுகளை பார்சல் செய்து விற்றார்கள்.
இன்னொரு பக்கம் பெங்களூரு நகர காவலர்களோ 144 தடை உத்தரவைச் சொல்லி, உணவகங்களை வலுக் கட்டாயமாக மூடினார்கள்.
இந்த இரண்டு தரப்புக்கும் இடையில் சிக்கிக் கொண்ட நம் சிங்கிள்கள், நல்ல சோறு கிடைக்காமல் சிங்கி அடித்து இருக்கிறார்கள். இனி நாளை காலை தான் நாக்குக்கு ருசியாக இட்லி, தோசை காபி, டீ எல்லாம். அது வரை ஏற்கனவே வாங்கி வைத்திருக்கும் பிரட் ஜாம் தான் துணை.
கொரோனா பயம்
யார் சரி யார் தவறு என விவாதிப்பதை விட, கொரோனா வைரஸ் மேற்கொண்டு பரவாமல் இருக்க வேண்டும் என்கிற ஒற்றை பயம் தான் முதலில் நினைவுக்கு வருகிறது. இந்த கொரோனா பரவலை தடுக்கும் வரை நாம் எல்லோரும் கொஞ்சம் சிரமங்களை சகித்துக் கொள்வோம். அரசுக்கு உதவுவோம். கொரோனாவை முற்றிலும் தடுப்போம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications