நாட்டில் பரவி வரும் கொரோனாவின் தாக்கத்தினால், நாட்டிலுள்ள ஒவ்வொரு துறையும் அடி வாங்கித் தான் வருகிறது. அதற்கு நிதித்துறை மட்டும் விதிவிலக்கா என்ன?
கடந்த ஆண்டே பொருளாதார மந்த நிலை காரணமாக மோசமான கடன்கள் எனப்படும் Bad Loans விகிதம் அதிகரித்துள்ளது. இது கடந்த 2020ம் நிதியாண்டில் மட்டும் 23 வங்கிகளின் Bad Loans விகிதம் 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

மேலும் அவர்களின் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு கிட்டதட்ட 3 சதவீதம் உயர்ந்துள்ளது. இது கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் 5.4 லட்சம் கோடி ரூபாயாக இருந்த நிலையில், 2019 - 2020ம் நிதியாண்டில் 5.6 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இதுவே 2017 - 2018ம் நிதியாண்டில் 6.17 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மோசமான கடன்கள் பட்டியலில் நாட்டின் முதன்மையான மிகப்பெரிய கடன் வழங்குனரும், பொதுத்துறை வங்கியுமான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா தான் இதிலும் முதலிடத்தில் உள்ளது. இதனையடுத்து நாட்டின் முன்னணி வங்கிகளாக ஹெஸ்டிஎஃப்சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட வங்கிகள், மொத்த செயல்படாத சொத்துகளில் கிட்டதட்ட பாதி பங்கு வகிக்கின்றன.
மேலும் மொத்த வாராக்கடன் விகிதமானது 2019ம் நிதியாண்டில் 12.3 சதவீதம் குறைந்த நிலையில், முந்தைய ஆண்டு, 55 சதவீதம் வளர்ச்சி கண்டு இருந்தது. எனினும் பொதுத்துறை வங்கிகளின் மோசமான கடன் அளவு 2.5 சதவீதம் சரிவினை கண்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ-யில் மொத்த வாராக்கடன் விகிதம் 138 அடிப்படை புள்ளிகள் குறைந்து 6.15 சதவீதமாக குறைந்துள்ளது. எனினும் கடந்த 2018 மற்றும் 2019ம் நிதியாண்டுகளில் இந்த மொத்த வாராக்கடன்களின் விகிதமான பெரியளவில் வழங்கியிருந்தன. இதனால் கடந்த 2020ம் நிதியாண்டில் இந்த வாராக்கடன் விகிதமானது ஓரளவுக்கு குறைந்துள்ளது. எனினும் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் பாதியில் இது அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் மத்தியில் கூறப்படுகிறது.
More From GoodReturns

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications