சென்னை: பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் முதலீட்டாளர்களுக்கு 4,000 % லாபத்தை பெற்று தந்துள்ளது என ஐசிஐசிஐ செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனம், பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் தற்போதைய வளர்ச்சியானது தொடர்ந்து அதிகரிக்கும் என்றும் இந்த நிறுவன பங்குகளை வாங்கலாம் என்ற மதிப்பீட்டில் வைப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் நிறுவனத்தை பொறுத்தவரை பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது ரூ. 8500 வரை செல்லும் என மதிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் முன்னணி என்எஃப்பிசி நிறுவனமான பஜாஜ் பைனான்ஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் சிறந்த பெயரை பெற்றிருப்பதாகவும், குறிப்பாக மிடில் கிளாஸ் மக்களுக்கு இந்த நிறுவனம் வழங்கக்கூடிய நிதி தீர்வுகள் மற்றும் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் தனித்துவமான பிசினஸ் மாடல் ஆகியவை நிறுவனத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு காரணமாக அமைந்துள்ளன என ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் தரவு நிறுவனம் கூறியுள்ளது.
தற்போது சந்தையில் இருக்கக்கூடிய மற்ற என்எஃப்பிசி நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் காஸ்ட் ஆஃப் டெலிவரி என்பது குறைந்த அளவில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கவனம் செலுத்தி அதில் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்திருப்பதாகவும், இதன் காரணமாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளது. மொபைல் செயலிகள் மற்றும் ஈ காமர்ஸ் தளங்களில் இந்த நிறுவனம் வழங்கக்கூடிய சலுகைகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல பெயரை பற்றி பெற்று தந்திருப்பதாக கூறியுள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் மாறிவரும் சந்தை தேவைகளுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வது நிறுவனத்தின் வெற்றிக்கு காரணமாக உள்ளது என கூறியுள்ளது. ஏப்ரல் 10ஆம் தேதி பங்குச்சந்தையில் பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒரு பங்கின் மதிப்பானது ரூ.7,192 ரூபாய் என்ற அளவில் வர்த்தகமானது. இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு கடந்த ஓராண்டு காலத்தில் 21% வளர்ச்சியையும், ஐந்தாண்டு காலத்தில் 138.91% வளர்ச்சியையும் அடைந்துள்ளது.
பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் என்பது ரூ.4,45,238 கோடி என இருக்கிறது. நிறுவனத்தின் புக் வேல்யூ என்பது 1109.45 ஆகவும், பேஸ் வேல்யூ 2 ஆகவும் இருக்கிறது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் வருவாயை பொருத்தவரை 2023 ஆம் ஆண்டில் 41,406 கோடியாகவும் நிறுவனத்தின் லாபம் 2023 ஆம் ஆண்டில் 11,508 கோடி ரூபாயாகவும் இருக்கிறது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் நிகர மதிப்பு 54,372 கோடி ரூபாய் என்ற அளவில் உயர்ந்துள்ளது.
நிறுவனத்தின் பங்குகளை பொறுத்தவரை ப்ரமோட்டர்கள் 54.78 % பங்குகளையும் வெளிநாட்டு நிறுவனங்கள் 20. 92 % பங்குகளையும், சில்லறை முதலீட்டாளர்கள் 10.22 % பங்குகளையும், மியூச்சுவல் ஃபண்டுகள் 9.83% பங்குகளையும் கொண்டுள்ளன.
Story written by: Devika
More From GoodReturns

மதுரை மக்களே தங்க நகை வாங்க இன்று தான் சிறந்த நாள்!! 5ஆவது நாளாக குறைந்த விலை!!

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம்,வெள்ளி விலையில் புது டிவிஸ்ட்!! போர் பதற்றத்துக்கு மத்தியில் தடாலடியாக குறைந்த விலை!!

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?

ரத்தகளறியான இந்திய பங்குச்சந்தை.. ரூ.12 லட்சம் கோடி இழப்பு.. கதறி அழும் முதலீட்டாளர்கள்..!

இதுக்கு பேர் தான் Old is Gold-ஆ.. காலம் மாறினாலும், ஃபார்மூலா மாறாது..!!

4 நாட்களில் ரூ.21,000 கோடி மாயம்!! இந்தியாவே வேண்டாம் என தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்!!

மார்ச் 31-க்குள் இந்த வேலையை செய்யாட்டி அக்கவுண்ட் முடங்கும்! முதலீட்டாளர்களே கவனம்?

10 ஆண்டுகளில் செல்வத்தை உயர்த்துவது எது? PPF-ன் நிலையான வட்டியா அல்லது SIP-ன் சந்தை லாபமா?

ரூ. 50,000 கையில் இருக்கா..? உங்கள் வாழ்க்கையை மாற்றப்போகும் முக்கிய முடிவு..!

மொத்தமா போச்சு!! ரத்தகளறியானது இந்திய பங்குச்சந்தை!! 9 லட்சம் கோடி இழப்பு.. சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி



Click it and Unblock the Notifications