இந்தியாவில் இது முக்கியமான பண்டிகை காலம் என்பதால் அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் இது முக்கியமான காலக்கட்டம் என்பதால் கடன் சேவை அளிக்கும் அனைத்து நிறுவனங்களும் ரெடியாக உள்ளது. குறிப்பாக கிரெடிட் கார்ட் சேவை, கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு கடன், தங்க கடன் சேவை அளிக்கும் நிறுவனங்கள் ஆகியவை தயார் நிலையில் உள்ளது.
பண்டிகை காலத்தில் கன்ஸ்யூமர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அதிகப்படியான தள்ளுபடிகள் அறிவிக்கப்படும் காரணத்தால் இத்துறையில் புதிதாக நுழைந்திருக்கும் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு முக்கியமாக காலம் மட்டும் அல்லாமல் இந்த பண்டிகை காலத்தில் தன் யார் என்பதை காட்ட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு உள்ளது.

இப்படியிருக்கையில் இத்துறையில் ஜாம்பவானாக மட்டும் அல்லாமல் NBFC பிரிவில் முன்னணி நிறுவனமாக இருக்கும் பஜாஜ் பைனான்ஸ் சேவை நிறுவனம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை எதிர்த்து போராட 10000 கோடி ரூபாய் நிதியை கட்டுப்படுத்தப்பட்ட பங்கு விற்பனை மூலம் திரட்டியுள்ளது.
இந்த பங்கு விற்பனை மூலம் பண்டிகை காலத்திற்கு தேவையான பணத்தை திரட்டியது மட்டும் அல்லாமல் இது நிறுவன முதலீட்டாளர்களுக்கும், அதன் தாய் நிறுவனமான பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்திற்கும் சாதகமாக அமைந்துள்ளது.

நவம்பர் 2019க்கு பின் பஜாஜ் பைனான்ஸ் முதல் முறையாக பங்குகளை விற்பனை செய்து நிதி திரட்டியுள்ளது. பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தற்போது 23 சதவீதம் capital adequacy எனப்படும் போதுமான மூலதன அளவு இருக்கும் போதும் நிதியை திரட்டியுள்ளது. ஆர்பிஐ விதிமுறையின் 10 சதவீதம் capital adequacy அளவு இருந்தாலே போதுமானது.
இந்த 10000 கோடி ரூபாய் நிதியை பஜாஜ் பைனான்ஸ் 8800 கோடி ரூபாய் மதிப்பிலான நிதியை QIP வாயிலாக நிறுவன முதலீட்டாளர்களிடம் இருந்தும், 1200 கோடி ரூபாய் மதிப்பிலான தொகையை அதன் தாய் நிறுவனமான பஜாஜ் பின்சர்வ் நிறுவனத்திற்கும் ஒதுக்கீடு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications