பஜாஜ் பைனான்ஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகரலாபம் 40% அதிகரித்து, 2973 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே கடந்த நிதியாண்டின் இதே காலாண்டில் நிகரலாபம் 2125.29 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதன் மொத்த வருவாய் விகிதமானது செயல்பாட்டின் மூலம் 26.3% அதிகரித்து, 10,784.30 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டில் 8539.13 கோடி ரூபாயாக இருந்தது.
இதன் நிகர வட்டி வருவாய் விகிதமானது 22% அதிகரித்து, 7435 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது கடந்த ஆண்டு 6005 கோடி ரூபாயாக இருந்தது.
நிர்வாகத்தின் கீழ் உள்ள அசெட்
இதே இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ள அசெட் விகிதம் 27% அதிகரித்து, 1,68,359 கோடி ரூபாயாக டிசம்பர் காலாண்டில் அதிகரித்துள்ளது. இதே கடந்த ஆண்டில் 1,32,913 கோடி ரூபாயாக இருந்தது.
இதே இதன் புதிய கடன் விகிதம் இதுவரையில் இல்லாத அளவுக்கு 7.84 மில்லியனாக அதிகரித்துள்ளது.
கஸ்டமர் பிரான்ஸிசி
இதே கஸ்டமர் பிரான்சிஸியானது 66.05 மில்லியனாக இருந்தது. இது கடந்த ஆண்டில் 55.36 மில்லியனாக இருந்தது. இது 19% வளர்ச்சியினை கண்டுள்ளது. இது வரை இல்லாத அளவுக்கு ஒரு காலாண்டில் 3.14 மில்லியன் அதிகரிப்பினை கண்டுள்ளது.
செயல்பாட்டு செலவினம்
இந்த நிறுவனத்தின் செயல்பாட்டு செலவினம் என்பது மூன்றாவது காலாண்டில் 34.7% அதிகரித்துள்ளது. இது இரண்டாவது காலாண்டில் 35.9% ஆக இருந்தது. இது முந்தைய ஆண்டினை காட்டிலும் நிலையானதாக இருந்தது.
இதே டிசம்பர் காலாண்டில் கடன் மற்றும் புரவீசன்ஸ் 811 கோடி ரூபாயாக இருந்தது. இது முந்தைய ஆண்டில் 995 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வாரக்கடன் சரிவு
இந்த நிறுவனத்தின் மொத்த வாரக்கடன் மற்றும் நிகர வாராக்கடன் விகிதமானது, டிசம்பர் காலாண்டில் 1.14% மற்றும் 0.41% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டில் 1.73% மற்றும் 0.78% ஆக இருந்தது.
பஜாஜ் ஆட்டோ நிகரலாபம்
இதே பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம், 5.42% அதிகரித்து, 3,918.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 3.01% அதிகரித்து, 1472.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே இதன் செயல்பாட்டின் மொத்த வருவாய் விகிதம், 9318.54 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே ஒருங்கிணைந்த வரிக்கு பிந்தைய ஒருங்கிணைந்த லாபம் 1944.52 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது ஆண்டுக்கு 8.73% அளவுக்கு வளர்ச்சியினை பதிவு செய்துள்ளது.
எபிட்டா விகிதம்
இதன் எபிட்டா விகிதமானது 29% அதிகரித்து, 1777 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே இதன் எபிட்டா மார்ஜின் விகிதம் 390 அடிப்படை புள்ளிகள் அதிகரித்து, 19.1% ஆக அதிகரித்தது. இதெ கடந்த ஆண்டில் 15.2%4 ஆக இருந்தது. இதே இதன் மொத்த வாகன விற்பனை விகிதம் 17% அதிகரித்து, 9,83,276 யூனிட்களாகவும் அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 11,81,361 வாகனங்களாக இருந்தது. மொத்த உள்நாட்டு வாகன விற்பனையானது 4% அதிகரித்துள்ளது. இதே ஏற்றுமதியானது 33% சரிவினைக் கண்டுள்ளது. இதற்கிடையில் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் பங்கு விலைய்யானது 5.90% அதிகரித்து, 3936.75 ரூபாயாக முடிவடைந்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications