ஜிஎஸ்டி வரி குறைப்பிற்கு பின்பு இந்தியாவின் முன்னணி கார் பிராண்டுகளான மாருதி சுசூகி, ஹூண்டாய், மஹிந்திரா நிறுவனத்தில் கடந்த 10-20 வருடத்தில் இல்லாத அளவுக்கு கார் புக்கிங் வந்துள்ளதாகவும், அதிகப்படியான கார் டெலிவரிகள் செய்யப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதுமட்டும் அல்லாமல் சிறிய கார்களின் விற்பனை தடாலடியாக உயர்ந்துள்ளதாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் இரு சக்கர வாகன சந்தையில் ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் பெரிய விலை மாற்றம் நடந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்த விலை மாற்றம் பண்டிகை காலத்தில் வந்துள்ளதால் விற்பனை புதிய உச்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கார்களை பயன்படுத்துவோரை காட்டிலும் இரு சக்கர வாகனங்களை தான் மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர். இதனால் இந்த விலை குறைப்பு ஆட்டோமொபைல் துறைக்கு வர்த்தகத்திற்கு புதிய ஊக்கத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஜிஎஸ்டி 2.0-வில் 350cc க்கும் அதிகமான எஞ்சின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரி 28% இலிருந்து 40% ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 350cc அல்லது அதற்குக் குறைவான இன்ஜின் திறன் கொண்ட இரு சக்கர வாகனங்களுக்கான ஜிஎஸ்டி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரும்பாலான வாகனங்களின் விலை குறைந்துள்ளது. இதோடு எலக்ட்ரிக் வாகனங்கள் மீது 5 சதவீதம் வரி தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பண்டிகைக் கால பிஸ்னஸ்
பண்டிகைக் காலம் இந்தியாவில் இரு சக்கர வாகன விற்பனைக்கு முக்கியமான காலமாகும். இந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் புதிய வாகனங்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் காட்டுவார்கள். இதை முழுமையாக பயன்படுத்திக்கொள்ள அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் முடிவு செய்து விலையை உடனடியாக குறைத்துள்ளது.
பஜாஜ்-ன் முக்கிய முடிவு
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் அதன் பிரபலமான உயர் திறன் கொண்ட மோட்டார் சைக்கிள்களான டோமினார் 400 மற்றும் பல்சர் NS400Z ஆகியவற்றின் விலையை உயர்த்தாமல் இருக்க முடிவு செய்துள்ளது. ஜிஎஸ்டி வரி உயர்வு காரணமாக இந்த மோட்டார் சைக்கிள்களின் விலை சுமார் 20,000 ரூபாய் வரை அதிகரித்திருக்கலாம்.
ஆனால், பஜாஜ் இந்த விலை உயர்வை மக்களுக்கு தலையில் கட்டமால் முழுமையாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளது, பண்டிகைக் காலத்தில் வாடிக்கையாளர்களின் வர்த்தகத்தை பெற வேண்டும் என்பதற்காக இத்தகைய முடிவை எடுத்துள்ளது.
தற்போது, பல்சர் NS400Z மோட்டார் சைக்கிள் 1.92 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும், டோமினார் 400 மோட்டார் சைக்கிள் 2.39 லட்சம் ரூபாய் (எக்ஸ்-ஷோரூம்) விலையிலும் விற்பனையாகின்றன.
கேடிஎம், ஹீரோ:
இதே உத்தியை பஜாஜ் தனது KTM மோட்டார் சைக்கிளுக்கும் அமல்படுத்தியுள்ளது.
இதேபோல், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் தனது ஹார்லி-டேவிட்சன் X440 மோட்டார் சைக்கிளின் விலையை உயர்த்தாமல் இருக்க முடிவு செய்துள்ளது.
டிவிஎஸ் மோட்டாரின் விலை குறைப்பு
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம், செப்டம்பர் 22 முதல் புதிய விலைகளை அறிவித்து, தனது மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களின் விலையை குறைத்துள்ளது. ஜிஎஸ்டி வரி நன்மைகளை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கிய இந்நிறுவனம், 5,000 முதல் 23,059 ரூபாய் வரை விலை குறைப்பை அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications