நம்ம நாட்டில் பெட்ரோலில் இயங்கும் இருசக்கர வாகனங்களுக்கு மாற்றாக மின்சார வாகனங்களை பயன்படுத்த தொடங்கி விட்டனர். இருப்பினும், மின்சார வாகனங்களின் பேட்டரி ஆயுள், சார்ஜ் இறங்குவதற்குள் சார்ஜிங் பாயிண்ட்டை அடைவது அல்லது சேர வேண்டிய இடத்துக்கு செல்வது பற்றிய கவலை காரணமாக மின்சார வாகனங்கள் விற்பனை பெரிய அளவில் வளர்ச்சி காணவில்லை.
இந்நிலையில் பெங்களூருவை சேர்ந்த நிறுவனம் ஒன்று பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வைத்திருப்பவர்களின் எரிபொருள் செலவினத்தை குறைக்கும் வகையில் தனித்துவமான மாடலில் அந்த வாகனத்தை ஹைபிரிட் மாடலாக மாற்றி கொடுக்கிறது.

ஆஷிஷ் டோன்காயா தலைமையிலான கிரீன் டைகர் மொபலிட்டி நிறுவனம் தனித்துவமான முறையில் பெட்ரோல் வாகனங்களை ஹைபிரிட் மாடலாக மாற்றுகிறது. இது உங்கள் வாகனத்தை பெட்ரோல் மற்றும் மின்சார பேட்டரிகளில் இயங்க அனுமதிக்கிறது. சார்ஜ் குறைந்து விட்டால் எளிதாக வாகனத்தை பெட்ரோல் இயக்கத்துக்கு மாற்றி கொள்ளலாம்.
பீகாரில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் பிறந்து வளர்ந்தவர் ஆஷிஷ் டோன்காயா. தொழில் முனைவோர் குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதால் எப்போதும் சொந்தமாக ஏதாவது உருவாக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு தொழிலதிபராக மாற வேண்டும் என்று விரும்பினார்.
தனது 21 வயதில் பெங்களூருவில் ஒரு தொழிலை தொடங்கினார். சிறு வயது என்பதால் தொழில் அழுத்தத்தை அவரால் தாங்க முடியவில்லை இதனையடுத்து அந்த தொழிலை மூடினார். இருப்பினும், ஒரு நாள் வெற்றிகரமான தொழிலை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை அது அவருக்கு தூண்டியது.
அதன் பிறகு, குருகிராமில் எம்.பி.ஏ. படித்து வங்கி துறையில் வேலைக்கு சேர்ந்தார். அப்போது பல உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அவர் நிதி பரிவர்த்தனை செய்தார். அது அவருக்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையை அறிமுகப்படுத்தியது. பின்னர் வங்கி வேலையை விட்டு விட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் சூரிய ஆற்றல் சார்ந்த நிறுவனத்தில் பணிபுரிந்தார். அந்த துறையில் பல ஆண்டுகளாக வேலை பார்த்தததால் நல்ல அனுபவம் கிடைத்தது.
வீட்டில் நம் மின் தேவைக்கு மின்சாரம் பிரதான ஆதாரமாக இருந்தாலும், மின்சார இல்லாத நேரத்தில் மின் தேவைக்காக ஜெனரேட்டர் அல்லது இன்வெர்ட்டரை பேக்அப் வைத்திக்கிறோம். அது மாதிரி, நுகர்வோருக்கு முழுமையான நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், மின்சார வாகனத்தில் ஸ்டாண்ட்பை ஆற்றல் ஆதாரமாக பெட்ரோல் என்ஜினை ஏன் வைத்திருக்க முடியாது என்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து 2020ம் ஆண்டின் தொடக்கத்தில் தனது 15 ஆண்டு கால கார்ப்பரேட் வாழ்க்கைக்கு குட்பை சொல்லி விட்டு தனது குழந்தை பருவ கனவை நிஜமாக்க முடிவு செய்தார்.
பெங்களூருவில் பெட்ரோல் வாகனத்தை ஹைபிரிட் மாடலாக மாற்றும் கிரீன் டைகர் மொபிலிட்டி நிறுவனத்தை தொடங்கினார். 50க்கும் மேற்பட்ட வாகனங்களை ஹைபிரிட் மாடல்களாக மாற்றி கொடுக்க தொடங்கினார். இதில், 25 வாடிக்கையாளர்கள் அவர்களாகவே நிறுவனத்துக்கு வந்து தங்கள் வாகனத்தை ஹைபிரிட் மாடலாக மாற்றி சென்றுள்ளனர்.
125 சி.சி. வரையிலான அனைத்து முக்கிய பிராண்ட் ஸ்கூட்டர்களையும் ஹைபிரிட் மாடலாக மாற்ற ARAI & RTO ஒப்புதலை அந்நிறுவனம் பெற்றுள்ளது. இந்த மாற்றப்பட்ட வாகனங்கள் கடந்த 18 மாதங்களில் மொத்தமாக 1.5 முதல் 2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வரை கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
தற்போது இந்நிறுவனம ஹோண்டா ஆக்டிவா, டியோ, ஹீரோ மேஸ்ட்ரோ, ப்ளஷர், டி.வி.எஸ். வீகோ, ஜூபிடர் மற்றும் சுசுகி ஆக்சஸ் உள்பட ஏழு முக்கிய பிராண்டு ஸ்கூட்டர்களை ஹைபிரிடாக மாற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது. இவை அனைத்தும் 2012 மற்றும் அதற்கு பிறகு பதிவு செய்யப்பட்டவை. மோட்டார்சைக்கிள்களின் மாற்றம் தற்போது சோதனை முயற்சியில் உள்ளது இந்த ஆண்டின் இறுதியில் அதனை அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
கிரீன் டைகர் மொபிலிட்டி நிறுவனம் ஸ்கூட்டர்களை ஹைபிரிட் மாடலாக மாற்றுவதற்கு பேட்டரி, சார்ஜர் மற்றும் மாற்றுவதற்கான செலவினம் என மொத்தம் ரூ.55,000 கட்டணம் வசூலிக்கிறது. இதுதவிர வாகனம் ஓட்டுபவர் ஸ்மார்ட் சிஸ்டத்தை விரும்பினால் கூடுதலாக ரூ.5,000 செலவாகும்.
ஸ்மார்ட் சிஸ்டத்தை வாகனத்தை பயன்படுத்துவதால், விபத்து எச்சரிக்கைகள், வாகன இயலாமை அறிவிப்புகள் உள்பட விரிவான டெலிமாடிக்ஸ் அமைப்புகான அணுகலை பெறலாம். மேலும் உங்கள் மொபைல் போனில் உங்கள் பெட்ரோல் மற்றும் மின்சார இயக்கம் தொடர்பான அனைத்து தரவையும் நீங்கள் வசதியாக அணுகலாம் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் மெதுவாக வளர்ச்சி கண்டு வருகிறது, இந்த மாதத்தில் மட்டும் 30 வாகனங்களை ஹைபிரிட் மாடலாக மாற்ற ஆர்டர் பெற்றுள்ளது.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications