பெங்களூரில் புகழ்பெற்ற ராமேஸ்வரம் கபே இப்போது ஹைதராபாத்தில் புதிய கிளையை விரித்துள்ளது. ராமேஸ்வரம் கபே இணை நிறுவனர்கள் ராகவேந்திர ராவ், திவ்யா ராகவேந்திர ராவ் தங்களது இந்த புதிய கடை பெங்களூர் கடைகளை போலவே மிகவும் சிறப்பாக செயல்படும் தீவிரமாக நம்புகின்றனர்.
இன்றைய வர்த்தக துறையில் ஹோட்டல் வைத்து வெற்றி பெறுவது என்பது பெரும் சவால் நிறைந்தது. இந்த நிலையில் வர்த்தகத்தை துவங்கி 3 வருடத்திலேயே பெங்களூரில் 4 -5 கிளைகள் மூலம் 50 கோடிக்கு பிஸ்னஸ் செய்வது மட்டும் அல்லாமல் இணையத்தில் பெரிய அளவில் டிரெண்டாகியுள்ளது.

பெங்களூரில் இந்திரா நகர், ஜேபி நகர், புரூக்ஃபீல்டு, ராஜாஜி நகரில் நான்கு கிளைகளை வைத்துள்ள ராமேஸ்வரம் கபே இந்தியாவின் சிலிக்கான் வேலியான பெங்களூரில் மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்றுள்ளது. 2021 ஆம் ஆண்டில் இரண்டு கிளைகளுடன் ராமேஸ்வரம் கபே தொடங்கப்பட்டது.
இதைச் செய்வதற்கு பத்தாண்டுகளாக யோசித்ததாக ராகவேந்திர ராவும் திவ்யா ராகவேந்திர ராவும் தெரிவித்தனர். கடந்த ஆண்டில் ராமேஸ்வரம் கபே பல கோடிகளை சம்பாதித்துள்ளது. மாஸ்டர் செப் ஆஸ்திரேலியா டிவி ஷோவின் முன்னாள் நடுவர் காரி மிச்சிகன் ராமேஸ்வரம் கபேக்கு வந்து காபி அருந்திவிட்டு மனமாற பாராட்டி விட்டுச் சென்றுள்ளார்.
10க்கு 10 ரூம்.. மாதம் 4.5 கோடி வருமானம்.. பெங்களூரை அசத்தும் Rameshwaram Cafe..!
ராமேஸ்வரம் கஃபே ஜனவரி 19, 2024 அன்று மாதப்பூரில் உள்ள ஹைதராபாத் டெக் சென்டரில் வாடிக்கையாளர்களுக்காகத் திறக்கப்படும். இணை நிறுவனர்களான ராகவேந்திர ராவ் மற்றும் திவ்யா ராகவேந்திர ராவ், ராமேஸ்வரம் கஃபே வருவாய், தோற்றம் மற்றும் விற்பனை நிலையங்கள் குறித்து பேசினர்.
ராமேஸ்வரம் கஃபே அதன் பாரம்பரிய தென்னிந்திய காலை உணவுகளான நெய் பொடி இட்லி, மசாலா தோசைக்கு பெயர் பெற்றது.
இந்த உணவகம் மாதத்துக்கு ₹4.5 கோடி வருமானம் ஈட்டுவதாகவும், ஆண்டுக்கு ₹50 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.
இந்திராநகரில் வசிப்பவர்கள் பலமுறை புகார் அளித்ததைத் தொடர்ந்து பிபிஎம்பி ராமேஸ்வரம் கபேயை மூடுவதற்கான அறிவிப்பை வெளியிட்டது. அனைத்து புகார்களிலும், தடைசெய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தியதற்காக பெங்களூரு சிவில் அமைப்பு உணவகத்தை தற்காலிகமாக மூடியது.
ராமேஸ்வரம் கபேயின் ஸ்பெஷல் அயிட்டங்கள் என்றால் நெய் இட்லி. விலை: 84 ரூபாய், வெண்ணெய் இட்லி. விலை: 84 ரூபாய், தயிர் வடை, மசாலா வடை, காஞ்சிபுரம் இட்லி, மினி வடை சாம்பார் டிப், ரவா இட்லி (3 பீஸ்கள்).
ராமேஸ்வரம் அதன் அசைவ உணவுகளுக்கு பிரபலமானது. வழக்கமான பிரியாணி மற்றும் பரோட்டா தவிர, ஏராளமான சூப் ஸ்டால்கள் மட்டன் மற்றும் சிக்கன் உணவுகளை வழங்குகின்றன. மட்டன் தலைக்கறி மற்றும் ஆட்டுக்கால் சூப் முதல் குடல் கறி வரை இந்த ஸ்டால்கள் அசைவ பிரியர்களுக்கு அளிக்கிறது. ஆனா ராமேஸ்வரம் கபே சுத்த சைவம்.


Click it and Unblock the Notifications