இன்றைய விலைவாசிக்கு ஓரு வேலைக்கு போனால் பத்தாது, குறைந்தது 2-3 வேலைக்கு போக வேண்டியது காட்டாயமாக உள்ளது, இப்போது தான் குடும்ப செலவுகளை சமாளிக்க முடியும். ஆனால் இது அனைவருக்கும் சாத்தியமில்லை என்பதால் பார்ட் டைம்-ல் வேலைகளை செய்வது பலரும் வழக்கமாக கொண்டு உள்ளனர்.
இப்படி பெங்களூரை சேர்ந்த ஒருவர் ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார், 30 வயதான இவர் கூடுதல் வருமானத்திற்காக பார்ட் டைம்-ல் வேலை செய்யலாம் என ஆசைப்பட்டு இப்பது ஆன்லைன் மோசடியாளர்களிடம் சுமார் 95 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். இந்த செய்து ஓட்டுமொத்த ஐடி ஊழியர்களுக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பார்ட் டைம்-ல் வேலை என்ற பெயரில் மோசடியாளர்கள் அதிக லாபம், போட்ட பணம் டபுளாகும், சின்ன சின்ன வேலையை செய்தால் 4 மடங்கு அதிக லாபம் கிடைக்கும் என ஏமாற்றியுள்ளனர். வேகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவில் பார்ட்டைம் வேலை என்ற பெயரில் சுற்றும் முதலீட்டு மோசடி வலையில் மாட்டிக்கொண்டார்.
இந்த மோசடி திட்டதத்தில் சேர்ந்த உடன் அவருக்காக ஒரு டிஜிட்டல் கணக்கு, வாலெட் ஆகியவற்றை திறக்கப்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு டெலிகிராம் குரூப்-க்குள் இவரை சேர்த்துள்ளனர். இந்த டெலிகாரம் குரூப்-ல் பலரும் அடுத்தடுத்து தாங்கள் பெற்ற லாபத்தை பதிவிட அவரும் நம்பியுள்ளார்.
இதை முழுவதுமாக நம்பிய இந்த பெங்களூர் ஐடி ஊழியர் 15 நாளில் தன்னுடைய சேமிப்பு, கடன் வாங்கி, நண்பர்களிடம் கடன் பெற்று சுமார் 95 லட்சம் ரூபாயை போலியாக உருவாக்கப்பட்ட டிஜிட்டல் வேலெட்டில் டெபாசிட் செய்துள்ளார்.
பெங்களூர் பெலந்தூர் பகுதியில் இருக்கும் ஐடி நிறுவனத்தில் தினமும் 12 மணிநேரம் பணியாற்றிய பின்பு எஞ்சியிருக்கும் நேரத்தில் இந்த பார்ட்டைம் வேலையில் ஈடுப்பட்டு உள்ளார். இந்த முதலீட்டில் தளத்தில் பணத்தை சம்பாதிக்க பொருட்களை கண்டுப்பிடிப்பது, சிறிய கணக்குகளுக்கு பதில் கூறவது என சிறுபிள்ளை தனமான வேலைகளை செய்தால் போதுமானது.
இதில் முதல்கட்டமாக 500 ரூபாய் பெற்ற அவர் கடுமையான பணிகளை செய்தால் முதலீடு செய்யும் பணம் 4 மடங்கு வரையில் உயரும் என நம்பியதால் தினமும் பணத்தை முதலீடு செய்ய துவங்கினார். இப்படி படிப்படியாக அவரை ஏமாற்ற துவங்கிய இந்த மோசடி கும்பல் கடைசியாக 1 கோடி ரூபாய் வெல்லும் வாய்ப்பை கொடுத்தது.
இதற்கான பணத்தை பல்வேறு வங்கி கணக்கில் டெபாசிட் செய்ய கூறப்பட்ட போது, அதையும் நம்பி இதில் முதலீடு செய்தார். கடைசியிஸல் 95 லட்சம் பணத்தை இழந்துள்ளதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications