2023 ஆம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை இந்திய ரிசர்வ் வங்கி (RBI) வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்தில், வழக்கமான வார இறுதி நாட்களைத் தவிர, ரத யாத்திரை, கர்ச்சி பூஜை, ஈத் உல் அஷா போன்ற பல்வேறு விழாக்கள், பண்டிகை காரணமாக நாட்டில் பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்பட உள்ளது.
இன்றைய டிஜிட்டல் வர்த்தக சேவை காலத்தில் வங்கிகளுக்கு செல்வதற்கான தேவையும், அவசியமும் பெரிய அளவில் குறைந்துள்ளது. ஆனால் வீட்டுக் கடன், வாகன கடன், பிஸ்னஸ் லோன், தங்க நகை கடன், கல்வி கடன், பெரிய தொகையை வித்டிரா செய்யும் போது என பலவற்றுக்கு வங்கிகளுக்கு செல்வது அவசியமாகியுள்ளது.

இந்தியாவில் வங்கி விடுமுறை நாட்கை ரிசர்வ் வங்கி தான் முடிவு செய்கிறது. ரிசர்வ் வங்கி ஒவ்வொரு ஆண்டும் வங்கி விடுமுறை நாட்களின் பட்டியலை வெளியிடுகிறது, இதில் தேசிய விடுமுறைகள், அரசு விடுமுறைகள் மற்றும் மதம் சார்ந்த பண்டிகை விடுமுறைகள் ஆகியவை அடங்கும்.
ரிசர்வ் வங்கியின் அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள அனைத்து விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என கட்டாயமாக கடைப்படிக்க வேண்டிய விஷயம். இதேபோல் ஒரு குறிப்பிட்ட மாநிலத்தைப் பொறுத்து சில பிராந்திய விடுமுறைகளுடன் அனைத்து பொது விடுமுறை நாட்களிலும் வங்கிகள் மூடப்படும்.
இதில் பிராந்திய விடுமுறைகள் அந்தந்த மாநில அரசாங்கங்களால் தீர்மானிக்கப்படுகின்றது. பொதுவாக வங்கி விடுமுறை நாட்களை 3 பிரிவுகளில் அறிவிக்கப்படுகிறது Holiday under Negotiable Instruments Act, Real Time Gross Settlement Holiday, Banks Closing of Accounts ஆகியவை கீழ் அறிவிக்கபட உள்ளது.
அந்த வகையில் ஜூன் மாதம் இந்திய வங்கிகளின் மொத்த விடுமுறை:
- ஜூன் 4, 2023: ஞாயிறு.
- ஜூன் 10, 2023: இரண்டாவது சனிக்கிழமை.
- ஜூன் 11, 2023: ஞாயிறு
- ஜூன் 15, 2023: ராஜ சங்கராந்தியை முன்னிட்டு மிசோரம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் மூடப்படும்.
- ஜூன் 18, 2023: ஞாயிறு.
- ஜூன் 20, 2023: ரத யாத்திரை ஒடிசாவில் வங்கிகள் மூடப்படுவதற்கு வழிவகுக்கும்.
- ஜூன் 24, 2023: நான்காவது சனிக்கிழமை
- ஜூன் 25, 2023: ஞாயிறு
- ஜூன் 26, 2023: கர்ச்சி பூஜையால் திரிபுராவில் வங்கிகள் மூடப்படும்.
- ஜூன் 28, 2023: ஈத் உல் அஸ்ஹா கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீரில் வங்கிகள் மூடப்படகிறது.
- ஜூன் 29, 2023: ஈத் உல் அஷாவை முன்னிட்டு, பிற மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும்.
- ஜூன் 30, 2023: Reema Eid Ul Azha மிசோரம் மற்றும் ஒடிசாவில் வங்கிகள் மூடப்படும்.
2000 ரூபாய் நோட்டு: துபாய், சவுதியில் இருக்கும் இந்தியர்கள் கண்ணீர்..!
தமிழ்நாட்டை பொறுத்த வரையில் இரண்டாவது சனிக்கிழமை, ஞாயிறுக்கிழமை நாட்களில் மட்டுமே விடுமுறை, மற்ற நாட்களில் இயங்கும். பிற மாநிலத்தில் இருப்பவர்கள் இந்த விடுமுறை நாட்களை திட்டமிட்டு வங்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.


Click it and Unblock the Notifications