இந்திய வங்கித்துறை பல பிரிவுகளில் வேகமாக வளர்ச்சி அடைவது மட்டும் அல்லாமல் நாட்டில் அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து பகுதிகளில் இருக்கும் மக்களுக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும் என்பதை முக்கிய இலக்காக கொண்டு உள்ளது இந்திய ரிசர்வ் வங்கியும், மத்திய நிதியமைச்சகமும்.
இதன் அடிப்படையில் பல டிஜிட்டல் சேவைகள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளதால் நாட்டின் பொருளாதாரம், வர்த்தக வளர்ச்சிக்கு எளிய நிதி பரிமாற்ற சேவைகள் பெரிய அளவில் பலன் கொடுத்துள்ளது. ஆனால் இதேவேளையில் வங்கித்துறையில் மோசடிகளும் அதிகரித்துள்ளது என்பது தான் அதிர்ச்சி அளிக்கும் விஷயமாக மாறியுள்ளது. வங்கித்துறையில் மோசடி குறித்து தகவலை ஆர்பிஐ தனது வருடாந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தனது வருடாந்திர அறிக்கையில் இந்திய வங்கித்துறையில் 2022-23 ஆம் நிதியாண்டில் பதிவான மோசடிகள் அதாவது ப்ராடு சம்பவங்கள் மட்டும் 13,530. இது கடந்த ஆண்டு எண்ணிக்கையை காட்டிலும் மிகவும் அதிகம் என்றாலும், ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் மோசடியில் பாதிக்கப்பட்ட தொகையின் அளவு பாதியாக குறைந்து 30,252 கோடி ரூபாயாக உள்ளது.
2022-23 ஆம் ஆண்டு பதிவான மோசடிகளில் பெரும்பாலானவை டிஜிட்டல் பேமெண்ட் சார்ந்து உள்ளது முக்கியமான தகவல், இதில் கார்டு மற்றும் இண்டர்நெட் வாயிலாக செய்யப்படும் பேமெண்ட்கள் அடக்கம். இதேபோல் அதிக தொகை இழப்பு கடன் பிரிவில் பதிவாகியுள்ளது.
2021-22 ஆம் நிதியாண்டில் 9097 மோசடிகளும், 59,819 கோடி ரூபாய் அளவிலான தொகையும் பாதிக்கப்பட்டது. இதேபோல் 2020-21 ஆம் நிதியாண்டில் 7338 மோசடிகளில் 1,31,389 கோடி ரூபாய் பாதிக்கப்ட்டது. 2022-23 ஆம் நிதியாண்டில் 13,530 மோசடிகளில் 30,252 கோடி ரூபாய் மதிப்பிலான தொகை பாதிக்கப்பட்டு உள்ளது.
கடந்த 3 வருடம் வங்கித்துறையில் நடந்த மோசடிகளை ஆய்வு செய்து பார்த்த ஆர்பிஐ, தனியார் வங்கிகளில் அதிக எண்ணிக்கையிலான மோசடியும், பொதுத்துறை வங்கிகளில் அதிகப்படியான தொகை மோசடி மூலம் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலை 2022-23 ஆம் நிதியாண்டிலும் தொடர்கிறது என்பது தான் முக்கியமான விஷயம்.
இதனால் வங்கி சேவைகளை பயன்படுத்தும் போது மிகவும் உஷாராக செயல்படுங்கள், உங்களின் பாஸ்வோர்டு, ஓடிபி, டெபிட் கார்டு மற்றும் கிரெடிட் கார்டு-ன் நம்பர், CVV எண், பின் நம்பர் போன்ற எந்த தகவலையும் மூன்றாம் நபரிடம் தெரியப்படுத்த வேண்டாம். மொபைல் போனில் இந்த ஆஃபர், அந்த ஆஃபர், பரிசு விழுந்துள்ளது என வாட்ஸ்அப், பேஸ்புக், மெசேஜ் வாயிலாக லிங்க் எதேனும் வந்தால் தப்பித்தவறி கூட தொட்டுவிட வேண்டும்.
இதைவிட முக்கியமாக வீட்டில் இருந்து பணியாற்றினால் மாதம் 50000, தினமும் 1000 ரூபாய், 3 மணி நேரத்திற்கு 1000 ரூபாய் என வேலைவாய்ப்பு குறித்து விளம்பரம் வந்தால் கூடுதல் உஷாராக இருங்கள். தற்போது இதுதான் முக்கிய மோசடி விஷயமாக மாறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications