அண்மைக்காலமாக நூதன முறையில் வாட்ஸ் அப், பேஸ்புக் மெசஞ்சர், இஸ்டாகிராம் ஆகிய செயலிகளில் குறுந்தகவல் அனுப்பி பணம் கேட்டு மோசடி செய்வது அதிகரித்து வருகிறது.
நம்முடைய நண்பர்கள் பெயரில் போலி கணக்கை தொடங்கி அவர்கள் பெயரில் நமக்கு குறுந்தகவல் அனுப்பி அவசர பண தேவை இருப்பதாக கூறி பணம் கேட்கும் மோசடிகளை நாம் கேள்விபட்டிருப்போம்.

இப்போது மோசடியாளர்கள் ஒரு படி மேலே சென்று இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தல தோனியின் பெயரில் பணம் கேட்டு மோசடி செய்கின்றனர்.
இது தொடர்பாக மத்திய டெலிகாம் துறை எக்ஸ் தள பக்கத்தில் ஒரு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் மகேந்திர சிங் தோனியின் பெயரில் இன்ஸ்டாகிராமில் பணம் கேட்டு மோசடி நடைபெறுவதை குறிப்பிடும் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது.
மக்களே எச்சரிக்கையாக இருங்கள் எம்.எஸ்.தோனியின் பெயரின் உங்களிடம் பணம் கேட்டு ஏதேனும் குறுந்தகவல் வந்தால் தயவுசெய்து அதனை நம்பாதீர்கள் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராமில் தோனியின் பெயர் மற்றும் படத்தை பயன்படுத்தி ”நான் எம்.எஸ்.தோனி , உங்களுக்கு என்னுடைய தனிப்பட்ட கணக்கில் இருந்து செய்தி அனுப்புகிறேன் .நான் ராஞ்சியில் புறநகர் பகுதியில் இருக்கிறேன். என்னுடைய வாலட்டை மறந்து வைத்து விட்டு இங்கே வந்துவிட்டேன். எனக்கு 600 ரூபாய் அனுப்ப முடியுமா நான் வீட்டிற்கு சென்றதும் திருப்பி அனுப்புகிறேன்” என தோனி கேட்பது போல மோசடியாளர்கள் பலருக்கு மெசேஜ் அனுப்பி ஏமாற்றி வருகின்றனர். மக்கள் இத்தகைய மோசடியாளர்களிடமிருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் அதே வேளையில் டிஜிட்டல் முறையில் மக்களை ஏமாற்றும் போக்கும் அதிகரித்து வருகிறது. நீண்ட காலம் பயன்படுத்தாமல் இருக்கும் முகநூல் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தை தேர்வு செய்து அதில் உள்ள படங்களை பயன்படுத்தி ஒரு கணக்கை உருவாக்கி ,அவர்களின் நண்பர்களிடம் அவசர தேவை என கூறி பணம் கேட்பது ஒரு வகையான மோசடி.
அதே போல வெளிநாட்டில் இருந்து கொரியர் வந்திருப்பதாகவும் அதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாகவும் கூறி அச்சத்தை ஏற்படுத்தி பணம் பறிப்பது மற்றொரு வகையான மோசடி. ஏடிஎம் கார்டு பிளாக் செய்யப்பட்டு விடும், கணக்கு முடங்கிவிடும் என்று கூறி ஓடிபி , வங்கி கணக்கு எண் ஆகியவற்றை பெற்று மோசடி செய்வது என பல வழிகளில் மோசடி நடைபெறுவதால் மக்கள் தான் தங்களின் பணத்தை பாதுகாத்து கொள்ள வேண்டும்.
Story written by: Devika
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications