பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மக்கள் குடி தண்ணீர் கிடைக்காமலும், அடுக்குமாடி குடியிருப்புகளில் தங்கி இருப்பவர்கள் லாரிகளில் தண்ணீர் கிடைக்காமலும் பெரும் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் குடிநீரை வீணாக்குபவர்களுக்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் அபராதம் விதித்து வருகிறது.
காவிரி தண்ணீரை கார் கழுவுவது , தோட்டங்களுக்கு விடுவது போன்றவற்றுக்கு பயன்படுத்தியதாக 22 குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 அபராதம் விதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பெங்களூரு நீர் வழங்கல் வாரியம் கிட்டதட்ட ரூ.1.10 லட்சத்தை அபராதமாக வசூலித்துள்ளது என டெக்கன் ஹெரால்ட் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு குடிக்கவே தண்ணீர் இல்லாத நிலையில் சிலர் கார்களை சுத்தப்படுத்துவதற்கும், செடிகளுக்கு ஊற்றுவதற்கும் , கட்டுமானப் பணிகளுக்கு பயன்படுத்தி வருவதாக பெங்களூரு நீர் வழங்கல் வாரியத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்துள்ளன.
குறிப்பாக மாநகரின் தெற்கு மண்டலத்தில் கடுமையான தண்ணீர் தட்டுப்பாடு நிலவும் சூழலில் தண்ணீரை வீணாக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஏற்கனவே மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தது.
தண்ணீர் பிரச்னை நிலவுவதால் ஹோலி பண்டிகை கொண்டாட்டங்களில் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது போன்ற விளையாட்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.முன்னதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பெங்களூருவில் ஒரு நாளைக்கு 2,600 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும் நிலையில் தற்போது 500 மில்லியன் லிட்டர் தண்ணீருக்கு தட்டுப்பாடு இருந்து வருவதாகவும், மக்களின் அன்றாட தண்ணீர் தேவைகளை குறிப்பாக குடிநீர் தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தனது அரசு எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
பெங்களூருக்கு ஒரு நாளைக்கு தேவையான நீரில் காவிரி நதியிலிருந்து 1470 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைப்பதாகவும் போர்வெல்களில் இருந்து 650 மில்லியன் லிட்டர் தண்ணீர் கிடைப்பதாகவும் கூறியுள்ளார். பெங்களூருவில் உள்ள 14,000 போர்வெல்களில் 690 போர்வெல்கள் வற்றி விட்டன. அதுமட்டுமின்றி நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு இதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
குடிநீர் தட்டுப்பாடு நிலவி பெங்களூருவில் மக்கள் காவிரி நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக வாகனங்களை கழுவுவது, கட்டுமானம் மற்றும் பொழுதுபோக்கு நோக்கங்களுக்காக குடிநீரை பயன்படுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என பெங்களூரு நீர் வழங்கல் வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மீறுபவர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
Story Written by: Devika
More From GoodReturns

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications