சோமேட்டோ நிறுவனம் 2024-ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டில் இந்தியர்கள் எவ்வாறு உணவு ஆர்டர் செய்தனர்? என்பது போன்ற சுவாரஸ்யமான விவரங்களை இதை வைத்து நாம் தெரிந்து கொள்ளலாம். இந்த ஆண்டும் பிரியாணி தான் இந்தியாவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவாக இருக்கிறது. 2024-ஆம் ஆண்டு சோமேட்டோ நிறுவனம் 9 கோடிக்கும் அதிகமான பிரியாணி ஆர்டர்களை வழங்கியுள்ளது. இதில் ஒவ்வொரு நொடிக்கும் 3-க்கும் மேற்பட்ட பிரியாணி ஆர்டர்கள் பெறப்பட்டுள்ளன.
இந்த ஆண்டில் இந்தியர்கள் என்னென்ன உணவை ஆர்டர் செய்தனர் என்ற விவரங்களை வழங்கியதோடு உணவு ஆர்டர்கள் குறித்த புள்ளி விவரங்களையும் சோமேட்டோ வெளியிட்டிருக்கிறது. சுவாரஸ்யமான தகவல் ஒன்று டைனிங் அவுட் பிரிவிலிருந்து வெளியாகியுள்ளது. பெங்களூரு உணவுப் பிரியர் ஒருவர் ஒரு உணவகத்திற்கு வருகை தந்து பெரும் தொகையை செலவு செய்திருக்கிறார். சோமேட்டோ நிறுவனத்தின்படி பெயரிடப்படாத இந்த உணவுப் பிரியர் ஒரே ஒரு பில்லுக்கு ரூ.5 லட்சத்திற்கும் மேல் செலவு செய்திருக்கிறார். இன்னும் துல்லியமாக சொல்ல வேண்டுமானால் 5,13,733 ரூபாயை செலவிட்டுள்ளார்.

2024-ஆம் ஆண்டின் ஜனவரி 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 6-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் இந்தியர்கள் சோமேட்டோ மூலம் 1 கோடிக்கும் அதிகமான டேபிள்களை முன் பதிவு செய்துள்ளனர். இதில் தந்தையர் தினத்தன்று 84,866 பேர் தங்கள் தந்தையை ஒரு நல்ல மதிய உணவு அல்லது இரவு உணவிற்காக அழைத்துச் செல்ல டேபிள்களை முன்பதிவு செய்தனர்.
பட்ஜெட்டுக்கு ஏற்ற உணவு வகைகளை வழங்குவதில் முதலிடம் பெற்றது டெல்லி. டெல்லி வாசிகள் சோமேட்டோ மூலம் உணவு கட்டணத்தில் 195 கோடியை மிச்சப்படுத்தியுள்ளனர். பெங்களூரு மற்றும் மும்பை வாசிகள் ஏறக்குறைய முதல் இடத்தை பிடித்துள்ளனர். சேமிப்பின் அடிப்படையில் பார்க்கும்போது டெல்லி தான் முதலிடம்.
மவுசு குறையாத பிரியாணி: அதிகம் ஆர்டர் செய்யப்பட்ட உணவு வகைகளில் தொடர்ந்து 9-வது ஆண்டாக பிரியாணி முன்னணி வகிக்கிறது. 2024-ஆம் ஆண்டில் 9,13,99,110 ப்ளேட்கள் பிரியாணி ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. பிரியாணிக்கு அடுத்தபடியாக சோமேட்டோவில் அதிகம் ஆர்டர் செய்யப்பட்டது பீட்சாக்கள். இந்த ஆண்டு சோமேட்டோ 5,84,46,908 பீட்சாக்களை வழங்கியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் 74,32,856 காபி ஆர்டர்களுடன் ஒப்பிடும்போது இந்தியர்கள் 77,76,725 டீ ஆர்டர்களை செய்துள்ளனர்.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

ஐடி நிறுவன பெண் ஊழியர்களே எச்சரிக்கை!! டிசிஎஸ் நாசிக் அலுவலக சம்பவம் கற்று தரும் பாடம் இது தான்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications