ஐடி நகரமான பெங்களூரில் 1943-ம் ஆண்டு முதல் இயங்கி வரும் பிரபலமான வித்யார்த்தி பவன் உணவகம் தற்போது மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது. மத்திய கிழக்கில் ஈரான்-அமெரிக்கா-இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்ததால் இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய எரிவுாயு சப்ளை தடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசு சாமானிய மக்களுக்கு எல்பிஜி சிலிண்டர் விநியோகத்தை சீராக கிடைக்க செய்ய வேண்டும் என்பதற்காக வணிக் சிலிண்டர்கள் விநியோகத்தையும், ரீஃபில் பணிகளையும் நிறுத்தி வைத்துள்ளது. இதன் மூலம் ஹோட்டல், தொழிற்சாலைகளுக்கு எல்பிஜி சப்ளை நிறுத்தப்பட்டு உள்ளது.

இதனால் இந்தியா முழுவதும் தற்போது வணிக எல்பிஜி சிலிண்டர் விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக வித்யார்த்தி பவன் உணவகத்தில் உள்ள 4 தோசை தவாக்களில் 2 ஏற்கனவே அணைக்கப்பட்டுள்ளன. இன்று புதிய எல்பிஜி சப்ளை வராவிட்டால், நாளை மதியத்திற்குள் உணவகம் முழுமையாக மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
வித்யார்த்தி பவன் பெங்களூரு மக்களுக்கு வெறும் உணவகம் மட்டுமல்ல - அது ஒரு எமோஷன். தலைமுறைகளாக இங்கு வந்து மசாலா தோசை சாப்பிட்டு மகிழ்ந்தவர்கள் இப்போது கவலையில் உள்ளனர். மேலும் பெங்களூர்-க்கு வரும் பிற மாநிலத்தவர்கள் கட்டாயம் சாப்பிட வேண்டும் என விரும்பும் ஒரு இடம் வித்யார்த்தி பவன் ஹோட்டல்.
உணவகத்தின் நீண்ட வரலாறு மற்றும் தரமான உணவு காரணமாக இது பெங்களூரின் அடையாளமாகவே திகழ்கிறது. இந்த எல்பிஜி நெருக்கடி உணவகத்தை மட்டுமல்ல, நகரின் உணவு விநியோக சந்தையை மொத்தமாக பாதிக்கும் என கணிக்கப்பட்டு உள்ளது. அதிலும் குறிப்பாக ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்யும் ஹோட்டல்கள், டெலிவரி பணிகள், வர்த்தகம் என அனைத்தும் மொத்தமாக பாதிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதுக்குறித்து பெங்களூர் ஹோட்டல் அசோசியேஷன் நகரில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவகங்கள் எல்பிஜி பற்றாக்குறையால் மார்ச் 10ஆம் தேதி முதல் மூடப்படும் என்று தெரிவித்தது. "எல்பிஜி விநியோகம் நின்றுவிட்டது. நாளை முதல் ஹோட்டல்கள் மூடப்படும்" என்று அசோசியேஷன் கூறியது. மாணவர்கள், மருத்துவ ஊழியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படும் என்றும், மத்திய அரசு தலையிட்டு எல்பிஜி விநியோகத்தை மீட்டெடுக்க வேண்டும் என்றும் கோரியது.
மேலும் கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஏற்கனவே எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வை விமர்சித்து இருந்தார். வணிக சிலிண்டர் 115 மற்றும் வீட்டு சிலிண்டர் 60 ரூபாய் வரையில் உயர்ந்துள்ளது மிகவும் அதிகம் என்று அவர் கூறினார். தற்போதை எல்பிஜி பற்றாக்குறை நிலைமை தொடர்ந்தால் உணவு தொழில் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்ற அச்சம் நிலவுகிறது.
ஈரான் போர் காரணமாக ஹார்முஸ் வழி எல்பிஜி இறக்குமதி பெரிதும் குறைந்துள்ளது. இதனால் பெங்களூருவில் வித்யார்த்தி பவன் போன்ற பிரபல உணவகங்கள் மூட வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது, பல ஹோட்டல்கள் கிடைசி சிலிண்டர் காலியாகும் வரையில் சேவை தொடரும் எனவும் தெரிவித்து வருகின்றன.


Click it and Unblock the Notifications