பெங்களூரு: இந்தியாவின் ஸ்டார்ட் அப் தலைநகரமாகவும் ஐடி நகரமாகவும் பெங்களூரு திகழ்கிறது. வேலை நிமித்தமாக லட்சக்கணக்கான வெளிமாநிலத்தவர்கள் பெங்களூருவில் தங்குகின்றனர். இவர்களுக்கு பிஜி எனப்படும் தங்கும் விடுதிகள் சௌகரியமாக இருக்கின்றன. இப்படி பிஜி-க்களில் தங்கி இருப்பவர்களுக்கு புதிய பிரச்சினை எழுந்துள்ளது.
பெங்களூருவில் ஏராளமான ஐடி நிறுவனங்களும் ஜிசிசி மையங்களும் செயல்படுகின்றன. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த இளைஞர்களும் லட்சக்கணக்கில் பெங்களூருவில் தங்கி இருந்து வேலைக்கு செல்கின்றனர். இவ்வாறு வரக்கூடிய வெளிமாநில இளைஞர்களுக்கும் பிஜிக்கள் தான் முக்கியமான தங்குமிடங்களாக செயல்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது பெங்களுருவை சேர்ந்த பிஜி உரிமையாளர்கள் ஆன்லைன் முறையில் வாடகை செலுத்தினால் ஏற்றுக் கொள்ள மாட்டோம் ரொக்கமாக மட்டுமே பணம் செலுத்த வேண்டும் எனக் கூறுகிறார்களாம்.

யுபிஐ பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் பெரும்பாலானவர்கள் பணத்தை கையில் எடுத்து பயன்படுத்துவதே கிடையாது. ஆனால் பெங்களூரு பிஜி உரிமையாளர்கள் ரொக்கமாகவே வாடகை வழங்க வேண்டும், ஒருவேளை ஆன்லைனில் பணம் செலுத்துகிறீர்கள் என்றால் அதற்கு நீங்கள் 12 சதவீதம் ஜிஎஸ்டியும் சேர்த்து செலுத்த வேண்டும் என கூறுகிறார்களாம் .
ரெடிடி தளத்தில் ஒரு இளைஞர் வெளியிட்டுள்ள பதிவில் பெங்களூரில் செயல்படும் ஒரு பிஜி-இல் இவ்வாறு ஒரு நோட்டீஸ் ஓட்டப்பட்டு இருப்பதை நான் பார்த்தேன் என குறிப்பிட்டு இருக்கிறார். அந்த நோட்டீஸில் இங்கே தங்கி இருப்பவர்கள் அதற்கான வாடகையை ரொக்கமாக மட்டுமே வழங்க வேண்டும் ஆன்லைன் வாயிலாக செலுத்தினால் அதற்கு 12 சதவீதம் ஜிஎஸ்டி சேர்த்து செலுத்த வேண்டும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

ரெடிட் தளத்தில் வெளியான இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் பெங்களூருவில் பிஜி நடத்தி வரும் உரிமையாளர்களை கடுமையாக சாடி வருகின்றனர் . ஒரு சிலர் இந்த பிஜியில் தங்கி இருக்கக்கூடியவர்கள் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறுகின்றனர் . ஒரு சிலர் இதுபோன்ற நபர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவிக்கின்றனர் .
அரசுக்கு வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்காகவே இது போன்ற வேலைகளை பிஜி நடத்துபவர்கள் செய்கின்றனர் என குற்றம்சாட்டுகின்றனர். இந்தியாவில் சம்பளதாரர்களை தவிர மற்ற அனைவருமே வரி செலுத்தாமல் தப்பிப்பதற்கு வழி வைத்திருக்கின்றனர் என ஒரு நபர் சாடி இருக்கிறார். ஒரு நபர் இவ்வாறு நீங்கள் செய்தால் அந்த நபர் வரி செலுத்துவதிலிருந்து தப்பிப்பதற்கு தான் உதவுகிறீர்கள் எனவே அவரிடம் ஆன்லைனில் வாடகை செலுத்தி விட்டு அதற்கான ஜிஎஸ்டி ரசீதை கேளுங்கள் என அறிவுரை வழங்கி இருக்கிறார்.
ஆன்லைனில் பணம் செலுத்தினால் 12% ஜிஎஸ்டி என்றால் நிச்சயம் பணத்தை மிச்சப்படுத்த பலரும் ரொக்கமாக தான் வாடகையை செலுத்துவார்கள். இதன் மூலம் பிஜி நடத்துபவர்கள் அரசுக்கு தங்கள் வருமானத்தை குறைத்து காட்டும் வாய்ப்பு கிடைக்கிறது ஒரு நபர் கூறியுள்ளார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications