பெங்களூருவில் ஒரு சாதாரண ஆட்டோ பயணம் குறித்த பதிவு இன்று பலரின் இதயத்தைத் தொட்டுள்ளது என்றால் மிகையில்லை. சினேகா என்ற பெண் வழக்கம்போல ஆன்லைனில் ஆட்டோ புக் செய்தார். ஆனால் அன்று அவருக்கு வந்த ஆட்டோ மிகவும் ஸ்பெஷனாலது, அந்த ஆட்டோவை ஓட்டியது ஒரு பெண்.
தமிழ்நாட்டில் பல இடத்தில் பெண் ஆட்டோ ஓட்டுனர் இருந்தாலும், பெங்களூருக்கு இது புதியது. சென்னையில் ராஜி என்பவர் 20 வருடமாக ஆட்டோ ஓட்டி வருகிறார், இவரை மக்கள் ராஜி அக்கா என பெயருடன் சமுக வலைத்தளத்தில் அழைத்து வருகின்றனர். ஆனால் பெங்களூர்-க்கு இது புதியது என்பதால் சினேகா ஆச்சரியமடைந்தார்.

சினேகா தனது அலுவலகத்தின் வாசலில் அவரது நண்பர்கள் உடன் ஆட்டோவுக்காக காத்திருந்த நிலையில் பெண் ஆட்டோ ஓட்டுனரை பார்த்து அவர்களும் ஆச்சரியமடைந்தார். சினேகா இந்த பயணத்தில் ஓட்டுநருடன் பேச தொடங்கினார்.
இந்த பயணத்தில் சினேகா, பெண் ஓட்டுனர் பகிர்ந்துள்ள பல விஷயங்களை தனது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார். நம்ம யாத்ரி மூலம் சுமார் 40 நாட்கள் பயிற்சி பெற்ற பிறகு சாலையில் ஆட்டோ ஓட்ட வந்ததாகவும், பெட்ரோல், சிஎன்ஜி ஆட்டோக்களை காட்டிலும் எலக்ட்ரிக் ஆட்டோ ஓட்டுவது எளிதாகவும் வசதியாகவும் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பயணம் குறித்து சினேகா-வின் பதிவில் எலக்ட்ரிக் ஆட்டோவை தான் கடனில் வாங்கி ஓட்டி வருவதாகவும், இந்த கடனில் இதுவரை ரூ.2.5 லட்சம் திருப்பிச் செலுத்திவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் மாதம் சராசரியாக ரூ.45,000 வருமானம் கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பணி மூலம் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வது மட்டும் அல்லாமல் புதிய நம்பிக்கை கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் கோரமங்கலா பகுதியில் மட்டும் தற்போது சுமார் 300 பெண் ஆட்டோ ஓட்டுனர்கள் பணியாற்றி வருவதாகக் பெண் ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.
சாலையிலும் சரி, பயணிகளிடமும் சரி எந்த பிரச்சினையும் இல்லை என்றும், பெரும்பாலான பயணிகள் ஆதரவாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் சிக்னலில் நிற்கும் போது அவரை பார்த்து பல பெண்கள் டா டா காட்டவும் செய்கின்றனர் என மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் தெரிவித்துள்ளனர்.
சினேகாவின் இந்த பதிவு ஆன்லைனில் வைரலாகி இதுவரையில் 3 லட்சம் பேர் இப்பதிவை பார்த்துள்ளனர். இவருடைய பதிவுக்கு ஆதரவாக பதிவிட்டு வருகின்றனர். மேலும் கோரமங்கலா பகுதியில் இருக்கும் ஐடி ஊழியர்களுக்கும், பிற ஊழியர்களுக்கும் பெண்கள் ஓட்டும் ஆட்டோக்கள் ஃபேவரைட் ஆக மாறியுள்ளது மட்டும் அல்லாமல் பாதுகாப்பாகவும் உணர்கின்றனர்.


Click it and Unblock the Notifications